சம்பந்தனை பாதுகாக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது
தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனுக்கு வழங்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் பதவியை பாதுகாப்பதற்காகவே பாராளுமன்றத்திற்குள் ஒன்றிணைந்த எதிரணியினரின் உரிமைகள் மறுக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ்குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஒன்றிணைந்த எதிர்கட்சியை சேர்ந்த 52 உறுப்பினர்களின் அடிப்படை உரிமைகள் முற்று முழுதாக மீறப்படுகின்றன. சம்பந்தனை பாதுகாப்பதற்காகவே எல்லாம் நடைபெறுகின்றது. நாட்டை பிரிக்க வேண்டுமென தெரிவிக்கும் 16 எம்.பிக்களை கொண்ட கட்சியை ஏற்றுக்கொண்டு 52 பேர் உள்ள கட்சியினரின் உரிமைகளை மீறுகின்றனர். இங்கு சம்பந்தனுக்கு வழங்கப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் பதவியை பாதுகாப்பதற்காக எமது உரிமைகளை மீறுகின்றனர். என அவர் தெரிவித்துள்ளார். -(3)




