செய்திகள்

யாழ் பல்கலை சட்டத்துறை மாணவர்கள் காணி மீட்பு போராட்டத்துக்கு ஆதரவாக பேரணி

தமது காணிகளை இராணுவத்தினர் வசமிருந்து விடுவிக்கும்பொருட்டு கடந்த ஒரு மாதமாக போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கோப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை மாணவர்கள் பேரணி ஒன்றை நடத்தியயுள்ளனர்.

யாழ் பல்கலைக் கழக வளாகத்தில் இந்த கண்டனப் பேரணியும் விழிப்புணர்வும் இன்று காலை 9.30 மணியளவில் நடைபெற்றது. “நாம் கேட்பது தனி நாடு அல்ல தாய் நிலமே” , ” வாழும் உரிமை எமக்கு உண்டு காணி உரிமை எமக்கு உண்டு சுய கௌரவம் எமக்கு உண்டு ” போன்ற பதாதைகளை அவர்கள் தாங்கியிருந்தனர்.

law students 1