Search
Saturday 5 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சூழலை அச்சுறுத்தும் ஒளிமாசு (Light Pollution)

சூழலை அச்சுறுத்தும் ஒளிமாசு (Light Pollution)

மருத்துவர் சி. யமுனாநந்தா

இயற்கைக்கு மாறான ஒளிமுதல்களால் சூழலில் ஏற்படும் பாதக நிலைகள் மிகவும் அண்மைக்காலத்தில் விஞ்ஞானரீதியாக ஆவணப்படுத்தப்பட்டு உள்ளது. இன்று உலகம் செயற்கை ஒளி முதல்களினால் இரவு முழுவதும் ஒளியூட்டப்படுகின்றது. இந்தியாவில் “ஒளிரும் இந்தியா”என்ற செயற்றிட்டத்தினால் கிராமங்கள் முழுவதும் மின்னொளி இணைப்பைப் பெற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது. இலங்கையிலும் அனைத்து வீடுகளுக்கும் மின்விளக்கு வசதி செய்வதற்கான திட்டங்கள் அமுலாக்கப்படுகின்றன. இவையாவும் சூழலின் மேலதிக ஒளியூட்டலை வழங்கும் நிகழ்ச்சிகளே ஆகும்.

இரவுநேர செயற்கை ஒளியூட்டல் தாவரங்களின் மகரந்தச் சேர்க்கையினை வெகுவாகப் பாதிக்கின்றது. இரவுநேர மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பூச்சிகளின் நடமாட்டத்தினை செயற்கை ஒளிமுதல்கள் குறைக்கின்றன. தெருவிளக்குகள், வாகனத்தின் வெளிச்சம், ஒளிகாலும் இருவாயிகளின் (LED) ஒளிர்வுகள் இரவு மகரந்தச் சேர்க்கைக்கு உதவும். பூச்சிகளின் வாழ்க்கையை வெகுவாகப் பாதிக்கின்றது. இவ்வாறு ஒளிக்கு ஒழிக்கும் பூச்சிகள் ஒழியத் தொடங்கிவிட்டன. இதனால் அப்பூச்சிகளினால் மகரந்தச் சேர்க்கை அடையும் தாவரங்களும் பாதிப்படைந்து அவற்றில் இருந்து விதைகள் உருவாகும் தன்மையும் அருகி வருகின்றது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அய்வில் ஆய்வாளர்கள் இருட்டில் பார்க்கும் கண்ணாடிகளை அணிந்தவாறு (பின்லேடனைப் பார்ப்பதற்கு அமெரிக்க சீல்படை உபயோகித்த Infrared கதிர் கண்ணாடிகள்) காட்டுச் சூழலில் 300 வகையான பூச்சிகளைத் தாவரங்களில் அவதானித்தனர். பின் அவ்விடத்தினை ஒளியூட்டியபோது 62% மான பூச்சிகள் தாவரங்களைவிட்டு அகன்றன. மேலும் தாவரங்களின் விதை உற்பத்தியாதலும் 13% குறைவடைந்தது. இது சூழல்சாகியத்தை இரவு நேர ஒளிர்வு வெகுவாகப் பாதிக்கின்றது என்பதை எடுத்துக்காட்டுகின்றது. இது எமது சூழலில் இருந்து பல தாவரங்களும், பூச்சிகளும் உணவுச்சங்கிலி வழியே ஏனைய உயிரினங்களும் அருகிப் போகக் காரணமாக அமையலாம். எனவே சூழலில் இரவுநேர ஒளியூட்டலைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

art_of_saving_electricity_by_rofellos-d58atry

மேலும் பகலில் மகரந்தச் சேர்க்கையினை நிகழ்த்தும் பூச்சிகளும் இரவு ஒளியில் நிகழ்த்தப்படும் செயற்கையானது சூழலில் பகுதியாக மகரந்தச் சேர்க்கைக்கு உட்பட்டு முளைதிறன் பாதிக்கப்பட்ட விதைகளை உற்பத்தியாக்குகின்றன.

இரவுநேர ஒளியூட்டல் தாவர சாகியத்தினையும் பூச்சியினங்களையும் பாதிப்பதுடன் மட்டுமல்லாது மனிதன் உட்பட ஏனைய உயிரினங்களையும் பாதிக்கின்றது. மனிதனும் ஏனைய உயிரினங்களிலும் உள்ள உடற்றொழியல் சக்கரத்தினை (Biological clocks) இச் செயற்கை ஒளியூட்டல்கள் பாதிக்கின்றன.

நிலா ஒளியின் வட்டத்திலேயே கடல் ஆமைகளின் இனப்பெருக்கம் அமைந்து உள்ளது. ஆனால் கடற்கரைகளின் உள்ள பாரிய கட்டடங்களில் இருந்து கடலை நோக்கிப் பாய்ச்சப்படும் ஒளிகளினால் கடல் ஆமைகளின் இயற்கை பாதிக்கப்பட்டு, தவறாக கடற்கரையினை நோக்கி நகர்கின்றன. அவ்வாறே வலசைப் பறவைகளின் நடமாட்டமும் செயற்கை ஒளிமுதல்களால் பாதிக்கப்படுகின்றன. பல பறவைகள் செயற்கை ஒளிகளால் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி புதிய சூழலில் மரணிக்கின்றன.

மனிதனிலும் செயற்கை ஒளியூட்டல் உடற்றொழியல் ரீதியில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இரவு பகல் ஓமோன்களின் அளவில் மாற்றம் ஏற்படுகின்றது. குறிப்பாக மெலட்டோனின் ஓமோனில் ஏற்படும் மாற்றம் பல நோய்நிலைகளை புற்றுநோய் உட்பட ஏற்படுத்தலாம். அடுத்து மாதவிடாய்ச் சக்கரத்தில் பாதிப்பு ஏற்படும். மனச்சோர்வு, களைப்பு, பாலியல் நாட்டம் குறைவு ஆகிய நிலைகளும் அவதானிக்கப்பட்டுள்ளன.

ஒளிமாசு எம்மை அச்சுறுத்தல் ஓர் சூழலியல் பிரச்சினையாகும். ஒளி மாசடைதலின் தன்மையை அதனைக் கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக ஐந்து வகையாக வகைப்படுத்தலாம்.
1. அத்து மீறிய ஒளிப்பாச்சுகை (Light trespass)
2. மேலதிகமான ஒளியூட்டல் (Over illumination)
3. செறிவான ஒளிப்பாய்ச்சல் (Glare)
4. கூட்டமாக்கப்பட்ட ஒழுங்கற்ற ஒளிப்பாய்ச்சல் (Light Clutter)
5. வான் ஒளிரல் (Sky Glow)

என்பனவையே அவை அத்து மீறிய ஒளிப்பாய்ச்சுகை என்பது அயல் சூழலுக்கு (Light trespass) அல்லது அயலவர்களுக்கு தேவையற்ற விதத்தில் ஒளியினைப் பரவச் செய்தல் ஆகும். சில வீடுகளிலும் வியாபார நிலையங்களிலும் உள்ள பிரகாசமான ஒளிமுதல்கள் அதனைச் சூழ வசிப்பவர்களைப் பாதிக்கின்றது. இதனைக் கட்டுப்படுத்த ஒழுக்கக்கோவைகள் அவசியமாகின்றன.

மேலதிகமாக ஒளியூட்டல் (Over illumination) என்பது ஓரிடத்தில் தேவையான ஒளியின் அளவை விட அதிகமான ஒளியினைப் பிரயோகித்தல். இது குடியிருப்புக்கள், வேலைத்தளங்கள், பொதுவிடங்கள் என்பவற்றில் பிரச்சினையாக உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த முறையாக திட்டமிடல்களும் கண்காணிப்புக்களும் அவசியமானவைகள் ஆகும்.

light-pollution-12-638

செறிவான ஒளிப்பாய்ச்சல் (Glare ) என்பது சூரிய ஒளியை நேரில் பார்ப்பது போன்ற ஒளிப்பிரவாகம். இவை பொதுவாக வாகனங்களின் முன்பக்க வெளிச்சங்கள், தேடுதல் வெளிச்சங்கள், காவல் வெளிச்சங்கள் என்பனவாக அமைகின்றன. குறிப்பாக பெருந்தெருக்களைச் சூழ உள்ள சூழல் சாகியம் இவ்வகை ஒளிப்பாய்ச்சலால் பாதிக்கப்படுவர். அடுத்து சக வாகன ஓட்டிகள், பாதசாரிகளும், வீதியோரங்களில் வசிப்பவர்களும் செறிவான ஒளிப்பாய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுவர்களான இருப்பர்.

கூட்டமாக்கப்பட்ட ஒழுங்கற்ற ஒளிப்பாய்ச்சல் (Light Clutter) விளம்பரங்கள், அலங்கார ஒளியமைப்புக்கள் என்பவற்றில் மேற்கொள்ளப் -படுகின்றன. பெரு வீதிகளில் போலி உரு அமைப்புக்களை தோற்றுவித்து, விபத்துக்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைகின்றன. குறிப்பாக வீதிகளில் எறியங்களின் மூலம் செலுத்தப்படும் வர்ண ஒளிகள் வீதி விபத்தை ஏற்படுத்துவனவாக அமையலாம்.

வான்பரப்பில் இரவு நேரத்தில் ஏற்படும் செயற்கை ஒளிச் செறிவினை வான் ஒளிரல் (Sky Glow ) என்பர் . இது மக்கள் செறிவாக வாழும் நகரங்களில் அதிகமாகக் காணப்படுகின்றது. சில நகரங்களில் இல்வொளிச் செறிவின் பருமன் இயற்கையான இரவு ஒளிச் செறிவினை விட நூறு மடங்கு வரை அதிகமாக உள்ளது.

ஒளிகாலும் இருவாயி விலங்குகளின் (LED) அதிகரிப்பும் வான் ஒளிரல் அதிகரிக்கப் பிரதான காரணமாக அமைகின்றது. இத்தகைய அதிகரித்த ஒளி மாசால் வளியில் உள்ள சடத்துவமான வாயுக்கள் உதாரணமாக N2 வாயு, கதிரியக்கத் தாக்கத்திற்கு உட்படக்கூடிய தன்மை ஏற்படும். வான்வெளியில் இருந்து புவியினை எவ்வாறு புற ஊதாக்கதிர்கள் தாக்கி, ஓசோன் துளைகளை ஏற்படுத்துகின்றனவோ அவ்வாறே வான் ஒளிரல் செறிவு அதிகரிப்பினால் பூமியின் வான்பரப்பில் உள்ளிருந்து ஓசோன் துளைகள் உருவாகும்.

எனவே ஒளி மாசின் தாக்கம் பற்றிய விழிப்புணர்வு எமது எதிர்காலச் சந்ததியினருக்கு மிகவும் இன்றியமையாதது ஆகும். ஒளிக் கட்டுப்பாட்டுடன் கூடிய சமூக அபிவிருத்தியினையே நாம் முன்னெடுக்க வேண்டும். இதற்கான பல்துறை அணுகுமுறைகளை ஆராய்தல் அவசியமானதாகும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *