செய்திகள்

தமிழ் படத்தில் எப்போதுமே நடிக்க மாட்டாராம் கரீனா கபூர்!

ஹிந்தியில் பிரபலமான நடிகைகள் தென்னிந்திய படங்களில் நடிக்க கொஞ்சம் யோசிப்பார்கள் தான். ஹீரோயினுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கபடுவதில்லை என்பதும் அதற்கு ஒரு காரணம்.

ஆனால் நடிகை கரீனா கபூர் அதற்கு வேறு காரணம் கூறுகிறார். “நான் எப்போதுமே தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கமாட்டேன். ஏனென்றால் மொழி தெரியாமல் நடித்தால் நன்றாக இருக்காது என நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும் “தென்னிந்திய படங்களை அதிகம் மதிக்கிறேன். அங்கு தான் ரஜினி, மம்மூட்டி போன்ற ஜாம்பவான்கள் இருக்கின்றனர்” எனவும் கூறியுள்ளார்.

N5