Search
Friday 22 November 2019
  • :
  • :

கண்ணின் நீர் அழுத்தம் (Glaucoma)

கண்ணின் நீர் அழுத்தம் (Glaucoma)

குருதியின் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் (Hypertension) போது உடலும் கண்களும் பாதிக்கப்படுகின்றன. அதேபோல கண்ணினுள் சுரக்கும் Aqueous Humour எனப்படும் கண்ணின் முன் ரசம் செல்லும் பாதை அடைக்கப்பட்டால் ரசத்தினழுத்தம் அதிகமாகும்.இது 17-22mm இடைப்பட்டதாக காணப்படும். இம் மட்டத்தினை விட அதிகரித்தால் அல்லது ஒரு கண்ணை விட மறு கண்ணில் 3mm அதிகமாகக் காணப்பட்டால் அது கண்ணின் நீர் அழுத்தம் எனப்படும்.

கண்ணின் நீர் அழுத்தம் அதிகமாகும்போது கண் கனமாகின்றது. டொனொமீடரினால் (Tonometer) கண்ணின் நீர் அழுத்தம் கணிக்கப்படுகின்றது. இது காலை, மாலை மற்றும் இரவில் அதிகரிக்கலாம். இதனை தினவலி Diurnal Variation என அழைப்பர். ஆகையால் ஒரு நேரத்தில் கணக்கிடப்பட்ட கண்ணின் நீர் அழுத்தம் சரியாக இருக்கின்றதா அல்லது அதிகரிக்கவில்லையா என்பதனை உடனே கணித்துவிட முடியாது.

நம் நாட்டில் பல இலட்சக்கணக்கானோர் இந் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும் சிலருக்கு இந் நோய் நாற்பது வயது பூர்த்தியடைந்த பின்னரே ஏற்படுகின்றது. மேலும் சிலருக்கு பரம்பரை நோயாக வரவும் வாய்ப்பு இருக்கின்றது. பலருக்கு தாம் இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பது தெரியாது. ஏனென்றால் இதனால் கண்சிவப்பாதல், கண்வலி என்பன இருக்காது. எனவே நாற்பதை அடைந்தவர்கள் கண்ணின் நீர் அழுத்தம் சரியாக காணப்படுகின்றதா என்பதை அறிந்துக்கொள்ளல் அவசியம். கண்ணின் நீர் அழுத்தத்தை பரிசோதிக்க பார்வை (Vision), கண்ணின் நீர் அழுத்தம் (Tension), கண்ணின் உட்புறத்தை அறிதல் (Fundus Exam) மற்றும் தோற்றப் பரப்பு (field of vision – central & peripheral) போன்ற நான்கு சோதனை முறைகளை மேற்கொள்வது முக்கியமாகும். இச் சோதனைகளின் பின் சிகிச்சை அளிக்கப்படும். இதனை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால் குணப்படுத்துவது எளிது. இந்த நான்கில் ஏதாவது இரண்டு குறைந்து காணப்பட்டு மருந்தினால் கட்டுப்படுத்த முடியாவிட்டால் அறுவை சிகிச்சை செய்தல் வேண்டும். அறுவை சிகிச்சையை தள்ளிப்போட்டால் பார்வையை இழக்க நேரிடும்.

glaucoma-prevention-5-728கண்ணின் நீர் அழுத்தமானது நான்கு வகைப்படும்
1. நீண்டகால சாதாரண கண்ணின் நீர் அழுத்தம் (Chronic Simple Glaucoma)
2. சடுதியான பாதிப்பு கண்ணின் நீர் அழுத்தம் (Acute Congestive Glaucoma)
3. பரம்பரை கண்ணின் நீர் அழுத்தம் (Congenital Glaucoma)
4. இரண்டாம் நிலை கண்ணின் நீர் அழுத்தம் (Secondary Glaucoma)

நீண்டகால வகை: கண்ணின் நீர் அழுத்தம் பல வருடங்களாகவும் மிக சகதரணமாக தென்படககூடிய கொடிய நோய் ஆகும்.இது சிறுகச் சிறுக மாதங்கள், வருடங்களில் அதிகரிக்கும். வலி, தலைவலி அல்லது கண்களைச்சுற்றி ஏதோ இருப்பது போல தோன்றுதல், பக்கப்பார்வை குறைதல், விளக்கு ஒளியைச்சுற்றி பல வண்ணங்கள் தோன்றுதல் என்பன இதன் அறிகுறிகளாகும்.

சடுதியான வகை: இது திடீரென வரக்கூடிய அதிக வலியைக் கொடுக்க கூடிய நோயாகும். திடீரென பார்வை மங்குதல், விளக்கைச்சுற்றி வானவில் போன்று காணப்படுதல், கண்வலி, தலைவலி, குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியரை நாடவும். ஏனெனில் அறிகுறி தென்பட்டு சில மணித்தியாலங்களில் பார்வையை இழக்க நேரிடலாம்.

பரம்பரை வகை: இது பிறவி நோய். குழந்தைகளுக்கு சில மாதங்களிலோ அல்லது வுருடங்களிலோ ஏற்படக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது. குண்ணிலுள்ள கண்முன் ரசம் வெளியேறும் துவாரங்கள் பிறவிலேயே சரியாக செயற்படாமையினால் ஏற்படுகின்றது. குண்ணில் நீர் வழிதல், கண்கூசுதல், கண் எரிச்சல்,குழந்தை தலையணை மீது முகத்தை அழுத்தி அழுதுல், கண் அளவுக்கு மீறி பெரிதாக காணப்படல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் கண் மருத்துவரை அணுகுதல் வேண்டும். ஆரம்ப கட்டத்தில் குணப்படுத்த முடியாவிட்டால் கண்ணில் குழிவிழுதல் ஏற்பட்டு பார்வையில்லாமல் போகும். இதற்கு கோனியாடமி(Goniotomy) என்ற அறுவை சிகிச்சை செய்யப்படும்.

Microsoft Word - 10790-Glaucoma.docxஇரண்டாம் வகை: கண்ணின் நீர் அழுத்தம் கண்ணழற்சி போன்றவையினால் ஏற்படுகின்றது. கண்புரை நோய்க்கு சரியான சிகிச்சையளிக்காவிடின் கண்ணின் நீர் அழுத்தம் அதிகரித்து பார்வை இழக்கப்படுகின்றது.
கண்ணில் புற்றுநோய் (Tumours) இருத்தல், கண்ணில் காயங்கள் ஏற்படுதல், இரத்த அழுத்தம் (Hypertension), நீரிழிவு நோய் (Diabetes), மேககிரந்தி நோய் (Syphilis) போன்றவைகளாலும் கண்ணின் நீர் அழுத்தம் அதிகரிக்கின்றது.

கண்ணின் நீர் அழுத்தத்தினால் பார்வையை இழந்த பின்னர் திரும்பிப் பெற வாய்ப்பில்லை. ஆகவே ஆரம்பக் காலத்திலேயே இதனைக் கண்டுபிடித்து தகுந்த சிகிச்சைகளை மேற்கொண்டு ஒழுங்காக கடைப்பிடித்தல் வேண்டும். இது பற்றிய விழிப்புணர்ச்சியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தல் வேண்டும். நன்றாக குணமடைந்தவர்கள் தொடர்ந்தும் மருத்துவரின் ஆலோசணைகளைப் பெறுதல் வேண்டும். ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் கண்ணாடி அணிந்தாலும் கண்ணின் நீர் அழுத்தம், பார்வைக்களம் முதலியவற்றை தெரிந்துக்கொள்ளல் வேண்டும். பெற்றோர்கள் அல்லது நெருங்கிய உறவினர்கள் இந் நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியம் செய்துக்கொண்டிருந்தால் அவர்களது பிள்ளைகளும் 38-40 வயதில் கண்ணின் நீர் அழுத்தம் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே அவர்களின் வாரிசுகள் 38 வயதை அடையும் போது அனைத்து பரிசோதனைகளையும் செய்து கொள்ளல் நல்லது. பார்வை என்பது எமக்கு கிடைத்த பொக்கிஷ மாகும். ஆகவே அதனைப் பேணிப்பாதுகாத்தல் அவசியமாகும்.

பஸ்னா ஹுசைன்  ( 3ம் வருடம், மொழிப்பெயர்ப்பு துறை மாணவி, யாழ் பல்கலைக்கழகம்). 


One thought on “கண்ணின் நீர் அழுத்தம் (Glaucoma)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *