Search
Wednesday 26 July 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சிதைந்து போன வீட்டில் ஓரு இசைக்கருவியுடன் முதியவர்- ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ள புதிய படம்

சிதைந்து போன வீட்டில் ஓரு இசைக்கருவியுடன் முதியவர்- ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ள புதிய படம்

அந்த இடம் ஓரு திரைப்பட செட் போல தோற்றமளிக்கின்றது- உடைந்து போன கட்டில்-தரையில் கட்டிட இடிபாடுகள் கிழிந்த ஜன்னல் சீலைகள் அனைத்தும் மிக மோசமான நிலையில் காணப்படுகின்றன. அவற்றிற்கு மத்தியில் முதியவர் ஓருவர் பைப் ஒன்றுடன் காணப்படுகின்றார்- இது அலப்போ.

அந்த நபரின் பெயர் முகமட் மொஹிதீன் அனிஸ் அபுபக்கர் எனவும் அழைக்கப்படுகின்றார்- வின்டேஜ்; கார்களை சேகரிப்பதில் ஆர்வமுள்ளவர்.

மார்ச் 9 ம் திகதி எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் மிக வேகமாக பரவிவருகின்றது.
இந்த முதியவர் ஊடகங்களில் இடம்பிடிப்பது இதுவே முதற்தடவையல்ல 2016 இல் பிரான்சின் ஏஎவ் பி இவரை சந்தித்திருந்தது. அப்போது இவர் அல்சார் என்ற பகுதியில் வாழ்ந்தார். அந்த பகுதி கிளர்ச்சிக்காரர்களின் கட்டுப்பாட்டின் கீழ் காணபட்டது- அவரிடம் அவ்வேளை முப்பது கார்கள் காணப்பட்டன. ஆனால் யுத்தம் மூர்க்கமடைந்ததை தொடர்ந்து அந்த பகுதி தற்போது அரசபடையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது.

தற்போது ஏஎவ்பி செய்தியாளர்கள் அவரை மீண்டும் சந்தித்துள்ளனர். அலப்போ நிலவரத்தை அறிவதே அவர்களது நோக்கம்-இதற்காக அவர்கள் அல்மஸ்ரியின் கார்கள் குறித்த செய்தியை சேகரிக்க முயன்றுள்ளனர். அவர்களை உள்ளுர் மக்கள் அல்மஸ்ரியின் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர்- அவரின் கார்கள் பெரும் பகுதி அழிந்துவிட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சிதைந்து போன அவரது இல்லத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த வேளை மஸ்ரி அவர்களிற்கு தனது பைப்பினை வாசித்து காட்டியுள்ளார். உடைந்து போன தனது கட்டிலில் இருந்து- சிதைக்கப்பட்ட அவரது அறையிலிருந்து அவர் அந்த இசைக்கருவியை வாசிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படமே தற்போது ஊடகங்களில் பரவி வருகின்றது.

அவர் தனக்கு மிகவும் பிடித்த பாடல் ஓன்றை பாடினார்- அது பழைய பாடல்- சிரியாவின் பிரபலமான பாடகர் ஓருவர் பாடியது- அவர் தனது கடந்த காலங்களுடன் நெருக்கமாக காணப்படுகின்றார். அந்த நினைவுகளை போற்றுகின்றார். அவையில்லாமல் தான் தனது அடையாளத்தை இழந்துவிடுவேன் என கருதுகின்றார் என தெரிவித்துள்ளார் அவரை சந்தித்த ஊடகவியலாளர் ஜோசப் எய்ட்.

நான் என் வாழ்நாளில் அந்த காட்சியை மறக்க மாட்டேன் எனது வாழ்வில் நெருக்கடிகள்- பிரச்சினைகள் – தடைகள் வரும்போதெல்லாம் தனது சிதைக்கப்பட்ட அறையில் அபுஓமர் பைப் வாசிக்கும் காட்சியை நினைத்துக்கொள்வேன் எனவும் அந்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

சிரிய மக்கள் வன்முறையை வெறுக்கின்றார்கள்- வன்முறை அவர்களிற்கு கசப்பாக உள்ளது அதன் காரணமாக அதிலிருந்து தங்கள் கவனத்தை திருப்ப முயல்கின்றனர்-இந்த புகைப்படம் அதனையே புலப்படுத்தகின்றது- இந்த புகைப்பட் மனிதனின் ஆன்மாவை தொடுகின்றது என்கிறார் அந்த படத்தை எடுத்த புகைப்படப்பிடிப்பாளர் எய்ட்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *