செய்திகள்

அரசியலமைப்பா , அரசியலமைப்பு திருத்தமா? ஜனாதிபதி விரைவில் அறிவிப்பார்

புதிய அரசியலமைப்பா அல்லது அரசியலமைப்பில் திருத்தமா அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவில் வெளியிடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு தொடர்பாக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இதுவரை இறுதி தீர்மானங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அரசியலமைப்பு சபை இது பற்ற கூடி தீர்மானமெடுக்கும் அத்துடன் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துக்களை கூறலாம் அவற்றை அரசாங்கத்தின் நிலைப்பாடாக எடுத்துக்கொள்ள முடியாது. ஜனாதிபதியே அரசாங்கத்தின் தலைவன் அதன்படி அவரே உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை அறிவிப்பார். இதன்படி விரைவில் அந்த அறிவிப்பை வெளியிடவுள்ளார். என அவர் தெரிவித்துள்ளார். -(3)