செய்திகள்

சிறைச்சாலை பஸ் மீதான சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் வெளிநாட்டுக்கு தப்பிக்க முயற்சி

களுத்துறை சிறைச்சாலை பஸ் மீதான துப்பாக்கி சூட்டு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி அவர்கள் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முடியாதவகையில் விமான நிலையத்தில் விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடுவலை மற்றும் களுத்துறை பகுதியை சேர்ந்த பிரபல பாதாள குழுக்களை சேர்ந்த இருவர் மீது பொலிஸார் சந்தேகங்களை மேற்கொண்டு அவர்களை கைது செய்ய நடவடிக்கையெடுத்திருந்த நிலையிலேயே அவர்கள் தப்பிச் செல்ல திட்டங்களை தீட்டியுள்ளதாக பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது. -(3)