Search
Saturday 5 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இயற்பியலும் இறையியலும் – அகிலத்தை விளங்கிக் கொள்ளல்

இயற்பியலும் இறையியலும் – அகிலத்தை விளங்கிக் கொள்ளல்

மருத்துவர் சி. யமுனாநந்தா
‘பெறுபகிரண்டம் பேதித்த அண்டம்
எறிகடல் ஏழின் மணல் அளவாகப்
பொறியொளி பொன்னனி யென்ன விளங்கிச்
செறியும் அண்டா சனத்தேவர் பிரானே.’
திருமந்திரம் 2297.

அண்டவெளியில் அகிலத்தின் அமைவு பற்றிய இயற்பியல் ஆய்வுகள் பல கருதுகோள்களை முன்வைத்து உள்ளது. பௌதீகக் கணியங்கள் ஊடு அவதானித்து நிறுவக்கூடியவை. விஞ்ஞானத்தில் மற்றவர்களால் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் பௌதீகக் கணியங்களின் சார்புகளின் எல்லைப் பெறுமானங்களுக்கு அப்பால் விஞ்ஞானத்தின் எல்லை முடிவுற கருதுகோள்கள் உருவாகின்றன. இயற்பியலின் விஞ்ஞானக் கருதுகோள் தத்துவங்களும் இறையியலின் இயற்பியல் கருதுகோள் தத்துவங்களும் மனிதனின் சித்தத்தில் அவனது தேடலுக்கு விடையினைக்கூற முனைகின்றன.

‘வெளியை அறிந்து வெளியின் நடுவே
ஒளியை அறியின் உளி முறியாமே
தெளிவை அறிந்து செழுநந்தி யாலே
வெளியை அறிந்தனன் மேல் அறியேனே.’
திருமந்திரம் – 839

இதுவரை காலமும் விஞ்ஞானத்தில் அகிலத்தின் எல்லையை ஒளியலைகளின் பண்பினை வைத்தே வரையறை செய்தனர். இதற்கு அல்பேட் ஐயன்ஸ்சனின் சார்ப்புக்கோட்பாடுகள் பயன்பட்டன. வில்லைகள் ஊடான காட்சிகள் ஒளியியில் மாயத் தோற்றத்தில் (Optical illusion) மனிதனை வைத்து இருந்தது.

தற்போது ஒளியலைகளுக்குச் சமானமாக ஈர்ப்பு அலைகள் (Gravitational Quantum) கண்டறியப்பட்டுள்ளன. இவ்வீர்ப்பு அலைகளின் துணையுடன் பல மில்லியன் கணக்கான நட்சத்திரத் தொகுதிகள் (Galaxies) மற்றும் கருந்துளை வான் பொருட்கள் (சூரிய ஆதித்தன்) ஞரயளயசள ஆராய்ந்த போது அகிலத்தின் விரிவில் கருஞ்சக்திகளின் பங்கும், அகிலத்தின் பரிமாணம் ஒடுங்குவதும் (wrap up) அவதானிக்கப்பட்டுள்ளது.

தற்போது அகிலத்தினை வரையறை செய்ய ஈர்ப்பு அலைகளின் பௌதீகக்கணியமும் அதன் எல்லை வரை பயன்படுத்தக்கூடியதாக உள்ளது. இது மிக அண்மைக்கால விஞ்ஞான முன்னேற்றத்தின் பிரதிபலனாகும்.

