தலைப்பு செய்திகள்

கண்மணிகாள் நீங்கள் என்றென்றும் எம் காவல் தெய்வங்கள்

கண்மணிகாள் நீங்கள் என்றென்றும் எம் காவல் தெய்வங்கள்

அஞ்சாத நெஞ்சுரம் கொண்டு
கண் துஞ்சாது களமதில்
கந்தகப் புகைக்குள்ளும் கடும்குண்டு மழைக்குள்ளும்
வெந்து வேகி சன்னங்கள் உடல்துளைக்க விழுப்புண் ஏந்தி
செங்குருதி சிந்தி எங்கள் இனம் வாழ உயிரீந்தீர்கள் !

மண்காத்து மறதமிழர் மரபுவழிவந்த மானம் காத்து;
பண்பாடு காத்து பாருள்ள தமிழர்தம் முகவரி காத்து;
எண்ணரும் தியாகங்கள் புரிந்து எங்களைக் காத்த
கண்மணிகாள் நீங்கள் என்றென்றும் எம் காவல் தெய்வங்கள் !

உங்களைப் புதைத்த கல்லறைகளை சிதைத்த பகைவனால்
நீங்கள் எம்முள் விதைத்து சென்ற விடுதலை கங்குகளை அணைக்க முடியவில்லை -அதை
அழிக்க நினைக்கையில் பெரும் அனலாய் மாறி அவன் கதை முடிக்கும்
அடுத்த அடுத்த தலைமுறை நெஞ்சிலும் உங்களுக்காய் கார்த்திகை தீபங்கள் ஏற்றும் !

                                                                                                                -கொற்றவை


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *