Search
Wednesday 21 August 2019
  • :
  • :
[video width="848" height="272" mp4="http://www.samakalam.com/wp-content/uploads/2016/05/Mewfashions.mp4"][/video]
தலைப்பு செய்திகள்

உலகில் மனிதநேயத்தை மாற்றி அமைக்கக்கூடிய கண்டுபிடிப்பாக குவாண்டம் மின்மாற்றிகள்!

உலகில் மனிதநேயத்தை மாற்றி அமைக்கக்கூடிய கண்டுபிடிப்பாக குவாண்டம் மின்மாற்றிகள்!

மருத்துவர். சி. யமுனாநந்தா

சம்சாரம் இல்லாதுவிடினும் மின்சாரம் இன்றி வாழமுடியாது என்பது வெளிப்படை உண்மை. அதிகரித்துவரும் உலக சனத்தொகைக்கு ஏற்ப மின்சாரத் தேவையும் அதிகரித்த வண்ணமே உள்ளது. மின்சக்தி உற்பத்தி செய்வதில் இருந்து அதனைப் பயன்படுத்துவது வரை பெருந்தொகையான பணம் செலவிடப்படுகின்றது. இப் பௌதீகச் சக்தியினைக் கட்டுப்படுத்துவதே உலகில் மனிதநேயம் வளர அவசியமாகும்.

பூகோள அரசியலும் உலகின் வலுச்சமநிலையும் ஒவ்வொரு நாடும் தமக்குத் தேவையான எரிபொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கான சூழ்ச்சிகளாகவே அமைகின்றன. மத்தியகிழக்கில் எரிபொருள் வளத்தினைச் சுரண்டுவதற்காகவே ஐக்கிய அமெரிக்காவும் ரஸ்யாவும் போராடுகின்றன. இதனாலேயே மத்திய கிழக்கில் அப்பாவி இஸ்லாமிய மக்கள் கொல்லப்படுகின்றனர். சீனா தனக்குத் தேவையான எரிபொருட்களை கப்பல் மூலம் கொண்டு வருவதற்காகவே ஈழத்தில் தமிழர்களைச் சிங்களவர்கள் கொன்றொழிக்க உதவியது.

குவாண்டம் மின்மாற்றிகள் நடைமுறைக்குவரின் உலகில் எரிபொருள் தேவைக்கான நெருக்கடி ஏற்படாது. ஏனெனில் ஒரு சக்தி முதலில் இருந்து உலகின் பல பாகங்களுக்கு குவாண்டம் மின்மாற்றிகள் மூலம் பரிமாறலாம். இதனால் உலகின் வலுச்சமநிலையில் மாற்றம் ஏற்படும். வீணான யுத்தங்களும், மனித அவலங்களும் இல்லாது ஒழியும்.

இதற்கு உள்ள ஒரே வழி சேய்மைத் தொழில்நுட்பத்தினை (Teleportation) புதிய தலைமுறை மின்மாற்றிகளில் புகுத்தல் ஆகும். இவை புதிய தலைமுறை மின்மாற்றிகளை உருவாக்க உதவும். இதில் ஓரிடத்தில் உள்ள போட்டோன்கள் அதேநிலையில் இன்னோர் இடத்தில் உருவாக்க முடியும்.

சேய்மைத் தொழில்நுட்பம் சீன விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டு உள்ளது. இதனைப் பயன்படுத்தி குவாண்டம் மின்மாற்றிகளை உருவாக்க முடியும். குவாண்டம் மின்மாற்றிகளில் மூன்று செயற்பாட்டு அலகுகள் அமையும். அவையாவன :
1. சக்தி எறிக்கை முதல் (Photon Projector)
2. சக்தி செல்லும் பாதை
3. சக்தியினைப் பெறும் பகுதி (Photon Receiver)

Quantum-Teleportation

இவற்றில் சக்தி எறிக்கை முதலினைக் கண்டறிவதிலேயே உலக மனிதநேயம் தங்கி உள்ளது. இவ்வரிய தொழில்நுட்பத்தை நடைமுறைப்-படுத்தினால் உலகின் புதிய தொழில்நுட்பப்புரட்சி ஏற்படும்.

தற்போது நடைமுறையிலுள்ள மின்னிணைப்புச் செயற்பாடு (Electric Power Grid System) முற்றாக மாற்றம் பெறும். செய்மதியின் உதவியுடன் உலகின் பல பாகங்களுக்கும் ஒரே மின்முதலில் இருந்து மின்சக்தியினை வழங்கக்கூடியதாக அமையும்.

இதனால் மின்வழங்கலில் ஏற்படும் இடையூறுகள் முற்றாக இல்லாது போகும். குறைந்த அளவு மின்சக்தியுடன் அதிக அளவு வேலைகளைச் செய்யக்கூடியதாக அமையும். சூழல் மாசுபடுதலை ஏறக்குறை முற்றாகத் தடுக்கலாம். வீதியோரங்களில் காணப்படும் மின்கம்பங்களால் ஏற்படும் இட நெருக்கடிகள், விபத்துக்கள் முற்றாகத் தவிர்க்கப்படும். மேலும் தற்போது தகவல் தொழில்நுட்பத்தில் பயன்படும் இலகு பயன்பாடுகள் யாவும் சக்தி நுகர்வுத் தொழில்நுட்பத்திலும் ஏற்படும். மின்சக்தி நுகர்வினை வௌ;வேறு அதிர்வுகளில் விற்பனைச் சந்தைகளில் பெறக்கூடியதாக உலகம் மாறும்.

இதனால் பூகோள உலக அரசியலில் சீனாவின் பூகோளப் பட்டுப்பாதைத்திட்டம் தவிடுபொடியாகிவிடும். உலக வலுச்சமநிலை இத்தொழில்நுட்பத்தினைக் கையாளுபவர்கள் கையில் சில காலம் இருக்கும். ஆனால் உலகில் ஆக்கிரமிப்புச் சமர்களும், மனிதநேய அழிவுகளும் முற்றாக இல்லாது போகும். அதாவது உலக அமைதிக்கு குவாண்டம் மின்மாற்றிகளின் செயற்படுநிலை இன்றியமையாததாகும். மேலும் காலநிலை மாற்றமும் தடுக்கப்படும். பசுமைப்புரட்சி ஏற்படும். வீதிகளில் வாகனம் புகை இல்லாமல் போகும். அதாவது உலகம் முழுமையான அமைதியினை ஆக்கிரமிப்பு இன்றியும், சூழல் மாசடைதலின்றியும் எய்துவதற்கு குவாண்டம் மின்மாற்றிகள் துணைபோகும் என்பதில் ஐயமில்லை.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *