கூட்டமைப்பின் கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் கலந்து கொள்ளவில்லை!
வவுனியாவில் நடைபெற்று வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அவசர கலந்துரையாடலில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கலந்து கொள்ளவில்லை.
ஜெனீவாவில் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்க ஆதரவு வழங்குவதா- இல்லையா, தற்போதைய மக்கள் போராட்டங்கள், தற்போதைய அரசியல் சூழ்நிலை, அரசியல் தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக கூட்டமைப்பின் கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.
இதில் வடமாகாண முதலமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. மதிய சாப்பாட்டு இடைவேளையின் போதே பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அவர்கள் வருகை தந்திருந்தார். ஏனையவர்கள் இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளனர்.
N5




