Search
Tuesday 14 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சர்க்கரை நோயும் கண் பாதிப்பும்

சர்க்கரை நோயும் கண் பாதிப்பும்

மருத்துவர் சி. யமுனாநந்தா

குருதியில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதனால் மட்டுமன்றி இரத்தக்குழாயில் ஏற்படும் பாதிப்பினாலும் சர்க்கரை நோய் எற்படும்.சர்க்கரை நோயினை போன்று கண் பாதிப்பும் பரம்பரையாக கடத்தப்படும் வியாதி ஆகும்.

சர்க்கரை நோய் 2 வகைப்படும்: (1) Juvenile Diabetes Type-1(சிறு வயதில் எற்படும்) இன்சுலின் கட்டாயம் தேவை. (2) (Diabetes of late onset வயதானவர்களுக்கு ஏற்படும்) இன்சுலின் அவசியம் இல்லை. உணவினாலும் உடற்பயிற்சினாலும் மாத்திரையினாலும் சரி செய்ய முடியும்.

சர்க்கரை குருதியில் அதிகமாக இருந்தால் பார்வை இழப்பு, நரம்பு பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, இருதய பாதிப்பு போன்ற பின்விளைவுகள் எந்தவித அறிகுறியும் இல்லாமலேயே ஏற்படும். காலையில் 110mg உம் சாப்பிட்டு 2 மணி நேரத்தின் பின் 180 mg சர்க்கரையும் குருதியில் காணப்பட வேண்டும்.

சர்க்கரை நோயினை கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாமே தவிர பூரணமாக குணப்படுத்த முடியாது. புகையிலை சுருட்டு சிகிரெட் மதுபானம் போன்றவற்றின் பயன்பாட்டினால் குருதியில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இரத்த பரிசோதனை செய்வது சிறந்தது.குருதியில் காணப்படும் அதிக சர்க்கரையினால் மிகச் சிறிய இரத்த குழாயில் பாதிப்புஇ அடைப்பு ஏற்படுவதால் மரணம் சம்பவிக்கின்றது.தேநீர் முதலிய பானங்களினை சர்க்கரை இல்லாமலேயே குடிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.வேண்டுமென்றால் 1 அல்லது 2 சேக்கரின் மாத்திரைகளினை உபயோகிக்கலாம்.நுஙரயடஇளுரபயச கசநந போன்றவற்றினையும் உபயோகிக்கலாம்.ஊர் மாவுப் பொருள் உணவுகளினையும் விற்றமின்கள் 14 தாதுப்பொருள் 4 இனையும் கொண்ட உணவினை உட்கொள்வதனால் குருதியில் சர்க்கரையின் அளவினை குறைப்பது மட்டுமல்லாமல் குருதியில் கொலஸ்ரோலின் அளவினையும் குறைக்கின்றது.

dieta-diabet

ஊர்-பழங்கள் பச்சை காய்கறிகளிலும் ஊர்-கோதுமை பார்லி உருளைக்கிழங்கு சோயாபீன்ஸ் அவரை முதலியவற்றிலும் இருக்கின்றது.உடற்பயிற்சியின் மூலம் குருதியில் சர்க்கரையின் அளவு குறைவதுடன் இன்சுலின் அளவும் குறைவடைகின்றது. இதனால் இதயம் திறம்பட வேலை செய்வதுடன் இரத்த ஓட்டம் அதிகரிக்கின்றது.உடற்பயிற்சி செய்யாதவர்கள் தினமும் இரண்டு தடவை அரை மணி நேரம் நடக்க வேண்டும்.மாத்திரைகள் இன்சுலின் அவசியம் எனில் மருத்துவரை நாடி உடலுக்கு தகுந்த அளவு எடுத்து கொள்ளவும்.பல வருடங்களாக இரத்தத்தில் சர்க்கரை அதிகமாக காணப்பட்டால் கண்களில் உள்ள ஒளித்திரை பாதிக்கப்பட்டு பார்வை குறைபாடு ஏற்படும்.

Retinopathy என்பது சர்க்கரை வியாதியினால் ஒளித்திரை பாதிக்கப்படுதல் ஆகும். முதலில் ஒளித்திரையில் உள்ள சிறிய இரத்த குழாய்கள் பாதிக்கப்பட்டு சில இடங்கள் பலூன் மாதிரி ஊதுவதுடன் இரத்த கசிவு ஏற்படலாம்.கண் பரிசோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டால் டுயளநச உதவியுடன் சரி செய்ய முடியும்.இதன் பிறகு ஒளித்திரையின் முக்கிய இடமான மேக்குலா வில் பாதிப்பு ஏற்படுவதுடன் அது வீங்க ஆரம்பிக்கும். இதனால் பார்வை குறைபாடு ஏற்பட்டு படிப்பதற்கும் கார் ஓட்டுவதற்கும் கஷ்டம் ஏற்படும்.

சர்க்கரை நோயாளிகளில் 100க்கு 40 பேருக்கு ஒளித்திரையில் மாறுதல் ஏற்பட வாய்ப்பு உண்டு.100க்கு 3 பேருக்கு பார்வை இழப்பு ஏற்படும்.இரத்தத்தில் புளுரோஸின் என்ற மருந்தினை செலுத்தி ஒளித்திரையில் எங்கு இரத்த கசிவு ஏற்பட்டுள்ளது என்பதனை அறியலாம். Fluorescein Dye லேசர் ஒளிக்கதிர்களை மேகுலா என்ற இடத்திற்கு அண்மையில் உள்ள கசிகின்ற குழாய்கள் மீது பாய்ச்சுகையில் அவை அடைபட்டு வீக்கம் குறையும்.ஒரு கண்ணில் லேசர் சிகிச்சை செய்வதனால் அடுத்த கண்ணில் பாதிப்பு ஏற்படாது.இளம் வயதில் ஏற்படும் இவ் வியாதியை தடுக்க GAD (Gautamic Acid Decorboxylase) என்ற புதிய மருந்தின் பயன் மிகவும் அவசியம் என கருதுகின்றனர்.பெற்றோர்களுக்கு சர்க்கரை வியாதி இருப்பின் 30-40 வயதினை அடைந்தவுடன் இரத்த பரிசோதனை செய்ய வேண்டும்.பார்வைக்குறைபாடு ஏற்பட்டால் இவ் வியாதி முற்றிய நிலையில் முழுமையாக குணப்படுத்த இயலாது. சர்க்கரை நோயினால் ஒளித்திரை மாறுபடுதல்களை தவிர கண்புரை(Cataract)கண்ணில் நீர் அழுத்தம் அதிகரித்தல்(Glaucoma)என்பனவும் ஏற்படலாம். அழகு சாதன நிலையங்களுக்கு சென்று முகத்தினை அழகு படுத்துவதனை விட கால், விரல், நகம் போன்றவைகளை சுத்தமாக வைத்து கொள்ள உதவும் Chiropodist ஜ நாடுவது சிறந்தது.

தினமும் குளித்த பிறகு சிறிது எண்ணையை கால்களில் தடவுவது நல்லது.காலணிகள் இல்லாமல் நடக்கக் கூடாது. காலுறை அணிபவர்கள் தினமும் சுத்தம் செய்து அணிய வேண்டும். உணவுஇஉடற்பயிற்சி மருந்து ஆகிய மூன்றும் அளவோடு அறிந்து உணர்ந்து பெற்றிட வேண்டும். பழைய காலத்து சாப்பாடு முறை சிறந்தது.உங்கள் எடை மீது எப்பொழுதும் கவனம் இருக்க வேண்டும் .சாதாரண மனிதனை விட கட்டுப்பாட்டுடன் வாழ்வதால்இ அதிக வேலை செய்துஇ பல நல்ல காரியங்களை செய்து பயன் பெறலாம்.

தினசரி உணவு
காலை உணவு:-8 மணி – 2 தோசை/2 இட்லி/2 அப்பம்/2 ரொட்டி துண்டு/2 சப்பாத்தி/உப்புமா/1 கோப்பை தேநீர்.

11 மணி- 1 கப் மோர்/சில துண்டு வெள்ளரி/பீட்ரூட்/1 உளுந்து வடை.
1 மணி- சாதம் 12 மேசைக்கரண்டி, குழம்பு,காய்கறி 12-16 மேசைக்கரண்டிஇ4 துண்டு கறி/3 துண்டு மீன்/ஒரு வேக வைத்த முட்டை,1 கப் இரசம், அரை கப் மோர்

மாலை உணவு:- 4 மணி- 2 இஞ்சி பிஸ்கட்/2 வடை/1 கப் தேநீர், 1 ஸ்வீடெக்ஸ்இபசித்தால் ஒரு டம்ளர் சோடாவில் எலுமிச்சை,உப்பு போட்டு அருந்தலாம் .

இரவு உணவு:- 8 மணி-2 சப்பாத்தி/2 இட்லி ஏதேனும் ஒன்றுடன் ஒரு காய்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *