தினேஸ் சபையிலிருந்து வெளியேற்றம் : ஒருவாரத்திற்கு பாராளுமன்றம் செல்ல முடியாது
பாராளுமன்றத்தில் இன்று சபை நடவடிக்கைகளுக்கு இடையூரான வகையில் நடந்துக்கொண்ட ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தனவுக்கு ஒருவார காலத்திற்கு சபை நடவடிக்கைகளில் கலந்துகொள்ள முடியாதவகையில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சபாநாயககர் கருஜயசூரியவினால் இந்த தடை அறிவிக்கப்பட்டதுடன் இது தொடர்பாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தடைக்கு ஆதரவாக 85 பேரும் எதிராக 22 பேரும் வாக்களித்துள்ளனர்.
இன்று பிற்பகல் சபை கூடியதன் பின்னர் அடிக்கடி ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் இடையூறுகளை ஏற்படுத்தி வந்த நிலையில் தொடந்து 3 தடவைகள் சபை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன.
இதன்போது சபை நடவடிக்கைகளை தொடர்ந்தும் குழப்பிக்கொண்டிருந்த தினேஸ்குணவர்தனவை சபையை விட்டு வெளியேறும்படி சபாநாயகர் அடிக்கடி அறிவித்த போதும் அவர் அங்கேயே இருந்தார். இதனை தொடர்ந்து சபை சேவிதர்களுக்கு அறிவித்து அவரை வெளியெற்றுமாறு அறிவித்தல் விடுத்தார். இதன்பின்னரும் அவர் வெளியேறாத நிலையில் சபை நடவடிக்கைகளில் கலந்துக்கொள்ளாதவாறு ஒரு வார காலத்திற்கு அவருக்கு தடைவிதித்து அது தொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது. -(3)




