Search
Friday 24 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நவீன இயற்பியல் கண்டுபிடிப்புக்கள் சைவசமய புராண இதிகாச இலக்கியங்களை விளக்குவதற்கு துணை போகும்!

நவீன இயற்பியல் கண்டுபிடிப்புக்கள் சைவசமய புராண இதிகாச இலக்கியங்களை விளக்குவதற்கு துணை போகும்!

சி.யமுனானந்தா

இயற்பியல் விஞ்ஞானம் கடந்த 10 ஆண்டுகளில் பாரிய வளர்ச்சியினை அடைந்துள்ளது. அவற்றில் முக்கியமானது கடவுளின் துணிக்கை கண்டுபிடிப்பும் ஈர்ப்புப்புலத்தின் (Gravitational waves) கண்டறிவுமாகும். இவ்வதானங்கள் இயற்பியலில் பல புதிய கருதுகோள்களை உருவாக்க உதவி உள்ளது. அந்த வகையில் அகிலம் 26 பரிமாண நுண்குழாய்களை அடிப்படையாக கொண்டமைந்தது என்ற கருதுகோள் உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்து ஈர்ப்பு விசை அகிலத்தின் நியூட்டனின் இயக்க விதிக்கு அப்பாலும் செயற்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு அப்பால் கருதுகோள்களில் இருந்து பாம்பின் நாக்கு இரையை எடுப்பதுபோல் அகிலத்தின் பகுதிகளை அதாவது எமது சூரியனை விட பல மடங்கு பெரிய சூரியன்களையும் விழுங்கக்கூடிய நிகழ்வுகள் அவதானிக்கப்பட்டுள்ளன. இவற்றை நாம் கருத்துளைப்புலம் ((Black hole field) அல்லது Serpent field  எனலாம். இப்புலம் அகிலத்தின் அடிப்படை கட்டமைப்பை உருவாக்க நேர் விசையாகவும் அதனை இல்லாது செய்வதற்கு எதிர்விசையாகவும் துரித அமைப்பில் அமையலாம். (Spring serpent fieldy Anti spring Serpent field).

காலம், வெளி, ஈர்ப்புவிசைப்புலம், மின்காந்தப்புலம் என்பவற்றுக்கு அப்பால் கருந்துளைப்புலம் எமது இயற்பியல் தத்துவங்களுக்கு அணி செய்கின்றது. Quantum transformation  மூலம் சேய்மைச் செலுத்தல்  Teleportation சேய்மைத் தொழில்நுட்பம் வெற்றியடைந்துள்ளது. அவ்வாறே கருந்துளைப்புலமும்  Teleportation  செயன்முறைக்கு உட்படலாம்.

சைவசித்தாந்தம் மாயையில் இருந்து உலகம் தோற்றம் பெற்றது எனக் கூறுகிறது.

இருளின் றேற்றுன்பென் உயிரியல் பேற் போக்கும்
பொருளுண்டேல் ஒன்றாகப்போம்
(திருவருட்பயன் – 27)

இருள் அகல உயிர் இல்லாது போகும் என்பது இதன் கருத்து. இங்கு இருள் என்பது கருந்துளைகள் சார்பான விசைகள் ஆத்மாவை இயக்குவதைக் குறிக்கும். ஆன்மா பிறந்து இறப்பதற்கு காரணம் ஆஞ்ஞாசக்தியாகும். இது கன்ம பலத்தினால் ஏற்படும். ஆன்மா உடல், இந்திரியம், சூக்குமதேகம், பிராணவாயு என்பவற்றையும் கடந்து சக்தியுடன் இணைந்துள்ளது. அதாவது ஆத்மாவின் வடிவத்தை வெற்றிடத்தில் உருவகப்படுத்தின் அதற்கு உதாரணமாக குவளையில் உள்ள நீரில் உள்ள வளிக்குமிழ்களிற்கு ஒப்பானதே அகிலத்தில் உள்ள ஆத்மாக்கள் ஆகும். குவளைக்கு வெளியே உள்ள வெளிக்கு உதாரணமே பரவெளி ஆகும். வெற்றிடத்தில் இருந்து அகிலம் விரிவடைகின்றதோ அவ்வாறே ஆத்மாவின் விரிவும்.

“அண்டத்தின் உள்ளே அளப்பரிதானவள்
பிண்டத்தின் உள்ளே பெருவெளி கண்டவள்”
(திருமந்திரம் -1362)

கருந்துளை விசைகளின் துவிய நிலையினை சைவசித்தாந்தத்தில் சிவமும் சக்தியும் இணைந்த நிலையான தாதாண்மிய இயல்புக்கு ஒப்பிடலாம். துவிய நிலைச்சக்தியினை சேய்மைச் செல்லுகைக்கு உட்படுத்தல் (Teleportation) முலம் இரு நிலைகளில் காட்சிப்படுத்த முடியும். இதன் மூலம் ஆத்மாக்களையும் கருந்துளைகள் அலைகள் மூலம் சேய்மைக்கு நகர்க்கலாம்.

எமது சமய இதிகாசங்களில் வரும் சம்பவங்களை தற்போது இத்தகைய பௌதீகக் கோட்பாடுகள் மூலம் விளங்கிக் கொள்ளக்கூடியதாக அமைகின்றது. உதாரணமாக வசிட்டரின் மனைவி அருந்ததியினை கற்புக்கரசியாக கூறி, அதனை வானில் அருந்ததி நட்சத்திரமாகக் காட்டுகின்றனர். இது ஆத்மா கருந்துளைப்புலம் மூலம் சேய்மைச் செல்லுகைக்கு உட்படல் (Black hole teleportation)  சாத்தியமாகும் முறையில் விளக்கலாம்.

‘அருந்ததிக் கற்பினார் தோளும் திருந்திய”
(திரிகடுகம் – 2)

இவ்வாறே தெய்வங்களை நவக்கிரகங்களாகச் சித்தரிப்பது, மைநாகன், மலையாக கிருகதயுகத்தில் மாறியதை, விளக்குவது அகலிகை கல்லாக மாறியமை, சூரிய பகவானின் அருளால் குந்திதேவிக்கு கண்ணன் பிறந்தமை முதலிய புராணக் கதைகளுக்கு ஆன்மாக்களை கருந்துளை விசைகளின் சேய்மை செல்லுகைக்கு உட்படல் முறையில் (Black hole forces teleportation)  விஞ்ஞான முறையில் விளக்கம் கொடுக்கலாம்.

மணிவாசகரின் சிவபுராணததில்

“ புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப்
பல்மிருக மாகி பறவையாய் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய் பேயாய்த் தேவராய்ச்
செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள்”

என்பதும் ஆன்மாவின் சேய்மைச் செல்லுகைக்கு உட்படலுக்கு ஆதாரம் ஆகும்.

எனவே நாம் நவீன இயற்பியல் தத்துவங்களை, சைவசித்தாந்த புராண இதிகாசங்களுடன் அணுகி மெய்யியலை உணரல் வேண்டும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *