மக்களுக்கு விவசாயம் தெரியும்யா
நெடுவாசல் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்துக்கொண்டு வருகின்றது. தமிழகம் முழுவதுமுள்ள் இளைஞர்கள் நெடுவாசல் நோக்கி வந்து தங்கள் ஆதரவை தருகின்றனர்.
இந்நிலையில் தொகுப்பாளர் கோபிநாத் நேரிலேயே சென்று தன் ஆதரவை தந்துள்ளார், மேலும், அவர் கூறுகையில் ’நெடுவாசலில் இருந்து 20 கிலோமீட்டரில் தான் என் ஊர் உள்ளது.
பலரும் மக்களுக்கு ஹைட்ரோ கார்பன் பற்றி தெரியாது, மீத்தேன் பற்றி தெரியாது, அதனால் தான் எதிர்க்கிறார்கள் என கூறுகின்றனர்.
மக்களுக்கு விவசாயம் தெரியும்யா, நம்மை விட அவர்களுக்கு மண்களை பற்றி நன்றாக தெரியும்.
ஒரு காலத்தில் தமிழகத்தில் நெற்களஞ்சியமாக திகழ்ந்து ஊர் இது, இதனால் என் முழு ஆதரவையும் போராடும் அனைத்து மக்களுக்கும் தருவேன்’ என கூறியுள்ளார்.
N5




