செய்திகள்

காணாமல் போனோர் அலுவலக சட்டத்தில் திருத்தம்

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை ஸ்தாபிக்கும் , நிர்வகிக்கும் மற்றும் பணிகளை நிறைவேற்றும் சட்டமூலத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ளது.
இதன்படி 2016 ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2016 , 14ஆம் இலக்க காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் (ஸ்தாபித்தல் , நிர்வகித்தல் மற்றும் பணிகளை நிறைவேற்றுதல்) சட்டமூலத்தில் 11ஆவது சரத்தில் (அ) பந்தியை நீக்கி அதில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி திருத்தப்பட்ட சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் மற்றும் அதனை தொடர்ந்து அனுமதிக்காக பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. -(3)