தலைப்பு செய்திகள்

காப்பாற்ற கடவுள் வருவாரோ ?

காப்பாற்ற கடவுள் வருவாரோ ?

அங்குல அங்குலமாக
எங்குல நிலங்களை…
சிங்கள திமிங்கிலம் விழுங்க
சங்குடன் சேமக்கலமும் ஒலித்து
செம்புகள் தூக்குது; அரசுக்கு
ஒரு கூட்டம்!

நெம்பினால் தூக்கி
குமிழ்த் தூம்பினுள் விட்ட
அலவன் நண்டுகளாய்….
இழுபட்டுக் கொள்ளுது
இன்னொரு  கூட்டம் !

கட்சிக்கு கட்சி கனக்க
கருத்து வேறுபாடு
ஒத்துப்போவதில் …
குத்துப்பாடு
பிடுங்குப்பாடு
சாண் ஏறுவதில் கூட
வீண் வாதம்
விதண்டா வாதம்

மேய்ப்பான் இல்லா
மந்தைகளாக….
ஈழத்தில் தமிழினம்!
காப்பாற்ற; என்ன
கடவுள் வருவாரோ ?

நம்பிநின்ற  மக்களோ
நடுத்தெருவில் போராட…
மக்களுக்காய் நாம்
மக்களுக்காய் நாம் என்று
எம்பி எம்பிக் குதிப்பாரே
கேளும் ஐயா-நீவீர்
ஓன்றுபடும் வேளையில் -எல்லாம்
தின்றுவிடும் திமிங்கிலம் !

-கொற்றவை

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *