செய்திகள்

அமைச்சர்களை பதவி விலகுமாறு கோரிக்கை

சிறைச்சாலைகள் பஸ்கள் மீதான துப்பாக்கி சூட்டு சம்பவங்களை தொடர்ந்து சிறைச்சாலைகள் அமைச்சர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோரை அந்த பதவியிலிருந்து விலகுமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.
லங்கா சமசாஜ கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் வத்தேகம சமித தேரரே இவ்வாறாக கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று இவர்கள் இருவரும் பதவி விலக வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். -(3)