Search
Thursday 26 November 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கிழக்கு தமிழ் மக்களின் பாதுகாப்பும் வடக்கு கிழக்கு இணைப்பும்

கிழக்கு தமிழ் மக்களின் பாதுகாப்பும் வடக்கு கிழக்கு இணைப்பும்

யதீந்திரா

அண்மையில் இடம்பெற்ற ISIS தற்கொலை தாக்குதல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் செறிவாக வாழும் சம்பாந்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சமர் ஆகியவற்றை தமிழ் அரசியல் நோக்கில் எவ்வாறு விளங்கிக்கொள்வது என்பது முக்கியமானது. இந்தச் சம்பவங்கள் அனைத்தினதும் விளைவாக, கிழக்கு தமிழ் மக்கள் பாதுகாப்பற்ற சூழலுக்குள் தள்ளப்பட்டிருக்கின்றனரா என்னும் கேள்வி எழுகிறது. தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்துதல் என்னும் அரச நிகழ்சிரலில் எப்போதுமே கிழக்கு மாகாணமே முதல் தெரிவாக இருந்திருக்கிறது. தமிழர் தாயகக் கோட்பாட்டை பலவீனப்படுத்துவதற்கான அரசின் தந்திரோபாய விளையாட்டு மைதானமாக கிழக்கு மாகாணமே இருந்தது. திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் தொடங்கி, கிழக்கில் தமிழர்களுக்கு போட்டியாக முஸ்லிம்களை அரவணைத்து பலப்படுத்துதல் என்னும் உபாயம் வரையில், அனைத்துமே கிழக்கு தமிழ் மக்களை அரசியல் சமூக பொருளாதார ரீதியில் பலவீனப்படுத்தும் உள்-நோக்கம் கொண்டதுதான். இதனை கிழக்கு முஸ்லிம்கள் மிகவும் உச்ச அளவில் பயன்படுத்திக் கொண்டனர். ஆட்சியாளர்களின் தமிழர் விரோத செயற்பாடுகளை முஸ்லி;ம்கள் ஒரு பேதுமே எதிர்த்ததில்லை. அவ்வாறு எதிர்த்தால் தங்களின் நலன்கள் பாதிக்கப்படும் என்னும் அடிப்படையில்தான் சிந்தித்தனர். நியாயமான விடயங்களில் கூட அவர்கள் எப்போதுமே தமிழர்களோடு நின்றதில்லை. தங்களது ஒவ்வொரு செயற்பாடுகளையும் இலாப நட்டக் கணக்கின் ஊடாகவே அணுகினர். இதனை முஸ்லிம்களால் மறுக்கவும் முடியாது.

கிழக்கை பொறுத்தவரையில், விடுதலைப் புலிகளால் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி அயுதங்களையும் பெற்றுக்கொண்டனர். முஸ்லிம் குழுக்கள் மத்தியில் ஆயுதப்பாவனை பரவலாக இருக்கிறது என்பது அரச புலனாய்வு பிரிவினருக்கு தெரியாத சங்கதியல்ல. விடுதலைப் புலிகள் என்னும் காரணத்தை முன்வைத்து அரசாங்கமும் அதனை ஊக்குவித்தது. 2009இல் யுத்தம் முடிவுற்றதைத் தொடர்ந்து, அரசாங்கம் அவ்வாறான முஸ்லிம் ஆயுதக் குழுக்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதாக கூறி, ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான காலக்கெடுவையும் வழங்கியது. இதனடிப்படையில், 2009 யூலை 4ம் திகிதி, முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் ஒரு தொகுதி ஆயுதங்களை ஒப்படைத்தனர். இந்த ஆயுத ஒப்படைப்பு நிகழ்வு காத்தான்குடி ஜும்மா மீரா பள்ளிவாசலில் இடம்பெற்றது. இதன் போது, தற்போது கிழக்கு மாகாண அளுனராக இருக்கும் ஹிஸ்புல்லாவும் உடனிருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது. அவரது தலைமையின் கீழ்தான் அந்த ஆயுத ஒப்படைப்பு நிகழ்வும் நடந்தது.

TOPSHOT - In this picture taken on April 26, 2019, security personnel inspects seized items after they raid what believed to be an Islamist safe house in the eastern town of Kalmunai. - Fifteen people, including six children, died during a raid by Sri Lankan security forces as three cornered suicide bombers blew themselves up and others were shot dead, police said on April 27. (Photo by STRINGER / AFP)        (Photo credit should read STRINGER/AFP/Getty Images)

TOPSHOT – In this picture taken on April 26, 2019, security personnel inspects seized items after they raid what believed to be an Islamist safe house in the eastern town of Kalmunai. – Fifteen people, including six children, died during a raid by Sri Lankan security forces as three cornered suicide bombers blew themselves up and others were shot dead, police said on April 27. (Photo by STRINGER / AFP) (Photo credit should read STRINGER/AFP/Getty Images)

நிகழ்வில் பேசிய ஹிஸ்புல்லா – இவ்வாறானதொரு நாளில் இதே பள்ளிவாசலில் வைத்து, காலம் சென்ற ஜனாதிபதி பிரேமதாசா முஸ்லிம் இளைஞர்களின் பாதுகாப்புக்காக ஆயுதங்களை வழங்கினார். இன்று 19 வருடங்கள் கழித்து அதே இடத்தில் வைத்து அந்த ஆயுதங்கள் ஒப்படைக்கப்படுகின்றன என்று குறிப்பிட்டார். இந்தப் பின்புலத்தில் நோக்கினால் கிழக்கு முஸ்லிம்கள் மத்தியில் ஆயுதக் குழுக்கள் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இயங்கிவந்திருக்கின்றன. ஆனால் விடுதலைப் புலிகள் என்னும் வலிமையான அமைப்பு இருந்ததனால், அவர்கள் தனித்துத் தெரியவில்லை. ஆனால் இன்று அவர்கள் தனித்துத் தெரியுமளவிற்கு வளர்ந்திருக்கின்றனர். அதன் வெளிப்பாடுதான் உலகளாவி இஸ்லாமிய அரசு என்னும் நிகழ்சிநிரலுக்குள் அவர்களால் போக முடிந்திருக்கிறது. இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராக விதைத்ததை தற்போது அறுவடை செய்கிறது.

ஆனால் இவை அனைத்தினதும் விளைவுகளை இன்று கிழக்கு தமிழ் மக்களே அனுபவிக்கின்றனர். இன்று கிழக்கு தமிழ் மக்களின் பாதுகாப்பு முற்றிலுமாக கேள்விக்குள்ளாகியிருக்கிறது. முஸ்லிம்கள் மத்தியில் இந்தளவு ஆபத்தான அமைப்புக்கள் வளர்ச்சியடைந்திருப்பது கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பில் என்னுடன் பேசிய சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவர், தாம் ஒரே நாளில் பாதுகாப்பற்ற உணர்விற்கு ஆளாகியிருப்பதாக குறிப்பிடுகிறார். இடம்பெற்ற தாக்குதல்களில் அதிகம் தமிழ் கிறிஸ்தவ – கத்தோலிக்க மக்களே கொல்லப்பட்டுள்ளனர். இது தற்செயலாக நடந்ததா அல்லது திட்டமிட்ட இலக்கா என்னும் சந்தேகமும் உண்டு. இதனை வழிநடத்தியது ஐளுஐளு என்றாலும் கூட, இதனை திட்டமிட்டது முற்றிலும் உள்ளுர் வலையமைப்பான தேசிய தஹ்வீத் ஜமாத் என்னும் அமைப்புத்தான். சிங்களவர்கள் அதிகம் இறந்துவிடக் கூடாது என்னும் முன்னெச்சரிக்கையுடன்தான் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டிருக்கின்றன – என்று நம்புவதற்கான சூழலே தெரிகிறது. இதுவும் கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தாக்குதலில் ஈடுபட்ட குழுவினர் வெளியிட்டிருக்கும் காணொளில் இது முஸ்லிம்களுக்கான மண் என்று கூறியிருப்பதும், ஏனைய சமூகங்களை மிகவும் இழிவாக பேசியிருப்பதும் கிழக்கின் மீது ஒரு நிரந்தரமான அச்சத்தை விதைப்பதற்கான காரணியாக இருக்கிறது. இதனை வெமனே, அவர்கள் உண்மையான முஸ்லிம்கள் அல்ல என்னும் மேலோட்டமான பார்வையுடன் முஸ்லிம்கள் இதனை கடந்து செல்ல முற்படுவது இன்னும் ஆபத்தானது. பொதுவாக முஸ்லிம்கள் மத்தியில் எந்தவொரு சர்வதேச இஸ்லாமிய அமைப்புக்கள் தொடர்பிலும் வெளிப்படையான உரையாடல்கள் இருந்ததில்லை. அல்-ஹய்டா, ஐளுஐளு போன்ற அமைப்புக்களின் பொதுமக்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிராக ஒரு போதுமே முஸ்லிம்கள் வெளிப்படையாக பேசியதில்லை. மார்க்கம் என்று வந்தவுடன் அனைத்தையும் புறம்தள்ளும் ஒரு போக்கே அவர்கள் மத்தியில் இருக்கிறது. ஆனால் இன்று இது பற்றி வெளிப்படையாக பேசுவதும், இந்தத் தாக்குதலை கண்டிப்பதும், அவர்களது பாதுகாப்பு உணர்விலிருந்து வருகிறதே அன்றி, உண்மையான எதிர்ப்புணர்வாக வெளிப்படவில்லை. இதுதான் அவர்களது பிரதான பிரச்சினை.

