தலைப்பு செய்திகள்

அல்லாவின் மகன் இந்துமத விவகார அமைச்சரெனிலும் எல்லாமும் சிவன்செயலே என்றெண்ணி நாமிருப்போம்

அல்லாவின் மகன் இந்துமத விவகார அமைச்சரெனிலும்  எல்லாமும் சிவன்செயலே என்றெண்ணி நாமிருப்போம்

புத்தனின் தத்துவங்கள்
செத்துபோன நாட்டிலே…
சித்தார்த்தனாய் தன்னை
சித்தரிப்பவரின் வித்தைகள்தான்
எத்தனை எத்தனை இன்னமும் எத்தனையோ?

பத்தோடு பதினொன்றாய் நாமும்
ஒத்து வேடிக்கை பார்ப்பதை விடுத்து
‘தப்பு இதுவல்லவோ’ என்று தட்டி கேட்கவா முடியும்?
இப்போதல்ல இனியும் எமக்கில்லை விமோசனம்
‘எப்பாவோ முடிந்த காரியம்’ அதுவென்று
அப்போதே சொல்லிச்சென்றான் சித்தன்!

எம் கட்சி; எதிர்கட்சி!யார்வந்தால்…
எமக்கென்னவென்றிருக்க கூட்டமைப்பு
தம்பக்க எதிர்ப்பை தரவேற்றி …..
தீர்மானம் கொண்டுவரும் வடமாகாண சபை
கண்டன போராட்டம் கடையடைப்பு ஆர்ப்படமென
தம்பட்டமடிக்க தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

அல்லாவின் மகன் இந்துமத விவகார அமைச்சரெனிலும்
எல்லாமும் சிவன்செயலே என்றெண்ணி நாமிருப்போம்
பொல்லா வினையோம் நாம் இம்மண்ணில்
நல்லாட்சியைத் புகழ்வதை தவிர வேறறியோம்
‘அன்பே சிவம் அதுவே நலம்’ என உரைத்து…
அரசஅடிவருட ஆளும்கட்சியில்..
எம்மவர்கள் சலுகைகளுக்காய் இருக்குமட்டும்
இப்போதில்லை இனியும் எமக்கில்லை விமோசனம்!

– கொற்றவை


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *