செய்திகள்

காலமிது காலமிது காசம் அகலும் காலமிது : உலக காசநோய் தினம் -24.03.2019

காலமிது காலமிது
காசம் அகலும் காலமிது
நேரமிது நேரமிது
நேர்மையுடன் சேவை புரிந்திட
குவளயத்தில் பிரளயத்தை
காசத்தால் காவாதே
கோலமிது கோலமிது
தொற்றினையே அற்றி இனிதே.

இருமல் சளி காய்ச்சல் களைப்பு
அவற்றுடன் உடல் மெலிவு உதிரச்சளி
காசத்தின் அறிகுறிகள் காண்
நோயறிகுறி உடன் உற்றால் இன்றே
நுண்காட்டிச் சளிச்சோதனை இன்றே
எந்திரச் சளிச்சோதனை நெஞ்சு
ஊடுகதிர்ச் சோதனை, தோற் சோதனை நன்றே.

காசத்தை துருவி அறியும் சோதனை
நோயுற்றோர் உடன் உற்றால் இன்றே
மாலைக் காய்ச்சல், இருமல், உடல் மெலிவு
சளியுடன் உதிரம் உணவில் விருப்பமின்மை
காசநலன் நோக்கும் சுட்டி காண்
ஒளியுள்ள எதிர்கால சமூகநலன் பேணுவோம்.

ஆறு மாதச் சிகிச்சையில் நலம்
கூறுக குணமடையும் காசத்தை மற்றோர்க்கு
விறு விறுவென இன்றே செயலுறுவீர்
மறு வில்லா வாழ்வு வையகத்தில் வாழ்ந்திடவே.
பாலமிது பாலமிது
பல்துறைசார் பார்வையுடன்
காசநலன் மேன்பாட்டு நலத்துறையின்
கோசமிது கோசமிது கேளீரே இன்று

தாளமிது தாளமிது
தரணியிலே காசஇறப்பில்
காலமிது காலமிது
மழலைக் காசமகலும் காலமிது.

நேசத்தால் சுகநலத்தின் சிகிச்சையிது
மேதினியில் நேரத்தில் செய்திடுவோம்
பாதியிலே சிகிச்சையினை நிறுத்தாதீர்;
நாதியற்றுப் போகும் வாழ்வு
ஆதியிலே தோன்றிய காசப் பிணியை
அநாதி ஆக்கிடவே அர்ப்பணிப்போம்
நீதியுடன் எமக்கு அனுசரனை தாரீர்
பீதியில்லாது பிணியினை அகற்றுவோமே.
உள ஊனமுற்ற தமிழ் இளம்சந்ததி

குழந்தைகளின் மூளையின்விருத்தி அவர்களின் ஆளுமையினையும், அவர்களது எதிர்கால வாழ்வையும் தீர்மானிக்கின்றது. மூளையில் நரம்புக் கலங்களும், நரம்புக் கலங்களின் இணைப்புக்களும் தாயின் கருவில் இருந்து உருவாகி இரண்டு வயது வரை அதிகமாகும். அதன் பின்னர் நரம்புக் கல வலைப்பின்னல்கள் ஓர் சீர்த்திடநிலையை அடையும். இச்செயல்முறை (Neural Pruning) நரம்பிணைப்புச் சீர்மை ஆகும். இவ் நரம்பிணைப்புச் சீர்மை, மூலக்கூற்றுக் கட்டமைப்புக்களாலும் ஓமோன்களாலும் தீர்மானிக்கப்படுகின்றது. இவை முறையாக இல்லாதவிடத்து, நுண்ணறிவுத்திறன் குறைவு, உணர்ச்சி அறிவு குறைவு என்பவற்றுடன் மனச்சோர்வு, உளப்பிளவை நோய், மெல்லக் கற்கும் குழந்தைகள் என பல குறைபாடுகள் ஏற்பட இடமுண்டு.

TB Free

1999தொடக்கம் 2009ம் ஆண்டுக் காலப்பகுதியில் எமது பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் வெடிஓசைகள் அளவிட முடியாது. அவை விமானக்குண்டுத் தாக்குதல்கள், எறிகணை வெடிப்புக்கள், குண்டு வெடிப்புக்கள் எனப் பல. இக்காலத்தில் கருவுற்ற குழந்தைகளிலும் 10வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிலும் நரம்பிணைப்புச்சீர்மை (Neural Pruning) வெகுவாக பாதிக்கப்பட்டமைக்கான ஏதுநிலை உள்ளது. ஏனெனில் குண்டு வெடிப்புச்சத்தங்களின் போது வெளிவரும் அதிர்ச்சி, உடலில் கோட்டிசோல் (Cortisol), நோர் எபிநெப்ரின் (Norephine phrine) எனும் ஓமோன்களை அதிக அளவில் உருவாக்கி அதன்மூலம் நரம்பிணைப்புச் சீர்மையினை வெகுவாகப் பாதிக்கின்றது.

முன் மூளையில் உள்ள நரம்புக்கல இணைப்புக்களில் ஏற்படும் பாதிப்புக்கள் புத்திக்கூர்மையில் பாதிப்பை ஏற்படுத்தும். ஞாபகசக்தியில் பாதிப்பை ஏற்படுத்தும். கவனிக்கும் திறனில் பாதிப்பை ஏற்படுத்தும். இலக்கினை அடையும் மனப்பாங்;கினை பாதிக்கும்.

தற்போது வெளியாகிய க.பொ.த. உயர்தர பரீட்சையில் வடபகுதி மாணவர்கள் தேசிய மட்டத்தில் மீத்திறமை குன்றியமைக்கு இம்மாணவர்கள் குழந்தைகளாகப் பிறந்த 1999ம் ஆண்டு காலப்பகுதியில் எமது பிரதேசத்தில் நிகழ்ந்த கடுமையான குண்டுச் சத்தங்களை இன்று நாம் மீட்டுப் பார்க்க வேண்டும். இம்மாணவர்கள் தென்பகுதி மாணவர்களுடன் போட்டி போட முடியாமைக்கு யுத்த உள ஊனமும் ஒரு காணமாகும். இந்நிலை இன்னும் 10 வருடங்களுக்கு நீடிக்கும்.

எனவே 1972ம் ஆண்டில் கல்வியில் பல்கலைக்கழக அனுமதியில் முன்ணியில் இருந்த வடபகுதி மாணவர்கள், கண்ணுக்குத் தெரியாத யுத்த வடுவினால் பின் தள்ளப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே இவர்களுக்கு என விசேட நிவாரணம் அளிக்கப்படல் வேண்டும். இது வெட்டுப் புள்ளி விடயமாக இருக்கலாம். அன்றேல் வடபகுதியில் பிரத்தியேக பல்கலைக்கழக அமைவாக அமையலாம்.

அடுத்து முன்மூளையில் நரம்பிணைப்புச் சீர்மைக் குறைபாடானது போதைப்பொருள் பாவனை, மதுபானம் பாவித்தல், சமூகத்திற்கு ஒவ்வாத நடத்தைகள் என்பனவற்றை ஏற்படுத்தும். இதனையும் இன்றைய இளம் தலைமுறைகளில் விரகிக் காணப்படுவதனை நாம் கண்களால் தினமும் காண்கின்றோம். இவர்களும் 1999ம் ஆண்டிற்கும் 2009ம் ஆண்டிற்கும் இடையில் பிறந்தவர்களாகவே உள்ளனர்.

எமது இளம் சந்ததியினர் கடந்த கால துர்ப்பாக்கிய சூழலினால் பாரிய உள ஊனத்திற்கு உட்பட்டு உள்ளனர் என்பது வெள்ளிடைமலை. இதனை சமூக மட்டத்தில் எதிர்கொள்ள விசேட கல்விச் செயன்முறை இன்றியமையாதது ஆகின்றது. மெல்லக் கற்றல் தொடங்கி (Slow Learners) உணர்வு மதிநுட்பம் (Emotional Intelligence) மீத்திறமையில் போட்டியிட முடியாத நிலை வரை இவ்வுள ஊனம் பாதித்து உள்ளது.

மருத்துவர் சி. யமுனாநந்தா