செய்திகள்

தினேஸ் குணவர்தனவின் பாராளுமன்ற தடைக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தயாராகும் மகிந்த அணி

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தனவுக்கு ஒரு வார காலம் பாராளுமன்றத்திற்கு வருகை தருவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பாக தாம் கடும் தீர்மானங்களை மேற்கொள்வோம் என அந்தக் கட்சியினர் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்களை நடத்தி கடும் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் சபை நடவடிக்கைகளுக்கு அடிக்கடி இடையூறுகளை ஏற்படுத்தியதாக தினேஸ் குணவர்தன சபையிலிருந்து வெளியேற்றப்பட்டு பாராளுமன்ற தடைக்கு உள்ளாக்கப்பட்டார். என்பது குறிப்பிடத்தக்கது. -(3)