Search
Wednesday 26 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஏற்புவலிக்கு எதிரான நீர்ப்பீடனம்

ஏற்புவலிக்கு எதிரான நீர்ப்பீடனம்

மருத்துவர். சி. யமுனானந்தா
ஏற்புவலி நோய் குளோஸ்ரிடியம் டெட்டானி எனும் பக்ரீரியாவினால் ஏற்படுகின்றது. இது உயிராபத்தினை ஏற்படுத்தும் நோயாகும். ஏற்புவலியினால் வளர்ந்தோரும் சிறு பிள்ளைகளும் இறப்பது அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் பலவற்றில் பிரச்சினையாகக் காணப்படுகின்றது. இலங்கையில் ஏற்புவலிக்கு எதிரான நீர்ப்பீடனம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுவதனால் ஏற்புவலி கிருமியினால் ஏற்படும் நோய் நிலையினையும் இறப்பினையும் முற்றாக இல்லாது செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவ உலகில் ஏற்புவலிக்கான நீர்ப்பீடனம் தொடர்பான அறிவும் அனுபவமும் சுகாதாரத் திணைக்களத்திற்கு சிறந்த வழிகாட்டலை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்புவலி ஏற்படாது இருப்பதற்கு உயிர்ப்பான நீர்ப்பீடனம் அளித்தலும் (Tetanus Toxoid) மறைமுகமான நீர்ப்பீடனம் அளித்தலும் (Tetanus Immunoglobin) சிகிச்சை முறைகளில் அடங்கி உள்ளது.

டெட்டனஸ் வக்சீன் ஆனது டெட்டனஸ் டொக்சைட்டில் இருந்து தயாரிக்கப்படுகின்றது. இது தனியாக TT (டெட்டனஸ் டொக்சைட்) ஆகவும் நோய்களுக்காக னுவு ஆகவும் பென்ராவலன்ட் ஆக ஐந்து தடுப்பு மருந்தினை நோய்களுக்கான தடுப்பு மருந்திலும் கெஸாவலன்ட ஆக ஆறு நோய்களுக்கான தடுப்பு மருந்தாகவும் சிறுவர்களுக்கு அளிக்கப்படுகின்றது. வளர்ந்தவர்களில் யவுன ஆகவும் அளிக்கப்படுகின்றது.

2

 ஆரம்பத்தில் தலைவலியும் தாடைப்பகுதியில் இறுக்கமும் (அசைக்கும்போது நோ) ஏற்படும் 

குழந்தைகளில் 2 மாதம், 4 மாதம், 6 மாதம், 18 மாதம், 5 வருடம் ஆகிய வயதுகளில் போடப்படும் தடுப்பூசிகள் ஏற்புவலி ஏற்படாது இருக்க, அவர்களின் உடலில் நீர்ப்பீடனத்தை ஏற்படுத்துகின்றது.

இத் தடுப்பு மருந்துகள் அரச வைத்தியசாலைகளில் இலவசமாகவும் நேர்த்தியாகவும் அளிக்கப்படுகின்றன. எனவே இவ்வயதில் காயம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் மேலதிகமாக ஏற்புவலி தடுப்பு ஊசியினை ஏற்றுதல் தவறானதாகும். மேலும் 12 வயதில் போடப்படும் ஏற்புவலி தடுப்பு ஊசி 10 வருடங்களிற்கு உடலில் நீர்ப்பீடனத்தை அளிக்க வல்லது. எனவே குறைந்தது 19வயது வரை உடலில் காயம் ஏற்பட்டால் ஏற்புவலி தடுப்பு ஊசியினை மேலதிகமாக வழங்கத் தேவையில்லை.

துரதிஸ்டவசமாக பல சிறுவர்களுக்கு முறையாக ஏற்புத் தடுப்பூசிகள் ஏற்றப்பட்ட சூழலிலும் தனியார் வைத்தியசாலைகளில் தவறாக இத் தடுப்பூசிகள் ஏற்றப்படும் சம்பவங்கள் நிறையவே நிகழ்கின்றது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தப்பங்களும் உள்ளன. இவை தவிர்க்கப்பட வேண்டியவையாகும்.

சிறுவர்களில் வழமையான தடுப்பு மருந்துகள் ஏற்றப்படுவதால் ஏற்புநோய்க்கான நீர்ப்பீடனம் ஏற்பட்டு இருக்கும். ஆனால் சில சந்தப்பங்களில் பாரிய காயங்கள், காயம் அசுத்தப்பட்டு இருக்கும் சந்தர்ப்பங்களில் ஏற்புத் தடுப்பு மருந்தினை அளிக்க வேண்டி உள்ளது. ஆனால் இதனை தீர்மானிப்பதில் அரச வைத்தியசாலை வைத்தியர்களே சிறந்தவர்கள். ஆயுள்வேத வைத்தியசாலைகள், முதிய மருத்துவர்களால் தனியார் வைத்தியசாலைகளில், நோயாளிகள் வந்துவிட்டனர் திருப்பி அனுப்பக்கூடாது என்ற நோக்கில் ஏற்புத்தடை மருந்து ஏற்றுதல் தவறானது ஆகும். 3

ஏற்புவலி அதிகரிக்கும்போது கழுத்தில் இறுக்கமும் விழுங்குவதில் சிரமமும் ஏற்படுகிறது 

22வயதிற்கு மேல் காயம் ஏற்படும் போது முதல் ஏற்புத்தடை ஊசி போட்டு, பின் 4 கிழமைகளுக்கு பின்பு ஏற்புத்தடை ஊசி போடப்படல் வேண்டும். பின் 6 மாதங்களுக்கு பின் 3வது தடை ஊசி போடப்படல் வேண்டும். பின் 5 வருடங்களின் பின் ஒரு ஏற்புத்தடை ஊசியும் அதன் பின்பு 10 வருடங்களில்; ஒரு ஏற்புத்தடை ஊசியும் போடுதல் வேண்டும். பின் ஒவ்வொரு 10 வருடங்களிற்கு ஒரு முறை ஏற்புத்தடை ஊசி 65 வயது வரை அளிப்பதனால் ஏற்பு வலி நோய்க்குரிய பூரண நீர்ப்பீடனத்துடன் வாழ முடியும். அதாவது 22 வயதில் ஒரு ஊசி, 1 மாதம் கழித்து, பின் 6 மாதம் கழித்து ஊசியினை பெற்றவர் 27 வயது 7 மாதத்தில் ஒரு ஊசியினையும் பின் 37, 47, 57 வயதில் ஒரு ஏற்புத்தடை ஊசியினையும் பெற்றுக் கொண்டால் மேலதிக ஊசிகள் தேவையில்லை. அதனால் தேலையில்லாது ஏற்புத் தடுப்பு ஊசிகளை ஏற்ற வேண்டிய தேவை இல்லை.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான ஏற்புத்தடை மருந்துகள் அவர்கள் சிறுவயதில் ஒழுங்காக ஏற்புத்தடை மருந்துகளை பெறாதிருப்பின் முதல் கர்ப்பம் தரித்ததில் 12 வார கர்ப்ப காலத்தில் முதல் தடுப்பும், பின் 6-8 கிழமைகளில் இரண்டாவது தடுப்பும் வழங்கப்படும்.

இரண்டாவது கர்ப்பம் தரித்தலில் 12 வார கர்ப்ப காலத்தில் ஒரு தடுப்பு ஊசி வழங்கப்படும். மூன்றாவது கர்ப்பம் தரித்தலில் 12 வார கர்ப்ப காலத்தில் ஒரு தடுப்பு ஊசி மட்டும் வழங்கப்படும். நான்காவது கர்ப்பம் தரித்தலில் 12 வார கர்ப்ப காலத்தில் ஒரு தடுப்பு ஊசி வழங்கப்படும் இவ்வாறு தடுப்பு ஊசி வழங்கப்படின் 5 தடுப்பு ஊசிகள் வழங்கப்படின் பின்னைய கர்ப்பகாலத்திற்கு தடுப்பு ஊசிகள் தேவையில்லை.

4

ஏற்புவலி மேலும் தீவிரமடையும்போது தொண்டை மற்றும் குரல்வளையில் ஏற்படும் தசை இறுக்கம் காரணமாக சுவாசம் பாதிக்கப்படுகிறது 

முறையாக சிறுவயதில் 6 தடவை தடுப்பு மருந்துகள் போடப்பட்டு அதற்கான ஆதாரம் இருப்பின் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான ஏற்புத்தடுப்பு மருந்து அளிக்கும் முறை பின்வருமாறு அமையும்.

