செய்திகள்

தவறான தீர்மானம் திருத்தப்பட்ட வரலாற்று நிகழ்வு

1818 ஆம் ஆண்டு ஊவா வெல்லஸ்ஸ பிரதேசத்தில் முதலாவது சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தால் காலனித்துவ ஆட்சியாளர்களால் மரணதண்டனை விதிக்கப்பட்டு மற்றும் நாடு கடத்தப்பட்ட வீரர்கள் தேசப்பற்றாளர்களாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான தேசிய வைபவம் நேற்று கண்டியில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க தலதா மாளிகையின் மகுல்மடுவ மண்டபத்தில் இடம்பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை அரசாங்க தகவல் திணைக்களம் மேற்கொண்டிருந்தது;
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இதில் 60 வீரர்களை தேசப்பற்றாளர்களாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி கைச்சாத்திட்டார். -(3)