அநுராதபுரத்தில் சற்று முன்னர் பாரிய விபத்து : 38 பேர் வைத்தியசாலையில் அனுமதி
அநுராதபுரத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் 38 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அநுராதபுரம் – பாதெனிய, மஹகல்கடவில பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தின் போது 38 பேர் காயமடைந்துள்ளதாகவும், குறித்த அனைவரும் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த 38 பேரில் 8 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
N5




