செய்திகள்

தெரணியகல கொலைக்கான காரணம் வெளியானது : சந்தேக நபருக்கு விளக்க மறியல்

தெரணியாகலவில் அண்மையில் 8 வயது சிறுமியொருவர் உள்ளிட்ட 2 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 19வயது சந்தேகநபர் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொலை சம்பவத்தின் பின்னர் தலைமறைவாகியிருந்த சந்தேக நபர் சிவனொளிபாத காட்டுப் பகுதியில் மறைந்திருந்த நிலையில் இன்று காலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடம் விசாரணை நடத்திய போது காணி பிரச்சினையொன்றை அடிப்படையாக கொண்டே இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் சந்தேக நபர் இன்று பிற்பகல் அவிசாவளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை கொலை சம்பவம் இடம்பெற்ற வீட்டிலிருந்து பெண்களின் உள்ளாடைகள் அடங்கிய பையொன்று மீட்கப்பட்ட நிலையில் அதனை தானே கொண்டு வந்ததாகவும் அவர்களை கட்டிப்போடுவதற்க்காக வீடொன்றின் கொடியிலிருந்து அவற்றை எடுத்து மறைத்து வைத்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த சம்பவத்தில் காயமடைந்த சிறுமியின் தாய் தொடர்ந்தும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. -(3)