Search
Saturday 24 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சிவலிங்க வழிபாடு

சிவலிங்க வழிபாடு

மருத்துவர். சி. யமுனாநந்தா

ஆதியும் அந்தமும்; இல்லாத அரும்பெரும் சோதியை இலிங்கமாக வழிபடும் வழமை தொன்று தொட்டு மருவி வந்துள்ளது. இலிங்கத்தின் நீள்கோள வடிவு அகிலத்தின் வடிவாக உள்;ளது. இவ்வாறு இலிங்க வழிபாட்டின் இயற்பியல் தத்துவம் அதர்வவேதத்தில் உள்ளதாக சுவாமி விவேகானந்தர் கூறுகின்றார்.

அக்கினிக்குழம்பாக உருவாகிய பூமியே ஓர் சிவலிங்க சொரூபமாக திருக்ககைலாயமலை அமைவதாக ஞானிகள் உணருவர். அவ்வாறே பூமியின் பல பாகங்களிலும் சுயம்புலிங்கங்கள் பூமிக்கடியில் காணப்படுகின்றன. சைவசமயத்திற்கு முன்பாகவே லிங்கவழிபாடு தென்அமெரிக்காவில் காணப்பட்டுள்ளது. மேலும் இலிங்கத்தின் முப்பரிமாணம் காலத்திற்குகாலம் வௌ;வேறு மத நம்பிக்கைக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டு வந்தது. லிங்கம், சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம் என பல்பரிமாண வடிவங்களை வௌ;வேறு கோணங்களில் நோக்கும்போது இது ஒவ்வொரு பொருளைக் காட்டுகின்றது. இலிங்கத்தின் உருவினை கிறிஸ்தவர்கள் சிலுவையாக நோக்குகின்றனர். எபிரேயர்கள் தமது கடவுளாக வணங்குகின்றனர். மக்காவில் இஸ்லாமியர்கள் கர்பாவில் நீள்கோள வடிவிலான இலிங்கத்தினையே வைத்து வணங்குகின்றனர். சகல இஸ்லாமியருக்கும் மக்காவிற்கான புனித பயணம் மிகவும் இன்றியமையாதது. பௌத்தர்களும் லிங்கத்தின் அமைப்பினையே தாதுகோபுரமாக வணங்குகின்றனர்.

சுயம்பு இலிங்கங்கள் இயற்கையோடு கூடிச் செயற்படுகின்றன. மனித சரீரத்திலும் பஞ்சபூதங்கள் உள்ளன. சுயம்பு மூர்த்தி உள்ள தலங்களில் வசிக்கும் மனிதர்களே இம்மண்ணுக்கான மழை, காற்று, அக்கினி, மண்வளம் என்;பனவற்றை தீர்மானிக்கின்றனர்.

அணுவின் வடிவம் அகிலத்தின் வடிவம் நீளகோளப் பாதையாக அமையும். அதனையே சிவலிங்க உரு எமக்கு உணர்த்துகின்;றது. அவ்வாறே ஆத்மாவின் வடிவில் அணுவினைப் போன்று நீள்கோளத்தில் அமையும்.

சுயம்பு சிவலிங்கங்கள் பல மில்லியன் வருடங்;களுக்கு முன் எரிமலைக்குழம்புபோல் இருந்து உருமாற்றம் பெற்ற கருங்கற்களால் ஆனவை. இவற்றிற்கு அபிசேகம் செய்யும்போது அவற்றில் இருந்து கதிர்வீச்சுப் பாதிப்புக்களை தவிர்க்கவே இவ்விலிங்கங்கள் ஆறு, குளம், கடல், கிணறுகள் என்பவற்றுடன் சார்ந்தே அமைந்திருக்கும். இலங்கையில் பஞ்சஈச்சரங்களும் கடல்சூழ அமைந்தமையும் ஈண்டு நோக்கத்தக்கது.

பிரதோச காலத்தில் சிவலிங்க வழிபாட்டில் அபிசேகம், ஆராதனை, கற்பூரதீபம் என்பன லிங்கத்தின் அருள்வீச்சினை ஆத்மாவிற்கு வழங்கும்.

சிவலிங்கம் செய்வதற்கு ஏற்றவை எனத் திருமந்திரத்தில் கூறப்படுபவை.

முத்துடன் மாணிக்கம் மொய்த பவளமும்
கொத்தும் அக்கொம்பு சிலைநீறு கோமளம்
அத்தன் தன் ஆகமம் அன்னம் அரிசியாம்
உய்த்த அதன் சாதனம் பூமணல் இலிங்கமே.
(திருமந்திரம் 1719)

அதாவது முத்து, மாணிக்கம், அழகிய பவளம், சீவிச் செதுக்கி அழகாக்கப்பட்ட மரம், கல், திருநீறு படிகம் போன்ற வெண்மையான கற்கள் அல்லது பச்சை மரகதம், ஆகம நூல்கள், சோறு, அரிசி, மலர், மணல் எல்லாமே சிவப் பரம்பொருள் சிவலிங்கம் செய்வதற்கு ஏற்;றவை.

கெட்டித்தயிர், பசுநெய், பால், பசுஞ்சாணம் (துய்யமெழுகு) சுத்தப்படுத்தப்பட்ட செம்பு, நெருப்பு (கனல்), இரசம், நீரில் தோன்றும் வலம்புரிச்சங்கு, நன்கு சுடப்பட்ட வில்வ இலை, பொன் ஆகியவற்றினாலும் சிவலிங்கம் செய்து வழிபடலாம்.

துன்றும் தயிர் நெய் பால் துய்ய மெழுகுடன்
கன்றிய செம்பு கனல் இரதம் சலம்
வன்திறல் செங்கல் வடிவுடை வில்வம் பொன்
தென்றியங்கு ஒன்றைத் தெளி சிவலிங்கமே
(திருமந்திரம் 1720)

மேலும் ஆலயத்தில் கருவறைக்கு மேலாகக் கட்டப்பட்டுள்ள விமானம் தூல வடிவான இலிங்கமாகும். கருவறையில் எழுந்தருளியுள்ள சதாசிவம் சூக்குமலிங்கமாகும். சிவனுக்கு முன்பாக நந்திக்கும் கொடிக்கம்பத்திற்கும் இடையில் உள்ள பலிபீடம் பத்திரலிங்கமாகும்.

தூய விமானமும் தூலம் அதாகுமால்
ஆய சதாசிவம் ஆகும் நற்சூக்குமம்
ஆய பலிபீடம் பத்;திர லிங்கமாம்
ஆய அரன்நிலை ஆய்ந்து கொள்வார்கட்கே.
(திருமந்திரம் 1718)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *