Search
Thursday 15 November 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

காலமும் வெளியும் – இயற்பியல் கருதுகோள்களிற்கான இலகு மாதிரி

காலமும் வெளியும் – இயற்பியல் கருதுகோள்களிற்கான இலகு மாதிரி

மருத்துவர். சி. யமுனாநந்தா

எமது மாணவர்கள் இயற்பியல் ஆய்வில் ஆர்வம் காட்டல் அவசியம். ஆண்டு 11, 12, 13இல் கல்வி கற்பிக்கும் விஞ்ஞான, பௌதீக, கணித ஆசிரியர்கள் இயற்பியல் கருதுகோள்கள் பற்றிய அடிப்படை விளக்கங்களை மாணவர்களுக்கு எடுத்துக்கூறல் வேண்டும்.

தற்போதைய விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி இயற்பியல் கருதுகோள்களில் புதிய பரிமாணத்தை அளித்துள்ளது. இவை நியூட்டன், ஜயன்ஸ்டீன் ஆகியோர்களது சார்புக் கோட்பாடுகளுக்கு அப்பால் விஞ்ஞானத்தினை இட்டுச் சென்றுள்ளது. அஞ்ஞானத்தினை எமது மாணவர்களுக்கு விளக்குவது எமது கடமையாகின்றது.

காலத்தினையும், வெளியினையும் திணிவு வளைக்கின்றது என்பது தற்போதைய விஞ்ஞானிகளின் உய்த்தறிவாகும். உதாரணமாக எமது அகிலத்தின் காலவெளியினை சூரியனின் திணிவு வளைக்கின்றது. அதாவது சூரியன் இன்றேல் எமது அகிலத்தின் காலவெளி தட்டையாக அமையும். காலவெளியின் தளத்தன்மையையும், அதில் திணிவின் தாக்கத்தையும் மாணவர்களுக்கு எளிய மாதிரிமூலம் விளக்கலாம்.

அதாவது ஒரு அழுத்தமான தட்டில் வர்ணத்தீந்தையை ஊற்றின் அது எவ்வாறு தளவடிவில் பரவி இருக்கின்றதோ அவ்வாறானதே திணிவுகள் அற்ற காலவெளி ஆகும். (Space time fabric without mass)

அடுத்து அழுத்தமான தட்டில் சிறிய மாபிள்கள், உலோக உருண்டைகள் என்பவற்றை வௌ;வேறு இடங்களில் வைத்தபின் அத்தட்டில் வர்ணத்தீந்தைகளை ஊற்றின் அது எவ்வாறு பரவி கோளங்கள் உள்ள பகுதியில் வளைந்து செல்கின்றதோ அவ்வாறான காலவெளி திணிவினால் வளைக்கப்படுகின்ற தன்மை (Space time fabric without mass) இத்தட்டில் உள்ள ஒரு கோளமும் அதனை சூழ வளைந்த தீந்தைப் பிரதேசமும் எமது அகிலத்தின் காலவெளியாகக் குறிப்பிடலாம்.

இதில் இருந்து காலமும் வெளியும் புள்ளிக்குப் புள்ளி வேறுபடும் என்பதனையும் அது ஒரு சீராக அமையாது என்பதனையும் உய்த்தறியலாம். காலமும் வெளியும் அவதானிப்பவரது வேகத்திற்கு ஏற்ப மாறுபடும்.

ஈர்ப்பு அலைகளும் காலவெளியில் ஒளியின் வேகத்தில் பயணிக்கின்றன. இவை காலவெளிக்கு அப்பாலும்; பயணிக்கின்றன. ஈர்ப்புவிசை திணிவில் மட்டுமல்ல. காலவெளியில் அதன் நிலையிலும் தங்கி உள்ளது. அதாவது ஈர்ப்பு விசை திணிவிலும் நிலையிலும் மட்டும் தங்கி இருப்பதில்லை. காலவெளியின் வளைவிலும் தங்கி உள்ளது. 1

காலவெளியின் இயற்பியல் பற்றிய உய்த்தறிவானது எமது அகிலத்தின் காலவெளியினைச் சூரியனது திணிவு பாரிய அளவில் வளைவுறச் செய்து உள்ளதை வெளிப்படுத்தியுள்ளது. காலவெளிக்கு அப்பால் சூரியனுக்கு ஓர் ஆள்கூற்றினை நாம் கணிப்போமாயின் அவ்வாள்கூற்றினை நோக்கி பூமி 8 நிமிடம் 20 செக்கன்களில் நகர்கின்றது. அதாவது காலவெளிக்கு அப்பால் பூமி – சூரியனது சார்பு இயக்கம் 8 நிமிடம் 20 செக்கன் இடைவெளியில் அமைகின்றது. இதனை மாணவர்களுக்கு விளக்குவதாயின் ஒரு நேர்கோட்டுப் பாதையில் இரு கார்கள் 8 நிமிடம் 20 செக்கன் இடைவெளியில் பயணிப்பதுபோல் காலவெளிக்கு அப்பால் பூமியினதும் சூரியனதும் நகர்வுகள் அமைகின்றன. இது எமக்கு சூரியனில் இருந்து ஒளியலைகள் 8 நிமிடம் 20 செக்கனில் வருவது போல் தோற்றமளிக்கின்றது. ஆனால் உண்மையில் 8 நிமிடம் 20 செக்கனில் சூரியன் இருந்த இடத்தை நோக்கி காலவெளிக்கு அப்பால் பூமியே நகர்கின்றது.

அகிலத்தின் வளைவு பாரிய திணிவுகளால் தீர்மானிக்கப்படுகின்றது. அவற்றில் ஒரு வகையே கருந்துளைகள் ஆகும்.

இதனையும் நாம் தீந்தை பரவிய தட்டில் உள்ள பருமனில் பெரிய கோளங்களுக்கு ஒப்பிடலாம்.

காலவெளிக்கு அப்பாலான பயணம், காலவெளியின் வளைவுகளுக்கு இடையில் உருவாக்கப்படும் திணிவு சக்தி மாற்றத்தினால் சாத்தியமாகும். இங்கு நடைபெறும் சக்திப் பரிமாற்றம் குவாணட்டம் வெற்றுச்சக்தி (Quantum vacuum energy) அல்லது Casmir Effect எனப்படும். இவை இயற்கையாகவே நிகழலாம். அதாவது காலத்தையும், நேரத்தையும் பெருமளவான சக்தியைப் பிரயோகிப்பதனால் வளைக்கலாம். இச்செயன்முறை உருள்புலம் (Wrap field) மூலம் நிகழ்த்தப்படும். இதன்மூலம் ஒரு அறையின் கனவளவை ஒரு நீர்க்குமிழியின் கனவளவுக்கு ஒடுக்கலாம்.வேற்றுக் கிரகவாசிகள் காலவெளியைக் கடந்து பயணிக்கும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குகின்றனர். இத்தொழில்நுட்பம் உருள் தொழில்நுட்பம் (wrap up technology) என்பர். இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே பறக்கும் தட்டுக்கள் செயற்படுவதான அவதானிக்கலாம். நாம் ஊர்ந்துஉருளிகளைப் பயன்படுத்துகின்றோமோ அவ்வாறே வேற்றுக் கிரகவாசிகள் உருள் தொழில்நுட்பவூர்திகளைச் சாவகமாகப் பயள்படுத்தலாம். காலவெளியின் தட்டையான பரப்பில் சிறு கோளங்களுக்கு இடையே தீந்தை பரவியது போல் காலவெளியினைக் கருதின் உருள் தொழில்நுட்பவூர்திகள் ஒரு கோளத்தில் இருந்து மறுகோளத்திற்கு செல்லும் பொறிமுறையை காலவெளியான தீந்தை படலத்தை தாண்டிச் செயற்படும் தகையது என்பதை மாணவர்களிற்கு விளக்கலாம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *