Search
Saturday 5 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தமிழைத் தேடும் தமிழன்

தமிழைத் தேடும் தமிழன்

மருத்துவர்.சி.யமுனானந்தா  (உலக தாய்மொழி தினத்திற்காக 21.02.2016 இல் எழுதிய கட்டுரை)  

தமிழ் உலகின் முதன்மொழியாகும் தமிழ்மொழி வரலாற்றுக் காலத்திற்கு முன்பே இந்தோனேசியா தொடக்கம் ஸ்பெயின் வரை வழக்கில் இருந்தது. குமரிக்கண்டம் கடல்கோளினால் அழிவுற்றபோது ஆதித்தமிழர் புலம்பெயரத் தொடங்கினர். கடல்கோளினால் மூன்றுமுறை குமரிக்கண்டம் அழிந்தமைபற்றி முதற் தமிழ்ச்சங்கம், இரண்டாம் தமிழ்ச்சங்கம், மூன்றாம் தமிழ்ச்சங்கம் என்பவற்றின் அழிவுகளுடன் வரலாறு பதிகின்றது.

tamil_lit_recordsமுதல் தமிழ்ச்சங்க அழிவும் புலம்பெயர்வும் கி.மு.15000- 12000 வருடங்களிற்கு முன் நடைபெற்றது. இதன்போது மக்கள் தைகிரிஸ் நதிப்பகுதியில் குடியேறினர். இதன்போது நோவா என்பவர் கப்பல் கட்டித் தப்பியமை பற்றி குறிப்பிடப்படுகின்றது. Noah என்பது Navai என்ற கப்பலைக் குறிக்கும் சொல்லே. மொழியின் ஒலியியலில் தமிழை நாம் நன்றாக ஆராய்ந்து உறுதிப்படுத்தலாம். இவ்வாறு குடியேறிய மக்களின் சந்ததியால் பல மொழிகள் தமிழில் இருந்து தோன்றின. இவையே இன்றைய மேற்காசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் பன்முகத் தன்மைக்குக் காரணமாகும். இவ்வுண்மை அம்மக்களுக்குத் தெரிந்தால் வீணே தமக்குள் முரண்படமாட்டார்கள்.

‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்றதன் அர்த்தம் யாதெனில் தமிழில் யா என்பது தென்திசையைக் குறிக்கும், யாதும் ஊரே என்பது தென்பகுதியில் அதாவது குமரிக்கண்டத்தில் இருந்து வந்த மக்கள் கூட்டத்தைக் குறிக்கும் யாவரும் என்றால் தென்பகுதி மக்களே என விழிக்கின்றது. அதாவது குமரிக்கண்டத்தில் இருந்து புலம்பெயர்ந்த மக்கள் தமக்குள் ஒற்றுமையாக இருக்குமாறு கூறுவதாகவும் குமரிக்கண்டத்தில் இருந்து வந்த மக்களுக்கு உதவுமாறும் உள்ளது. குறிப்பாக கடல்கோளினால் அழியாத தமிழக மக்களிடையே குமரிக்கண்ட புலம்பெயர்வு மக்களுக்கு உதவுவதற்கு இக்கூற்று சான்றாக அமைகின்றது. இது இன்றைய ஈழத்தமிழர்களுக்கும் பொருந்தும்.

முதல் கடல்கோளினால் குமரிக்கண்டத்தில் இருந்து மேற்காசியாவில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களால் உருவாக்கப்பட்ட மொழிகளாக அக்காடியன் மொழி (Acadian), கானனைட் மொழி (Canaanite), அரபு மொழி (Arab), எகிப்திய மொழி (Ethiopian ), தன்சானிய மொழி என்பனவாகும்.

இரண்டாம் கடல்கோளின்பின் புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் பபிலோன், சிந்துவெளி என்பவற்றில் வாழ்ந்தனர். சிந்துவெளியில் உள்ள நகரக் கட்டமைப்புக்கள் பூம்புகார் கட்டமைப்புக்களை ஒத்தது. இன்றைய காஸ்மீரின் பூர்வீகக்குடிகளும், இவ்வம்சமே ஆகும். இவர்கள் பூம்புகார் தமிழை உடையவர்கள். பபிலோனில் வாழ்ந்த மக்கள் சமரில் சமர்த்தர்கள். இவர்களை சமரியர் Samariyar⇢ Sumeriyar சுமோரியர் என அழைக்கலாயினர். தமிழின் வடிவமே சுமோரிய மொழியாகும். இதில் இருந்து திரிபடைந்ததே எபிரேய மொழி (Hebrew) ஆகும்.

tamil_letters

தமிழ்மொழியின் வியாபகத்தினை அறிய இன்றைய நாடுகளின் மற்றும் நகரங்களின் பெயர்களில் தமிழ் உள்ள தன்மையை முதலாவதாக அணுகலாம்.

எருசலேம்-  Jerusalem, Yeru salayim, Ur – Shalom ஊர் சாலம் அமையான ஊர் என்ற தமிழ் பெயராகும்.

ஜோர்டான் – Jordan Yaaru – Dan  டான் என்ற இடத்தில் இருந்து வரும் ஆறு என்று பொருள்.

மக்கா – Maacah-  பெரிய காடு என்று பொருள்.

இஸ்ரேஸ் –Yisra – el  இசை அறா எல் என்று இறைவனுடன் பிரிக்க முடியாத என்ற கருத்து.

 Lebanon –  லெபனான் ஐட யஎயஅ இலவம் என்ற வெண்மையைக் குறிக்கும் தமிழ் பெயராகும்.

பெய்ரூட் –  BeirutBeeroth    என்பது அரவின் வாய் என்பதன் உருவாக உள்ளது. பாலஸ்தீனம் என்பது பாலைத் தீ என்பதன் வடிவாக உள்ளது. இன்றைய ஆப்கானிஸ்தானில் தலைநகரான காபுல் அன்று காட்டுவெளியாக இருந்தது. காட்டுவெளி – காவெளி  KaveliKabul   ஆக திரிபு அடைந்தது. Kabul என்பது காட்டுவெளி என எபிரேய மொழியில் குறிப்பிடப்படுகின்றது.

இரண்டாவதாக எபிரேய மொழியில் உள்ள தமிழ்ச்சொற்களின் திரிபுகளை ஆராயலாம். Ahab என்றால் தேசத்தின் தலைவர் என எபிரேய மொழியில் பொருள். இங்கு Aham Abba என்ற அகம் அப்பா என்ற தமிழ் சொற்களே Ahab ஆக மாறியது. அகம் என்றால் நாடு, அப்பா என்றால் தலைவன்.  Akkad என்றால் நகரம் என்று பொருள். இது அக்காட்டில் அமைந்த நகரம் என பொருள்படும். அக்காட்டியன் என்பது அங்குவாழும் மக்களைக் குறிக்கும். Aram என்பது ஊர்ப்பெயர். இது சிதம்பரம் என்பது போல் அமைகின்றது.

 Jacob என்பது யா கோ தென்திசை அரசன் என்ற கருத்துடையது.

Benjamin  என்பது பின்னவன் Pinnavan என்பதில் மருவியது.

டீநவா என்பது வீடு பதி (Pathi)  Peth Beth ஆக மாறியது.

Beth- el  என்பது இறைவனின் வீடு. Seper என்பது புத்தகத்தினைக் குறிக்கிறது. இது செப்புதல் என்ற தமிழ்ச்சொல்லே ஆகும்.

 El – Iyyah ஐயா – இறைவன் என பொருள்படும். Ye oodi  இ ஊரி என்பது Yenude  Yews யூத என உருப்பெற்றது. Ahab – காதல் என பொருள்      – அகவு – மனம் என பொருள்படும்.

எபிரேய மாதங்களில் தமிழின் பிரயோகம்.

1.Nisan                              Nisi  – நிசி இரவு என்ற சொல்லில் இருந்து வந்தது. (பங்குனி – சித்திரை)

2.Iyyar                              Ayyar  – ஐயா / பெரியவர் என்ற பொருள் (சித்திரை- வைகாசி)

3.Siwan                            சிவன் – சிவபெருமானைக் குறிக்கும் பெயர். (வைகாசி – ஆனி)

4.Tammuz                       தமிழ் – தமிழைக் குறிக்கும் பெயர். (ஆனி- ஆடி)

5.Ab                                    Abba – தந்தையைக் குறிக்கும். (ஆடி – ஆவணி)

6.Elul                                 Ezhil – எழில்/ அழகு (ஆவணி – புரட்டாதி)

7.Tishri                             Thisai திசை (புரட்டாதி – ஐப்பசி)

8.Morhesshwan            Maarivaanam  மழைமேக வானம். (ஐப்பசி – கார்த்திகை)

9.Kiselu                            Kachalan  – கறுப்பு. (கார்த்திகை – மார்கழி)

10.Tebet                           Thai  – தை மாதம் (மார்கழி தை)

11.Sheba                            Sivappu  – சிவப்பு (தை – மாசி)

12.Adar                             அடர் தடித்த  (மாசி – பங்குனி)

எபிரேயமொழி தமிழில் இருந்து தோன்றியதன் முக்கியத்துவத்தினை இஸ்ரேல் அரசுக்கு உணர்த்த வேண்டும். தமிழ் மக்களுக்கு குறிப்பாக ஈழத்தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைக்க இஸ்ரேல் உதவ வேண்டும். அடுத்து மத்தியகிழக்கில் அமைதி ஏற்பட இஸ்ரேல் அரசு தனது இனவம்சத்தினை அறிந்து கொள்ள வேண்டும். இன்று ISIS  எதிர் தீவிரவாதத்தாலும் ISIS தீவிரவாதத்தால் பண்டைய வரலாறு அழிக்கப்படுகின்றது. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பது இன்றையதண்போர் சூழலில் சாலவும் பொருந்தும்.

அடுத்து, நீர் என்ற சொல் நோச ஆற்றைக் குறிப்பதாக எகிப்தியமொழி, அரபுமொழி, காஸ்மீரமொழியில் உள்ளது. காஸ்மீர மக்கள் ஆற்றை அண்டி வாழ்ந்தவர்கள். Nehuru சாதியினர் எனக் குறிப்பிட்டனர். இந்தியாவின் முதல் பிரதம மந்திரியான ஜவகர்லால் நேரு உம் தமிழ்வம்சமே. துரதிஸ்டவசமாக இலங்கையில் தமிழர்கள் பிரஜா உரிமை இழக்க அவர் துணைபோயினார். விடுதலைக்காக போராடும் காஸ்மீர் பூர்வீக மக்களும் குமரிக் கண்டத்தைச் சேர்ந்தவர்களே. எனவே யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பது காஸ்மீர் மக்களுக்கும் பொருந்தும்.

Lost-Continent-of-Kumari-Kandam

மத ஒற்றுமையை வலியுறுத்த யேசு என்பது Yesy Esan ஈசன் என்ற சொல்லில் இருந்து வந்தமையும் அல்லா என்பது அல் ஆள் உருவமில்லாதவர் என்ற தமிழ் சொல்லில் இருந்து வந்தமையையும் எடுத்துக் காட்டலாம்.

தமிழைத்தேடும் தமிழன் உலக மொழிகளில் புதைந்துள்ள தமிழை வெளிக்கொணரும் காலம் இது. இதன்மூலம் பண்டைத் தமிழின் சிறப்பை வெளிக்கொணரலாம். மானிடத்தில் மேன்மைக்குரிய வரலாற்றுத் தத்துவத்தினை உலகிற்கு அளிக்கலாம்.


One thought on “தமிழைத் தேடும் தமிழன்

  1. Ananth

    Tamil was oldest Language in The World. In German, ” Kässe”= Tamil -“Kassu”, Tamil -” Katu Maram = all World Language called ” Katumarann, “,
    Sumerian call-” Ner” = Tamil -“Ner”, Aramäice Language “Tha “, in Tamil “Tha + Ner = Than ner, Akk Adrian call -” Kalam” and Sumerian call “-Kalam ” and Tamil call still -” Kalam or Katumaram”. In Phlipeinan U.S.A. Naval Bace call “- Kalam”. Place “Tamil Land (Nadu) People Speck Good Tamil then Tamil had Long Life,

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *