தோட்ட காணிகளை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு எதிராக சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்த தொழிலாளர்கள்
மலையக தோட்ட காணிகள் தனியாருக்கு விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தோட்டத்தொழிலாளர்கள் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.
அந்தவகையில் இன்று காலை முதல் தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ள உன்னஸ்கிரிய எயாபார்க் தோட்ட தொழிலாளர்கள் தற்போது உன்னஸ்கிரிய நகரில் மையங்களை சந்தியில் போரட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
”எமது கைகளால் பல லட்சம் கிலோ கொழுந்தினை எடுத்து இந்த நாட்டுக்கு வருமானத்தை கொடுத்துள்ளோம். எமது கைப்பட்டு வளர்ந்த இந்த தேயிலை செடிகளை நாம் சாகவிடமாட்டோம். எங்கள் உயிரே போனாலும் இந்த தோட்டத்தை துண்டாடி வேறு தேவைக்கு பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். எங்கள் வாழ்க்கை போராட்டத்திற்கு உங்கள் தோழமை தேவைப்படுகிறது” என அவர்களின் கோரிக்கையாக உள்ளது. -(3)





