செய்திகள்

தெரணியாகலவில் 7 வயது சிறுமி உள்ளிட்ட 2 பேர் வெட்டிக் கொலை

தெரணியாகல – மாகல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 7 வயது சிறுமியொருவர் உள்ளபட 2 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் 7 வயது சிறுமியும் 45 வயது நபரொருவருமே உயிரிழந்துளளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமியின் தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தலைமறைவாகியுள்ளதாகவும் குடும்ப பிரச்சினையே இந்த சம்பவத்திற்கு காரணமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)