கருந்துளைகள், கருஞ்சக்திக் கோட்பாடுகள் அகிலத்தின் அமைப்பை வரையறுப்பதில் தனது எல்லைவரை விளக்கத்தினைக் கொடுக்கின்றது. ஒளியலைகள் மூலமாக முப்பரிமாணத்தில் அகிலம் விரிவடைவது கருதுகோளாக்கப்பட்டது. போல் ஈர்ப்பு அலை மாயத் தோற்றத்தில் (Gravitational illusion) அகிலம் தளவடிவில் அமையலாம். இதனை மாணவர்களுக்கு எளிதில் விளக்குவதாயின் கொதிக்கும் எண்ணெய் தாழியில் பொரியும் ‘பப்படங்கள்’ போன்றதே அண்டவெளியில் காணப்படும் அகிலங்கள். அகிலத்தின் வடிவு என்பது பௌதீககணிய மாயை ஆகும் ஆயின் காலம் எனும் கணியத்தின் வடிவம் அகிலத்தின் வடிவின் சார்பானதே ஆகும். அகிலத்தின் சார்பிற்கு அப்பால் காலம் என்பது நிலையானது ஆகும். அதாவது எமது சூரியமண்டலத்துக்கு வெகு தொலைவில் உள்ள யாதேனும் கருந்துளை வான்பொருளில் (Quasar) ஈர்ப்பலை சார்பாக எமது சூரியமண்டலத்தில் உள்ள அனைத்துப் புள்ளிகளும் ஒரே பெறுமதியில் இருக்கும். அவ் வான்பொருளின் சார்புப் பௌதீககணியத்தில் எமது சூரியமண்டலத்தின் காலம் எப்பொழுதும் மாறாது காணப்படும். இதுவே காலத்தின் ஒடுக்கத்திற்கான விளக்கமாகும். தட்டையான பப்படம் கொதிக்கும் எண்ணெயில் எவ்வாறு வீங்கிப் பருமனடைவது போல் அகிலத்தின் விரிவும் வெவ்வேறு பௌதீககணியங்களில் மாற்றமடையும். அதேபோல் அகிலத்தின் வடிவும் அவ்வவ் பௌதீககணியங்களின் சார்பிலேயே கருதப்படும்.

அகிலத்தின் இயக்கங்கள் நாத அதிர்வுகள் போல் அமையும். இதனை நடராஜப்பெருமானின் உடுக்கை ஒலியின் நாதமாக சைவசித்தாந்தம் விளக்குகின்றது.

இதுகாறும் ஒளியலைகளின் சார்பிலேயே விரிவும், காலம் வெளித் தத்துவமும் அமைந்து இருந்தது. அண்மைய கண்டுபிடிப்புகள் குறிப்பாக ஈர்ப்பு அலைகள் மற்றும் கரும்துளைகள் தொடர்பான அவதானிப்புகள் காலம் வெளி ஒடுங்கும் புள்ளிகளை எடுத்துக் காட்டியுள்ளது. இவை அகிலம் தொடர்பான சார்புநிலைகளில் புதிய கோட்பாடுகளை உருவாக்க உறுதுணையாக உள்ளது. காலமும் வெளியும் சில ஆள்கூறுகளில் ஒரே நேர்கோட்டில் அமையலாம். அவ் வாள்கூற்றுக் கணிப்பில் வெளி மாறாது இருக்கலாம். இதனையே சைவசமயத்தில் ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெருஞ்சோதி என மணிவாகர் குறிப்பிடுகிறார்.

இயற்பியல் கருதுகோள்களே சைவசித்தாந்தத்தில் சிதம்பர இரகசியமாக கருதப்படுகின்றது. சிதம்பர நடராஜரின் ஆனந்தக்கூத்து அகில இயக்கத்தை விபரிப்பதாகவும், அகிலவெளி மாதிரியாகவும் உள்ளது. அதுவே ஆத்மாவின் நடனமாகவும் உள்ளது. சிவலிங்க வடிவமும் அகிலத்தின் வடிவாக உள்ளது. அதுவே ஆன்மா மணிபூரகத்தில் சிவனுடன் சேரும் அமைவாகவும் உள்ளது. சிதம்பர சக்கரம் அகிலத்தை இரு பரிமாணங்களில் விளக்குகின்றது. மேலும் சிதம்பர சக்கர அமைப்பிலேயே ஆன்மா உடலில் ஐந்துநிலைகளில் பக்குவப்படுகின்றது.

அகிலமும் எல்லா உயிர்களும் இறையாட்டம் ஆடல் என்பதனை உணர்த்தும் திருமந்திரப் பாடல்.

‘மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் மெய் தோற்றத்து
அவ்வாய அந்தக் கரணம் அகிலமும்
எல்லா உயிரும் இறையாட்ட ஆடலால்
கைவாய் இலாநிறை எங்கும் மெய்கண்டத்தே’ திருமந்திரம் (2586)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *