செய்திகள்

O/L பெறுபேறுகள் வெளியாகும் தினம் அறிவிக்கப்பட்டது

2016 க.பொ.த சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள்வெளியாகும் தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 28ஆம் திகதி வெளியிடப்படுமென கல்வி அமைச்சர் அகிலவிராஸ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் இணையத்தளத்தில் பெறுபேறுகள் வெளியிடப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த வருடத்திற்கான பொதுப் பரீட்சைகளுக்கான நேர தினங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி டிசம்பர் 12 முதல் 21 வரை சா.த பரீட்சையும் , ஆகஸ்ட் 8 முதல் செப்டம்பர் 2 வரை உ.த பரீட்சையும் ஆகஸ்ட் 20 புலமை பரிசில் பரீட்சையும் நடைபெறவுள்ளது. -(3)