”Adam’s Peak” இனந்தெரியாத குழுக்களால் அழிப்பு
Adam’s Peak (பாவா ஆதம் மலை) என ஆங்கிலத்தில் சிவனொளிபாத மலையை அண்மித்த பகுதியில் காணப்பட்ட வழிகாட்டி பெயர் கற் பலகையில் காணப்பட்ட எழுத்துகள் ஒரு சில தீய எண்ணம் கொண்டவர்களால் மை தடவி மறைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
சிங்களத்தில் ‘ஶ்ரீ பாத’ தமிழில் சிவனொளி பாதமலை, ஆங்கிலத்தில் ‘Adam’s Peak’ (ஆதாமின் மலை) எனக் குறிப்பிடப்பட்டிருந்த குறித்த பெயர்ப் பலகையின் பெயரே இவ்வாறு மை தடவப்பட்டு நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த மலையை, பௌத்தரகள், ஹிந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள தரிசித்து வந்த நிலையில், குறித்த பகுதியை முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பதாக தெரிவித்து தீய எண்ணங்களைக் கொண்டவ ஒரு சிலர், அப்பகுதியில் பிரச்சினை ஏற்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். -(3)




