செய்திகள்

மரக்கறி விலைகள் வீழ்ச்சி : தம்புள்ள மத்திய நிலையத்தில் கிலோவொன்று 14 முதல் 20 ரூபாவுக்கு விற்பனை

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலைகள் பாரியளவில் வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய நிலைவரப்படி தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் கோவா, லீக்ஸ் என்பன ஒரு கிலோ 14 ரூபாவுக்கும், கரட், கத்தரிக்காய், நோக்கல், ராபு முதலானவை கிலோ ஒன்று 10 முதல் 20 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மலையத்தில் பயிரிடப்படும் கரட், லீக்ஸ், போஞ்சி முதலான மரக்கறிகள், யாழ்ப்பாணத்தில் இருந்து கிடைப்பதால் அதன் விலைகள் வீழ்ச்சி கண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மேலும் பாரிய அளவான மரக்கறிகள் யாழ்ப்பாணத்தில் இருந்து தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு கிடைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)