தமிழ் மக்களின் அடிப்படையான அரசியல் கோரிக்கைகளில் ஒன்றான, வடக்கு கிழக்கு இணைப்பை கிழக்கு முஸ்லிம்கள் தொடர்ச்சியாக எதிர்த்து வந்திருக்கின்றனர். அவ்வாறு இணைக்கப்பட்டால் முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம் என்றும் கேள்வி எழுப்பியிருந்தனர். ஆனால் இன்றைய நிலையில், வடக்கு கிழக்கு இணைப்பு இல்லாவிட்டால் கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு என்ன பாதுகாப்பு என்னும் கேள்வி எழுந்திருக்கிறது. ஏனெனில் கிழக்கை முற்றிலும் இஸ்லாமிய மயப்படுத்தும் திட்டமொன்று முஸ்லிம் குழுக்களிடம் இருந்திருக்கிறதா என்னும் சந்தேகம் முன்னரைவிடவும் தற்போது வலுவடைந்திருக்கிறது. சிங்கள ஆளும் வர்க்கம் முஸ்லிம்களை பயன்படுத்தி தமிழர்களின் அரசியல் கோரிக்கையான வடக்கு – கிழக்கு இணைப்பை பலவீனப்படுத்தலாம் என்று கணக்கு போட, கிழக்கு முஸ்லிம் பிரிவினர் வேறுவிதமாக கணக்குப் போட்டிருந்தனரா என்னும் கேள்வி எழுகிறது. ஏனெனில் அவர்கள் வடக்கு கிழக்கு இணைப்பை தொடர்ந்தும் எதிர்த்து வந்ததற்கு பின்னால், அவர்களின் பாதுகாப்பு இருக்கவில்லை மாறாக அவர்களின் நீண்டகாலத் திட்டமே இருந்திருக்கிறது என்னும் சந்தேகத்தை இலகுவாக நிராகரித்துவிட முடியுமா?

ISIS

இன்று முஸ்லிம்களின் தாக்குதலில் கிழக்கை சேர்ந்த 29 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பில் தமிழ் தலைமைகள், தமிழ் சிவில் சமூகத்தரப்பினர் என்போரால், ஒரு கண்டன அறிக்கையைக் கூட வெளியிட முடியவில்லை. இலங்கை தமிழரசு கட்சி துக்கம் அனுஸ்டிக்குமாறு அறிவித்திருந்தது. துக்கம் அனுஸ்டிப்பதற்கு இறந்தவர்கள் இயற்கை அனர்த்தத்தால் இறக்கவில்லை. சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு ஒன்றின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். தங்களது சொந்ந மக்கள் தாக்கப்படுகின்ற போது அதனை கண்டிக்கும் ஆற்றல் கூட இல்லாதவர்களாக தமிழ் கூட்டமைப்பினர் இருக்கின்றனர். தமிழ் அரசியல் வரலாற்றில் இந்தளவிற்கு ஒரு பலவீனமான தலைமை இதற்கு முன்னர் எப்போதுமே இருந்ததில்லை. இந்த நிலைமையானது, கிழக்கு தமிழ் மக்களை தமிழ் தலைமைகள் என்போர் முற்றிலுமாக கைவிட்டு விட்டனரா என்னும் கேள்வியை கேட்குமாறு வற்புறுத்துகின்றது.

இந்த பின்புலத்தில் வடக்கு – கிழக்கு இணைப்பு என்பது இதுவரை ஒரு அரசியல் கோரிக்கையாக மட்டுமே இருந்துவந்த நிலைமை மாறி, அது கிழக்கு தமிழ் மக்களின் பாதுகாப்பு தொடர்பான கோரிக்கையாகவும் முன்வைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. நடைமுறை பிரச்சினைகளிலிருந்து, பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் பேச வேண்டிய தேவை எழுந்திருக்கிறது. கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் திருகோணமலை, அம்பாறையில் வாழும் தமிழ் மக்கள் குரலற்றவர்களாகவே இருக்கின்றனர். இதற்கு நல்ல உதாரணம். கல்முனை தமிழ் மக்கள் தங்களுக்கென ஒரு தனியான பிரதேச செயலாளர் பிரிவு தேவையென்று கடந்த 20 வருடங்களாக கோரி வருகின்றனர். ஆனால் முஸ்லிம் அரசியல் வாதிகளின் தடைகள் காரணமாக அதனை பெற முடியவில்லை. அந்தளவிற்கு அவர்கள் அரசாங்கத்தை கட்டுப்படுத்துகின்றனர். மட்டக்களப்பு ஒன்றில்தான் ஓரளவு தமிழ் மக்கள் குரலுள்ளவர்களாக இருக்கின்றனர். அதுவும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே. இவ்வாறானதொரு சூழலில், கிழக்கு மாகாணம் வடக்கோடு இணைவதன் மூலம் மட்டும்தான் நீண்டகால நோக்கில் கிழக்கு தமிழ் மக்களின் இருப்பை பாதுகாக்க முடியும். இது தொடர்பில் இனியும் மெத்தனப் போக்கோடு தமிழ் தலைமைகள் என்போரும் தமிழ் புத்திஜீவிகள் என்போரும் இருக்கக் கூடாது. கிழக்கு தமிழ் மக்களின் எதிர்காலம் தொடர்பில் கட்சி பேதங்கள், அரசியல் நிலைப்பாடுகளை புறம்தள்ளி அனைத்து தரப்பினரும் ஒரு நேர்கோட்டில் சிந்திக்க வேண்டும். கிழக்கு தமிழ் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியிருக்கின்ற சூழலை விளங்கிக் கொண்டு, அனைத்து தரப்புக்களும் வடக்கு – கிழக்கு இணைப்பின் தேவைப்பாடு தொடர்பில் ஒரு உரையாடலுக்கு தயாராக வேண்டு;ம். வெறும் தாயகம், தேசியம், தேசம் என்னும் சுலோகங்கள் நடைமுறை பிரச்சினைகளை எதிர்கொள்ள பயன்படாது. நிலைமைகளை சரியாக விளங்கிக்கொண்டு செயலாற்றாது விட்டால், மேற்படி சுலோகங்கள் இருக்கும் ஆனால் அதனை உச்சரிப்பதற்கு கிழக்கில் தமிழர்கள் தலைநிமிர்ந்து நிற்கமாட்டார்கள்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *