தலைப்பு செய்திகள்

டொனால்ட் டிரம்பும், இரு கரங்களையும் இழந்த சிறுவனும்- இன்டிபென்டன்ட்

டொனால்ட் டிரம்பும், இரு கரங்களையும்  இழந்த சிறுவனும்- இன்டிபென்டன்ட்

அஹமட் அல்கலாப் கடந்த வருடம் ஜனாதிபதி பராக் ஓபாமாவின் அமெரிக்க காங்கிரஸிற்கான உரையை நேரடியாக பார்வையிட்டான். ஓபாமா அதற்கான அழைப்பை விடுத்திருந்தார். அவன் காராத்தே உட்பட பல கலைகளையும் கற்றான்.

மூன்று வருடத்திற்கு முன்னர் சிரியா அகதி முகாமில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் தனது இரண்டு கரங்களையும் இழந்த அவனிற்கு செயற்கை கரங்களும் கிடைத்தன. எனினும் தான் தற்போது தஞ்சம் புகுந்துள்ள அமெரிக்காவில் தனது குடும்பத்தவர்களுடன் வாழவேண்டும் என்பதே தனது விருப்பம் என அவன் தெரிவிக்கின்றான்.

அவனது  அம்மாதற்போது துருக்கியில் வாழ்கின்றர்.எனது அம்மா இங்கு வரவேண்டும் என்பதே எனது விருப்பம் என அவன் தெரிவிக்கின்றான்.நான் அம்மாவை இழந்துவிட்டது போல உணர்கிறேன். நீண்ட காலமாக அவரை பிரிந்து வாழ்கிறேன், அவர்கள் இங்கு வரவேண்டும் என விரும்புகின்றேன் என அவன் தெரிவிக்கின்றான்.

தனது இரு கைகளையும் இழந்துள்ள போதிலும் தனது குடும்பத்தவர்களை பிரிந்து வாழ்கின்ற போதிலும் அவன் இன்னமும் நம்பிக்கையோடு உள்ளான். இந்த உலகில் எதுவும் சாத்தியம், நீங்கள் உங்களை நம்பவேண்டும் என அவன் தெரிவிக்கின்றான். அவனது தந்தை தனது நம்பிக்கைகள் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியிலேயே தங்கியுள்ளது என்கிறார். டிரம்ப் அமெரிக்காவிற்குள் முஸ்லீம்களும், சிரியா பிரஜைகளும் நுழைவதை கட்டுப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் தனது மகனுடன் வாழும் அவர் அடைக்கலம் கோரி விண்ணப்பித்துள்ளார் , அது ஏற்றுக்கொள்ளப்பட்டால் சிறுவனின் தாய் உட்பட ஏனைய குடும்பத்தவர்களையும் அமெரிக்க அழைப்பதற்கு அவர் எண்ணியுள்ளார்.

எனினும் அவரின் இந்த கனவுகள் சாத்தியமாவது டிரம்பின் கைகளிலேயே உள்ளது.டிரம்ப் சரியான விடயங்களை செய்வார் என எதிர்பார்க்கிறேன்,மக்கள் அவரை பற்றி என்ன சொன்னாலும் பரவாயில்லை நான் நம்பிக்கை கொண்டுள்ளேன் என்கிறார் அவர்.

துருக்கி வழங்கியுள்ள தற்காலி வதிவிட அனுமதியை மறுத்ததால் என்னால் அங்கு செல்ல முடியாது,சிரியாவிற்கு மீண்டும் திரும்ப வாய்ப்பேயில்லை என்கிறார் அவர்.

சுpரியாவில் எதுவும் இல்லை ,எங்கள் வீடு அழிக்கப்பட்டுவிட்டது, எங்கள் அரசாங்கம் எங்களை கொல்ல முயல்கின்றது,அமெரிக்கா என்னை ஏற்காவிட்டால் எனக்கு செல்வதற்கு இடமேயில்லை என்கிறார் இரண்டுகைகளையும் இழந்த அந்த சிறுவனின் தந்தை.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *