Search
Thursday 26 November 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தமிழ் மக்கள் பேரவை முன்னெடுக்கும் பேரணி ஈழத் தமிழ்தத் தேசிய ஐக்கியத்தின் குறியீடு

தமிழ் மக்கள் பேரவை முன்னெடுக்கும் பேரணி ஈழத் தமிழ்தத் தேசிய ஐக்கியத்தின் குறியீடு

மு. திருநாவுக்கரசு 

அழிவின் விளிம்பில் நிற்கும் ஈழத் தமிழ் தேசியம் தப்பிப் பிழைத்து உயிர்வாழ ஒரு புதிய திருப்புமுனையை வேண்டி நிற்கின்றது. தமிழீழத் தேசியத்தின் உயிர்ப்பை உணர்த்தவும் , அதன் தேசிய விடிவுக்கான எழுச்சியை உருவாக்கவும் ஒன்றுதிரண்ட மக்களின் போர்க் குரல் அவசியம். எதிரிக்கு எதிரான குரலை யார் எழுப்பினாலும், அதற்கான போராட்டங்களை யார் முன்னெடுத்தாலும அதனை ஆதரியுங்கள் என்பதே வரலாற்றின் ஆணையாகும்.

இனப்படுகொலை வாயிலாக முள்ளிவாய்க்காலில் எதிரி அடைந்திட்ட இராணுவ வெற்றியானது எவ்வித எதிர்ப்பும்இன்றி, எத்தகைய தங்குதடையுமின்றி தமிழ் இனத்தைமுற்றாக அழித்து ஒழிப்பதற்கான ஒரு முன்னேற்பாடாகும்.

அதன் அடிப்படையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை முடிந்த பின்னான கடந்த 10 ஆண்டுகளில் உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் வழிமுறைகளினாலும், இராஜதந்திர வழிமுறைகளினாலும், இராணுவ வழிமுறைகளிலும் மற்றும் சட்ட- நிர்வாக ஏற்பாடுகள் வாயிலாகவும்தமிழ்தேசிய கட்டமைப்பை அடிப்படையிலிருந்து அழித்தொழிப்பதற்கான அனைத்து வகை நடவடிக்கைகளையும் தமிழ் தலைவர்களின் உதவிகொண்டுஎதிரி வெற்றிகரமாக நிறைவேற்றி வருகின்றான். .

நல்லாட்சி அகால மரணம் அடைந்துவிட்டது . அதன் ஏமாற்று வித்தைகள் அனைத்து வகைகளிலும் வெற்றி பெற்றுவிட்டன .அனைத்துவகை வாக்குறுதிகளும்எதிர்பார்க்கைகளும் முழுமையாக தோல்வியில் முடிந்துவிட்டன என்பது மட்டுமன்றி அவற்றிற்கு எதிரான தமிழின அழிப்பு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டும் உள்ளன.

அனைத்து இன அழிப்பு நடவடிக்கைகளையும் அரசு வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு ஏற்ற வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தலையாட்டும் பொம்மைகளாகஇருந்து அரசுக்கு ஆதரவு அளித்துவிட்டு, தற்போது சிங்கள ஆட்சியாளர்கள் தம்மை ஏமாற்றி விட்டதாக தமிழ் மக்கள் முன் அவர்கள் பாசாங்கு செய்கின்றனர்.

“” தக்கன பிழைக்கும் தகாதன அழியும்” என்பது உயிரியல் கோட்பாடாகும். சூழலை எதிர்த்து போராடத்தகுதியற்றவை அனைத்தும் இறுதியில் அழிந்து போய்விடும்.

சிங்களத் தலைவர்களின் வாக்குறுதிகளும் பொய்த்துப் போயின. வெளிநாடுகளின் பசப்பு வாக்குறுதிகளும் பொய்த்துப் போயின. சிங்கள ஆட்சியாளர்களின் தமிழினஅழிப்பு ஒன்றே வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு நிமிர்ந்து நிற்கின்றது. கூடவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின்நாடகமும் அம்பலமாகியுள்ளது

கதியற்ற தமிழ் இனம் தனது தேசிய இருப்புக்கான போர்க்குரலை உள்நாட்டுக்கும்., வெளிநாடுகளுக்கும் உயர்த்தி காட்டுவதைத் தவிர இப்போது வேறு தெரிவு எதுவுமில்லை.ஜனநாயக வழிமுறைகளில் தமிழினம் தேசிய குரலை எழுப்ப வேண்டும். அதற்கான அடிப்படைகளை முன் நிறுத்த வேண்டும்.

இந்தவகையில் பேரணிகளை நடாத்துவது இதற்கான வழிமுறைகளில் ஒன்றாகும். தமிழ் மக்கள் பேரவை தற்போது ஒரு பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனை ஆதரித்து முன்னெடுக்க வேண்டியது அனைத்து ஜனநாயக விரும்பிகளினதும், மனித உரிமையாளர்களினதும், பண்பாட்டியலாளர்களினதும் பொறுப்பாகும்.

இந்தியாவின் முன்னோடி இடதுசாரித் தத்துவஞானியாகவும் புரட்சியாளராகவும் ஆரம்பத்தில் கணிக்கப்பட்ட எம் .என். ராய் என்பவர் 1923 ஆம் ஆண்டு அன்றைய ரஷ்ய ஆட்சித் தலைவர் லெனினை சந்தித்த போது அவரை பின்வருமாறு புகழாரம் சூட்டி வரவேற்றார்.

“” கிழக்கிலிருந்து நரைத்த தாடியுடன் ஒரு தத்துவஞானி வருவார் என்று எதிர்பார்த்தேன் .ஆனால் கரிய முடியுடன்ஓரிளம் தத்துவஞானி வந்திருக்கின்றார்”” என்று கூறி கட்டி அணைத்தார்.

மகாத்மா காந்தி ஒரு நிலப்பிரபுத்துவவாதி என்றும் அவர் ஒருபத்தாம்பசலி என்றும் கூறி அவரது தேசிய விடுதலைப்போராட்டத்தை எம். என் .ராய் நிராகரித்த போது அதனை லெனின் மறுத்துரைக்கையில் பின்வருமாறு கூறினார்.

“கொள்ளைக்கார தரமான காலனிய ஆதிக்கத்தை எதிர்த்து மகாத்மா காந்தி போராடுவதாகவும் எனவே அதனை ஆதரிக்க வேண்டியது முதல் பொறுப்பு என்றும் கூறிய லெனின் காந்திக்கு பின்னால் கோடான கோடி கணக்கானமக்கள் திரண்டு நிற்கிறார்கள் என்றும் அந்த மக்கள் சக்தி ஏகாதிபத்தியத்துக்கு எதிராக முன்னெடுத்துச் செல்லும் போராட்டத்தை ஆதரிக்க வேண்டும் என்றும் எம்..என். ராயிடம் லெனின் வற்புறுத்தினார். அதனை எதிர்த்து தனி வழி சென்ற எம்.என் ராய் பின்பு வரலாற்றில் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய்விட்டார்.

கோட்பாட்டு ஆய்வாளர்கள் ஒரு சிலரின் பேனைக் கிறுக்கல்களில் எம். என். ராய் என்ற பெயர் தெரிந்தாலும் வரலாற்று இயக்கத்தில் அவருக்கு இடம் இல்லை. ஆனால் தேசியப் போராட்டத்தை முன்னெடுத்த மகாத்மா காந்தி காலங்களைக் கடந்தும் கோடான கோடி மக்களின் இதயங்களிலும் வரலாற்றின் இரத்த ஓட்டத்திலும் உயிர் வாழ்கிறார்.

eluga 2

நான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலாக 20ஆம் நூற்றாண்டின்நடுப்பகுதி வரை நீடித்த காலணிய ஆதிக்கத்தின்கொடூரங்களை விடவும் மோசமான வகையில் இலங்கைத்தீவில் தற்போது சிங்கள ஆதிக்கத்தினால்மேற்கொள்ளப்பட்டுவரும் சிங்கள குடியேற்றவழிமுறைகளும் தமிழின அழிப்பு அரசியல் முறைகளும்
காணப்படுகின்றன.

காலனிய ஆதிக்கமானது குறிப்பாக ஆசிய நாடுகளில் தமது மக்கள் மூலமான குடியேற்றங்களை ஸ்தாபிக்கவில்லை, மாறாக தமது பிரித்தானிய குடியேற்றவாத அரசியல் இராணுவ ஆதிக்கத்தையே கொண்டிருந்தது. இலங்கையில் தமிழ் மக்களின் தாயகத்தில் சிங்களஆதிக்கமானது தமது சிங்கள மக்களை குடியேற்றம் செய்வதன் மூலம் தமிழ் மக்களின் தாயகத்தை கபளீகரம் செய்து வருகின்றது. இது மேற்கத்திய ஆதிக்கத்தைவிடவும் மோசமானது. குடியேற்ற அரசியல் ஆதிக்கம் ஒரு நாள் அகன்றுபோய்விடும். ஆனால் சிங்கள ஆதிக்கமானதுதனது சொந்த சிங்கள மக்களை தமிழ் மண்ணில் குடியேற்றம் செய்வதன் மூலம் தமிழ் தேசிய இனம் அருகிஅழிந்து போய்விடும்

மேலும் பிரித்தானிய குடியேற்ற ஆதிக்க அரசானதுபல்லாயிரக்கணக்கான மைல் தொலைவில் ஆளப்பட்டஆதிக்கமாகும் ஆனால் சிங்கள அரசு தமிழ் இனத்தை விட அளவில் பெரிதும் கூடிய வகையில் தமிழ் இனத்துடன் ஒட்டினாற்அருகருகே காணப்படும் ஒரின மேலாதிக்கவாதஅரசாகும்.

இந்தவகையில் சிங்கள அரசு மேற்கொள்ளும் சிங்களக்குடியேற்றம், இராணுவ – பொலிஸ் ஆதிக்கம், அரசியல் ஆதிக்கம் என்பனவெல்லாம் தமிழ் தேசிய இனத்தை அதன் இருந்த இடம் தெரியாமல் அழிக்கவல்ல ஏதுக்களைகொண்டதாகும். ஆதலால் இத்தகைய சிங்கள குடியேற்ற- இராணுவ- அரசியல்- ராஜதந்திர – நிர்வாக வகைகளிலான அனைத்து வகை ஆதிக்கங்களுக்கும் எதிராக சாத்தியமான அனைத்துவகை போராட்டங்களையும் முன்னெடுக்க வெண்டியதுகாலத்தின் கட்டளையாகும்.

எனவே எதிரிக்கு எதிரான போராட்டங்களை யார் முன் எடுத்தாலும் ஆதரியுங்கள் , எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் இதில் எதிரியை அம்பலப்படுத்த வேண்டும். எதிரியை பலவீனப்படுத்த வல்ல அம்பலப்படுத்தவல்லபோராட்டங்களை முன்னெடுப்போரை ஆதரிக்கவேண்டும். மக்களை ஒன்று திரட்டவல்ல போராட்டங்களை யார் முன்னெடுத்தாலும் அதனை ஆதரியுங்கள் என்பதுதான் வரலாறு கூறும் போதனையாகும்.

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கானதேர்தல்களில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினருக்கு 35 வீதவாக்குகளும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு
20 வீத வாக்குகளுமென மொத்தம் 55 வீத வாக்குகள்கிடைத்துள்ளன. அதேவேளை தமிழ் தேசியத்தை எதிர்த்து நிற்கும் சிங்களக் கட்சிகளுக்கும் அவற்றின் சார்பு கட்சிகளுக்குமென மிகுதி 45 வீத வாக்குகள்கிடைத்துள்ளன. இது ஒரு ஆபத்தான முன்னெச்சரிக்கையாகும்.

இந்நிலையில் தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளபேரணியை ஆதரித்து அதன் வாயிலாக தமிழ் மக்கள் தமது தேசிய எழுச்சியையும் தமது நிலைப்பாட்டையும் உலகிற்குவெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

கிமு 480 ஆண்டு பாரசீகப் பேரரசு கிரேக்கத்தின் மீது படையெடுத்த போது கிரேக்க அரசுகள் தம்மிடையேபகைமைகொண்டு சிதறிக்கிடந்த நிலையில் பாரசீகபெரும்படையால் கிரேக்கர்களை அவர்களின் கிரேக்கமண்ணில் தோற்கடிக்க முடிந்தது . ஆனால் பின்பு ஸ்பாட்டா, ஏதென்ஸ் என்ற இரு அரசுகளின் தலைமையில் 100 வரையிலான கிரேக்க அரசுகள் ஒன்றுதிரண்டு ஐக்கியமாகபோராடியதன் மூலம் ஓராண்டின் பின் அதாவது கிமு 479 ஆம் ஆண்டில் பாரசீக பெரும்படையை கிரேக்கர்களால்தோற்கடித்து கிரேக்க மண்ணையும் , கிரேக்கபெண்களையும் கிரேக்க சிறுவர்களையும் கிரேக்கமக்களையும் மீட்க முடிந்தது.

இவ்வாறு தமது பிரதான எதிரிக்கு எதிராக ஒன்றுபட்டு வெற்றியீட்டிய கிரேக்க அரசுகள் 23 ஆண்டுகளின் பின்பு தமக்கு இடையேயான பகைமைகளின் நிமித்தம் ஏதென்ஸ் தலைமையில் ஓர் அணியும் ஸ்பார்ட்டாதலைமையில் இன்னொரு அணியுமென இரு பெரும் அணிகளாக ஆயிரம் அரசுகளும் பிளவுண்டு 27 ஆண்டுகள் போரிட்டன.

Eluka-Tamil-East-1-e1484803484976

அதாவது தமக்கிடையேயான பகைமைகளை எல்லாம் ஒருபுறம் மூட்டைகட்டி வைத்துவிட்டு தமது பிரதான எதிரிக்கு எதிரான போராட்டத்தின் நிமித்தம் ஒன்றுபட்டு தமது பிரதான எதிரியை முதலில் தோற்கடித்தனர். இவ்வாறு கிரேக்கர்கள் தமது மண்ணையும் மக்களையும் எதிரியிடமிருந்து மீட்டதன் பின்பு தமக்கிடையேயானபகைமைகளின் பொருட்டு இரு அணிகளாகப் போராடினர்என்பது அடுத்த கட்டக் கதை. இவ்வாறு அன்று கிரேக்கமண்ணில் தோற்கடிக்கப்பட்ட பாரசீகர்களால் இன்று வரை 2500 ஆண்டுகளாக கிரேக்க மண்ணின் ஓரங்குல நிலத்தைத்தானும் ஆக்கிரமிக்க முடியவில்லை . இது வரலாறு கூறும் ஒரு முக்கிய படிப்பினை.

இன்று வரை மேற்குலகிற்கும் இன்றைய ஈரான் எனப்படும் பாரசீகத் திக்கும் இடையிலான போர் நடந்து கொண்டே இருக்கிறது. ஒருவேளை ஈரானிய மண்ணில் ஈரானியர்களால் தம்மைத் தற்காக்க முடிந்தாலும் எதிர் காலத்தில் மேற்குலகின் ஓரங்குல நிலத்தைதானும்பாரசீகர்களால் ஒருபோதும் கைப்பற்ற முடியாது.

தமிழர்கள் மத்தியில் காணப்படும் அரசியல் கட்சிகளுக்கிடையே எத்தனை வேறுபாட்டுகள், முரண்பாடுகள், பகைமைகள் இருந்தாலும் அவற்றுக்கானகணக்கினைப் பின்பு அவர்கள் தீர்த்துக்கொள்ளலாம். முதலாவதாக பிரதான எதிரிக்கு எதிரான கணக்கை தீர்த்துக் கொள்ள வேண்டும்.

“” பழங்குடியினரின் பலம் அதன் ஒற்றுமையிற்தான்தங்கியுள்ளது”” என்று ஒரு மானிடவியற் கூற்றுண்டு. இந்தவகையில் தமிழ் தேசிய இனமானது ஒன்றுதிரண்டமக்கள் சக்தியை நிரூபித்தாக வேண்டிய இறுதிக் கட்டம் இப்போது காணப்படுகின்றது.

தொன்மையும் செழுமையும் மிக்க தமிழீழத் தேசிய இனத்தை பாதுகாக்க வேண்டியது உலகெங்குமுள்ளஅனைத்து ஜனநாயகவாதிகளினதும் மனித உரிமை யாளர்களினதும் நீதிமான்களினதும்பண்பாடியலாளர்களினதும் கலைஞர்களினதும் எழுத்தாளர்களினதும் ஊடகவியலாளர்களினதும் அறிஞர்களினதும் உயர்கல்வி மாணவர்களினதும்பரந்துபட்ட மக்களினதும் பொறுப்பாகும்.

தமிழீழ மண்ணில் பல்கலைக்கழக மாணவர்கள் மிகவும் சிறப்பான போராட்ட வரலாற்றை கொண்டவர்கள். எதிரிக்குஎதிரான போராட்டத்தில் அவர்கள் எப்பொழுதும் ஒன்றுபட்டுபோராட்டத்தை முன்னெடுத்தவர்கள் என்பது ஒரு முக்கிய வரலாற்று உண்மைகளாகும்.

தற்போது கட்சி பேதங்களுக்கு அப்பால் தேசிய உரிமைகளின் பெயரால் போராட்டத்தை முன்னெடுக்கவேண்டிய பொறுப்பை பல்கலைக்கழக மாணவர்கள்கொண்டுள்ளார்கள். இந்நிலையில் தமிழ் மக்கள் பேரவைஅழைப்பு விடுத்த இப்பேரணிக்கு அனைத்து விதமான பேதங்களையும் கடந்து பல்கலைக்கழக மாணவர்களும், அரசியல் கட்சிகளும், மக்களும் ஆதரித்து அவற்றைமுன்னெடுக்கவேண்டும்

இதில் பல்கலைக்க மாணவர்களின் பொறுப்பை மிகவும்பெரியது . .
அரசியல் வாதிகளையும் கடந்து அரசியல் பேதங்களையும்கடந்து மக்கள் தமது ஒன்றுதிரண்ட அரசியல் சக்தியைபேரணி வாயிலாக வெளிப்படுத்த வேண்டிய ஒரு முக்கியகட்டம் இது.

வெள்ளையர்களும், அவர்களின் துப்பாக்கிகளும், பீரங்கிகளும் காந்தியை கண்டு அஞ்சவில்லை மாறாககாந்திக்கு பின்னால் ஒன்று திரண்டு மலையென எழுந்தமக்கள் சக்தியைக்கண்டு தமது ஆதிக்கம் கொடியினைகம்பத்தை விட்டு இறக்கினர்.

29/8/2019 தினக்குரல்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *