கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிசூட்டில் ஒருவர் பலி: மறுக்கிறது இலங்கை கடற்படை
கச்சத்தீவுக்கு அருகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நேற்று மாலை நடத்திய துப்பாக்கி சூட்டில் தங்காச்சி மடத்தை சேர்ந்த 22 வயது மீனவர் ஒருவர் பலியாகியுள்ளார்.
இவரது உடல் தற்போது ராமேஸ்வரம் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து 400 இழுவை படகுகளில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மீதே இந்த துப்பாக்கிபோயிரயோகம் நடத்தப்பட்டியுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து மீனவர்கள் அனைவரும் கரை திரும்பிவிட்டனர்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை இலங்கை கடற்படை மறுத்துள்ளதுடன் அப்படி ஒரு சம்பவம் இடம்பெறவில்லை என்று தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தை கண்டித்துள்ள தமிழக எதிர்க்கட்சி தலைவர் இந்திய அரசு தொடர்பில் வன்மையான கண்டனம் தெரிவிக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.