6 ஆவது தடுப்பு ஊசிக்கும் ( அதாவது 12 வயதில் போடப்படும் தடுப்பு ஊசிக்கும் தற்போதைய வயதுக்கும் 10 வருடங்களுக்கு உள்ளேயெனின் ஏற்புத் தடை ஊசி போடத் தேவையில்லை. அதாவது 22 வயதிற்கு மேல் கர்ப்பமாகும் போதே ஏற்புத்தடை மருந்து போடப்படல் வேண்டும். வேறு தடுப்பு மருந்து போடப்பட்ட பின் மேலும் ஒரு தடவை மருந்து ஏற்றப்பட்டு, அதன் பின்பான காலம் 10 வருடங்களுக்கு குறைவாக இருந்தாலும் ஏற்புத்தடை மருந்தினை கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஏற்றத் தேவையில்லை.

காயம் ஏற்பட்ட பின் ஏற்புத்தடை ஊசி அளிப்பதற்கான தீர்மானம் காயத்தின் ஆபத்துத் தன்மையினையும், காயப்பட்டவர் ஏற்றிய முன்னைய ஏற்புத் தடுப்பு மருந்துகளின் ஒழுங்கிலும் தங்கி இருக்கும்.

ஒழுங்கான முறையில் இள வயதில் ஏற்புத் தடுப்பு மருந்து போடப்பட்டு இறுதி ஏற்புத் தடுப்பு மருந்திற்கு பின் 10 வருடங்கள் வரை பொதுவாக ஏற்புத் தடுப்பு மருந்து அளிக்கத் தேவையில்லை.

ஒரு ஏற்புத் தடுப்பு மருந்து அளிக்கப்பட்டு 10 வருடங்கள் கழிந்த நிலையில் காயம் ஏற்படின் ஒரு ஏற்புத் தடுப்பு மருந்து அளிக்கப்படும். தடுப்பு மருந்தால் குருதியில் உள்ள நிணநீர் குழியங்களில் ஏற்படும் நீர்ப்பீடனச் செயன்முறை 10 வருடங்களுக்கு நிலைக்கும். அதன் பின் அதன் செயற்றிறன் குன்றும்.

ஏற்கனவே ஒழுங்காக ஏற்புத் தடுப்பு ஊசி பெறாது, காயமடைந்து வருபவர்களுக்கே முதலாவது தடுப்பு ஊசி அளிக்கப்பட்டு பின் நான்கு வாரத்தின் பின் இரண்டாவது ஏற்புத் தடுப்பு மருந்தும் அதன் பின் மூன்றாவது தடுப்பு மருந்திளை ஆறு மாதங்களின் பின்பும் பெறல் வேண்டும். இதன் பின் 5 வருடங்களில் ஒரு தடுப்பு மருந்தும் அதன் பின் ஆறாவது தடுப்பு மருந்தினை 10 வருடங்களின் பின்பும் அளிக்கப்படின் வாழ்நாள் முழுவதும் ஏற்பு நோய்க்கு எதிரான நீர்ப்பீடனத்தினை பெற்று விடுவர்.

வைத்தியசாலைகளில் ஏற்புத் தடுப்பு மருந்து 2oc தொடக்கம் 8 oc வரையான வெப்பநிலையிலேயே பேணப்படல் வேண்டும். குளிர்சாதன பெட்டியில் ஆழ்குளிர் பகுதியில் இவை வைக்கப்படின் தடுப்பு மருந்து வீரியம் இழந்துவிடும். தடுப்பு மருந்து உடைத்து எடுக்கப்படின் அதனை 4 கிழமைக்குள் பாவிக்க வேண்டும். தடுப்பு மருந்து தசை இழையத்தினுள்ளேயே செலுத்தப்படுகின்றது.

எனவே ஏற்புத் தடுப்பு மருந்து தொடர்பாக விழிப்புணர்வு மக்களுக்கு மட்டுமல்ல, சுகாதார சேவையில் பணிபுரிபவர்களுக்கும் இன்றியமையாதது ஆகும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *