Search
Monday 30 November 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அனங்கம் – ஓர் அதிசயம்

அனங்கம் – ஓர் அதிசயம்

-அருஜுனா  அருள்

ஈழத்தில் உருவாகி இருக்கும் குறுந்திரைப்படம் “அனங்கம்” சில வகைகளில் புதுமையும் பல வகைகளில் முதன்மையும் பெற்று எதிவரும் ஏழாம் திகதி ஞாயிற்று கிழமை 5 மணி மற்றும் 5.50 காட்சிகளாக யாழ்ப்பாணம் கார்கில்ஸ் சிலோன் தியேட்டரில் வெளியாக இருக்கின்றது. இன்றைய முழுநீள தமிழ் சினிமாவை ஆக்கிரமித்துள்ள திகில் படங்களின் தாக்கம் இளம் குறும்பட இயக்குனர்களின் சிந்தனை கதவுகளையும் தட்டாமல் இல்லை. அனங்கம் தொட்டிருக்கின்ற களம் புதியது அல்ல, நன்கு பார்த்து பழகியது  தான் ஆனால் அங்கு கதை சொல்லப்பட்டிருக்கும் விதத்தில் தான் புதுமை விதைக்கப்படுள்ளது.

“நிழல்கள்” எனும் சிறுகதையின் கருவை கருவாக்கி இயக்குனர் அக்கி அவர்களால் திரைக்கதை வசனம் புனையப்பட்டு அவரின்  இயக்கத்தில் வெளியாக இருக்கும் 23 நிமிட குறும்படமே அனங்கம். இன்றைய  இளம் இயக்குனர்கள் பலர் தங்கள் படைப்புகளிற்கு ஆங்கிலத்தில் பெயர் சூட்டும்  சூழலிலும் “அனங்கம்” எனும் ஒரு தூய தமிழ் வார்த்தையை பலருக்கு அறிமுகம் செய்துள்ளது இந்த தலைப்பு. “அனங்கம்” என்பது உடல்றவன் அல்லது நிஜமற்ற  நிழல், ஓர் மாய தோற்றம்  என்று பொருள் படும்.

பேய்கள் ஆவிகள் என்கின்ற கருத்து நிஜமான ஒரு நிழல் தோற்றமா அல்லது நிழல் போன்ற  நிஜ தோற்றத்தின் பிரதிபலிப்பா என்பது அவரவர் அனுபவம் மற்றும் சிந்தனை கோட்பாடுகளை பொறுத்தது. இக் குறுந்திரைப்படம் அத்தகைய சில பல சிந்தனை செய்திகளை சுவாரஷ்யமாக அதிகம் அலட்டிக்கொள்ளாமல் விறு விறுப்பாக கூறி செல்லும் என்பதில் ஐயமில்லை. “திரைப்படங்கள் விமர்சனத்திற்கு உட்படவேண்டியது ஆரோக்கியமானது, இருப்பினும் ஒரு படைப்பாளி தன் படைப்பை தரமான சினிமாவாக வெளியிட  வேண்டியது அவசியம்” என்கின்றார் இயக்குனர் அக்கி.

மேலும் இந்த குறும்படம்  வெளியாகுவதற்கு முன் பல சட்டச்சிக்கல்களை சந்தித்துள்ளது அவற்றை தயாரிப்பாளராக  அக்கி எதிர்கொண்ட விதம் மற்றும் அதற்காக அவர் கொட்டிய உழைப்பு இரண்டையுமே   இன்னொரு படமாக இயக்கி விடலாம் எனச்சொல்லி பெருமூச்சு விடுகின்றார் தயாரிப்பாளர். இலங்கை தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தில் சட்ட ரீதியான  பதிவை பெற்றுள்ள “Akiy Productions” இன் முதலாவது படைப்பான அனங்கத்தை சட்ட பூர்வமாக வெளியிடுவதற்கு தயாரிப்பாளர் மேற்கொண்ட பிரயத்தனத்தின் வெளிப்பாடாக முதன் முதலாக இலங்கை திரைப்பட தணிக்கை குழுவிடம் “U” சான்றிதழ் பெற்று வெளியாக இருக்கும் முதல் தமிழ் குறும்படமாக அனங்கம் நாளை அரங்கம் காண இருக்கின்றது.hvjbn

யாழ்ப்பாணத்தில் நவீன திரையரங்க தொழில்நுட்பங்களை செவ்வனவே கொண்டமைந்த “கார்கில்ஸ் சிலோன் தியேட்டரில்” இக் குறும்படத்தை திரையிடுவது என்பது சற்று சவாலானதே, இருந்தாலும் மேலிடத்தை தொடர்பு கொண்டு உரிய அனுமதியை பெறுவதற்கு மட்டுமே 8 மாத காலத்திற்கு மேல் காத்திருந்து  பல தடவைகள் கொழும்பு சென்று தொடர்ச்சியாக விடுக்கப்பட வேண்டுதல்களின் விளைவால் யாழ்ப்பாணம் கார்கில்ஸ் திரையரங்கில் முதன் முதலாக திரையிடப்படும் குறுந்திரைப்படம் என்கின்ற பெருமையை அனங்கம் பெற்றுள்ளது என்று நிம்மதி பெருமூச்சு விடுகின்றார் தயாரிப்பாளர் அக்கி.

தொழில்நுட்ப ரீதியில் DCP (Digital Cinema Package) எனும் இன்றைய தொழில்நுட்ப தளத்தில் பதிவேற்றப்பட்டு, 4 K  Resolution எனும் துல்லிய ஒலி நயத்துடன் 7.1 DTS Surrounding Sound System உடன் வெளியாக இருக்கும் அனங்கம் ஈழத்து குறும் திரைப்பட இயக்குனர்களுக்கு ஒரு முன்மாதிரியான எடுத்துக்காட்டாகவும், ரசிகர்களுக்கு ஒரு சிறந்த தரத்திலான அனுபவமாகவும் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

அனங்கத்தில் பல புதுமுக நடிகர்களின் மாறுபட்ட நடிப்பை அக்கியின் நேர்த்தியான மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த ஒளிப்பதிவு  மெருகேற்ற, அஞ்சலோவின் காட்சி தொகுப்பும் VFX  உம் காட்சிகளுக்கு புதிதொரு பரிமாணத்தை வழங்கி விட்டது என கூறி பூரிக்கின்றார் இயக்குனர் அக்கி. அத்தோடு தென் இந்திய தமிழ் சினிமாவிற்கான மொழி பிரயோகத்தை அதன் கதை களத்தோடு ஒன்றிப்போக செய்து பாத்திரங்களுக்கு குரல் கொடுத்த ஸ்ரீ ரம்யா, அனுஷியா, பானுப்பிரியன், டிலோஷன், மற்றும் பிரண்ணவனின் அழுத்தம் திருத்தமான டப்பிங் படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

Director

ஒரு பிராந்திய மொழியில் உருவாக்கி இருக்கும் குறும்படம் என்கின்ற போதிலும் இதில் 3D Modelling மற்றும் Animation இன் தேவை இருந்ததை உணர்ந்து பானுபிரியன் இங்குள்ள மட்டுப்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வசதிகளை அதிகபட்சம் பயன்படுத்தி அதில்  வெற்றி கண்டுள்ளார். இக் குறும்படத்துக்கு மிகப்பெரிய பலம் சேர்ப்பது இப்படத்தின் பின்னணி இசை, இசையமைப்பாளர் பிரண்ணவன் கதைக்களத்தோடு கதை சொல்லும் தரமான  இசையை தந்ததோடு மட்டுமின்றி  Foley Art என அழைக்கப்படும் துல்லிய ஒலி அலைகளை பதிவு செய்யும்  தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரசிகர்களை கதைக்களத்துடன் ஒன்றிக்க வைத்துவிடுவது தான் இவரது  இசையின் தனிச்சிறப்பு.  அத்தோடு தேவப்பிரியன் தயாரிப்பின் நிதிசார் செயற்பாட்டாளராகவும், இணை படத்தொகுப்பாளராகவும்  படத்திற்கு பலம் சேர்த்துள்ளார். தயாரிப்பு உதவி குழுவில் பணியாற்றிய ஆதன், ராகுல், கவி வர்மன், அபிஷன், லக்ஷிகன், ரலுஜன், மற்றும் ஜேனிஸ்ரன் ஆகியோரது பங்களிப்பு திரைக்கு பின்னனானது எனினும் பிரதானமானது.

cfdf

ஈழத்தில் இன்னும் நன்கு விஸ்தரிக்கப்பட வேண்டிய, பல வேலை வாய்ப்புக்களை வழங்க கூடிய அதேநேரம் உள்ளூர் பொருளாதாரத்தின் பண பாய்ச்சலை மேம்படுத்தும் திரைத்துறையில் இப்படிப்பட்ட குறும்படங்களின் வரவு வரவேற்கப்பட வேண்டியதே.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *