சமகளம் – உங்கள் தகவல் பங்காளி!

ஊடகமானது மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் நல்லாட்சி என்பவற்றை மேம்படுத்துவதற்கும் அவற்றை பாதுகாக்கும் பொருட்டும், அனைத்து சமூகங்களினதும் கௌரவம், நீதி மற்றும் வாழ்வு ஆகியவற்றை பாதிக்கின்ற சகல வகையான மனித உரிமை மீறல்கள்பற்றிய தகவல்களை அறிக்கையிடும் வல்லமையை கொண்டிருப்பது மாத்திரமன்றி, விடயங்கள், நிகழ்வுகள் மற்றும் நடவடிக்கைகள் பற்றி புரிதலையும், பொதுமக்கள் மத்தியில் அறிவூட்டலையும் ஏற்படுத்துவதுடன் உலகின் சகல பாகங்களிலும் உள்ள மக்களையும் இணைக்கின்றது. அத்துடன்,  பொதுமக்கள் மத்தியில் அவர்களது உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும் அறிவூட்டலை மேற்கொள்வதற்கும்,  சகல மனித உரிமை மீறல்களையும் அறிக்கையிடுவதற்கும் கண்காணிப்பதற்கும் புலனாய்வு செய்வதற்குமான தார்மீக கடமையினையும் கொண்டிருக்கிறது.

இந்த அடிப்படையில், இலங்கைத் தீவில் தமிழ் மக்களினது போராட்டம் மற்றும் அவர்களது பிரச்சினைகள், அச்ச உணர்வுகள் மற்றும் அபிலாசைகள் தொடர்பில் நம்பகத்தன்மையானதும் சரியானதும் பகுத்தாய்வுக்குட்பட்டதுமான முறையில் தகவல் வழங்குவதற்கும் கருத்துருவாக்குவதற்குமான ஒரு வகிபாகத்தை மேற்கொள்வது மாத்திரமன்றி அரசியல் பங்குபற்றல், பொருளாதார அபிவிருத்தி மற்றும் சமூக மாற்றம் ஆகிய நிகழ்முறைகளின் போது தொடர்ச்சியாக பெரிதும் புறக்கணிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களை ஒரு தொடர்பாடல் மூலமான சமூக செயற்பாட்டினூடாக வலுவூட்டும் பொருட்டு அறிவுப் பரிமாற்ற சேவையினை மேற்கொள்வதும் சமகள இணையத்தளத்தின் குறிக்கோளாகும்.

பணம் கொடுத்து செய்யப்படும் எந்த விளம்பரங்களும் சமகள இணையத்தளத்தின் செய்திகளின் தரம், சரிநிலை அல்லது அதன் எந்தவொரு ஊடக சேவையினையும் கட்டுப்படுத்தவோ அன்றி ஆதிக்கம்செய்யவோ இடமளிக்கப்படமாட்டாது.