Search
Tuesday 22 January 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நீரின்றி அழிவடையும் நிலையில் தொன்மையான வரலாறு கொண்ட பூநகரி

நீரின்றி அழிவடையும் நிலையில் தொன்மையான வரலாறு கொண்ட பூநகரி

பாஸ்கரன் ஜதுர்சிகா

தற்போது நிலவிவரும் வரட்சி காரணமாக குடிநீருக்கான தட்டுப்பாடுகள் பல்வேறு பகுதிகளிலும் நிலவி வருகின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தின் தட்டுவன்கொட்டி பூநகரி கல்லாறு பகுதிகளில் வரட்சி காலங்களில் தவிர்ந்த ஏனைய காலங்களிலும் குடிநீர்த்தேவை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக காணப்படுகின்றது. அதாவது வருடம் முழுவதும் குடிநீர் விநியோகிக்க வேண்டிய பிரதேசங்களாக இந்த மூன்று பிரதேசங்களும் காணப்படுகின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தின் மிகவும் தொன்மையானதும் பெரும் கற்காலபண்பாட்டு காலம் தொடக்கம் மக்கள் சமுகம் வாழ்ந்து வந்ததாக கூறப்படும் பூநகரி பிரதேசத்திற்கு இருக்கின்ற குடிநீர்த்தேவையை பூர்த்தி செய்வதற்குரிய வழிவகைள் இதுவரை ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி கண்டாவளை பச்சிலைப்பள்ளி பூநகரி ஆகிய நான்கு பிதேச செயலாளர் பிரிவுகளிலும் அதிகூடிய குடிநீர்ப்பிரச்சனையை எதிர்கொள்ளும் பிரதேசமாக பூநகரி பிரதேசம் காணப்படுகின்றது.

அதாவது பூநகரி பிரதேச செயலர் பிரிவுகளில் உள்ள 19 கிராம அலவலர் பிரிவுகளில் பத்திற்கும் மேற்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளுக்கு தினமும் குடிநீர் விநியோகம் மேற்கொள்ள வேண்டிய நிலை காணப்படுகின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள 19 கிராம அலுவலர் பிரிவுகளிலும் தற்போது 7335வரையான குடும்பங்கைளச் சேர்ந்த இருபத்தி ஐயாயிரத்து 768 பேர் வரையில் மீள்குடியேறியுள்ளனர்.

இதில் பத்து வரையான கிராம சேவகர் பிரிவுகளில் வாழும் சுமார் 3112 குடும்பங்களுக்கும் இப்பகதிகளில் இயங்கி வருகின்ற ஒன்பது பாடசாலைகளுக்கும் குடிநீர் விநியோகம் என்பது மிக அவசியமான ஒன்றாகக் காணப்படுகின்றது.

வறட்சி

மேற்படி குறித்த குடும்பங்களும் பாடசாலை மாணவர்களம் அன்றாடம் தமக்கான குடிநீரைப்பெற்றக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

குறிப்;பாக கறுக்காய் தீவு செட்டியகுறிச்சி ஞானிமடம் சித்தங்குறிச்சி மறவன் குறிச்சி கொல்லக்குறிச்சி செம்மன்குளம் பரமன்கிராய் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் குடிநீர் விநியோகம் வேண்டிய நிலை காணப்படுகின்றது.

இ;வ்வாறு குடிநீர்த்தேவை அதிகளவில் காணப்படுகின்ற போதும் குடிநீரைப் பெற்றக்கொள்ளக் கூடிய நீர் நிலைகள் என்பது மிகமிக குறைவு பூநகரி தெளிகரை என்ற பகுதியில் உள் ளகிணறு ஒன்றில் இருந்தே தண்ணீரைப்பெற்றுக் கொள்ளமுடியும் அதுவும் போதிய அளவு தண்ணீர் கிடைப்பதில்லை எனத்தெரிவிக்கப்படுகின்றது.

அதாவது இந்தப்பகுதியில் பொதுமக்களின் தேவைகள் என்பதை விட இராணுவத்தினர் கடற்படையினரின் தேவைகளும் காணப்படுகின்றன. பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டிய குடிநீராக நாள் ஒன்றுக்கு சுமார் இருபதாயிரம் லீற்றருக்கும் மேலான குடிநீரை விநியோகிக்க வேண்டியிருப்பதாகவும் இதற்கான குடிநீரைப் பெற்றுக்கொள்வதற்கு தெளிகரை செம்மண் குன்று வெட்டுக்காடு ஆகிய பகுதிகளிலேயே குடிநீரைப் பெற்றுக்கொள்ளவேண்டும் தற்போது இந்த நீர்நிலைகளில் தண்ணீரைப் பெற்றுக்கொள்வதிலும் சிரமம் அதாவது நாள் ஓன்றுக்கு இருபதாயிரம் லீற்றருக்கும் மேற்பட்ட தண்ணீரை பெற்றுக்கொள்ளக் கூடிய வசதிகள் இல்லை.
அததுடன் போதிய வாகன வசதிகளும் இல்லை என்றும் பூநகரி பிரதேச சபை தெரிவித்துள்ளது.

குறிப்பாக பூநகரி பிரதேசத்தில் குடிநீரை விநியோகிக்க வேண்டிய நிலையில் பிரதேசசபை காணப்படுகின்றது.அதாவது பூநகரி பிரதேசத்தில் உள்ள 385 வரையான சுமார் 490.1 கிலோ மீற்றர் வரையான கிராமிய வீதிகள் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்குச் சொந்தமான 74.1 கிலோ மீற்றர் நீளமான வீதிகள் என்பன புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுவதனால் குடிநீரை தினமும் விநியோகிப்பதிலும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

குடிநீரை விநியோகிக்கும் பிரதேசசபை தனதுசபை வருமானத்தினைக்கொண்டு குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ளமுடியாத நிலையில் ஏனைய உதவிகயை வைத்தே தண்ணீரை விநியோகிக்க வேண்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

பூநகரி 2

தற்போது நிலவும் வரட்சி காரணமாக மக்களுக்கான குடிநீர்த்தட்டுப்பாடு என்பதை விட பூநகரி பிரசேத்தில் உள்;ள நிலைகள் நீண்டகாலங்களுக்கு தண்ணீரை வைத்திருக்கக்கூடிய நீர் நிலைகளாக இல்லாத காரணத்தினால் தற்போதைய வரட்சியினால் அவைவ ற்றிக்காணப்படுவதனால் கால்நடைகளுக்கான தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் குடிநீர்இன்றியும் அதிக வரட்சியினாலும் கால்நடைகள் ஒரு வித நோயினால் பாதிக்கப்பட்டு ஏராளமான கால்நடைகள் அண்மைக்காலமாக உயிரிழந்துள்ளன.

இவ்;வாறு வரட்சியும் கால்நடைகள் இறப்பதும் பொதுமக்கள் குடிநீருக்கு திண்டாடுவதும் வருடாந்தம் நடைபெறும் ஒருவிடயமாகி விட்டது.

வருடாந்தம் வரட்சிக்காலங்களில் மக்களை சந்திக்கும் அரசியல் வாதிகள் மக்கள் பிரதிநிதிகள் எதிர்காலத்pல் மக்களின் அடிப்படைப்பிரச்சனைகளுக்கு நிரந்;தரமான தீர்வுகளை ஏற்படுத்துவோம் என்று வாக்குறுதிகளை வழங்கிவட்டு செல்வதும் அதனை நம்பி மக்கள் இருப்பதும் வருடாந்தம் ஏற்படும் வரட்சியினால் பாதிப்புக்களை எதிர்கொள்வதும் தொடர்ந்தும் கொண்டே இருக்கின்றது.

சுமார் மூவாயிரத்து 112 குடும்;பங்;;களைச் சேர்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்;படட மக்கள் பாடசாலை மாணவர்கள் வாழ்வாதாரத்;திற்காக வளர்க்கப்படும் கால்நடைகள் என்பவற்றின் குடிநீர் தேவைக்கு நிரந்தரமான ஓரு தீர்வு கிடைக்கவேண்டும் என்பது மிக முக்கியமான ஒரு விடயம். தற்போது இந்த பிரதேசத்தில் புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்ற வீதிகள் சாதாரண ஒரு துவிச்சக்கர வண்டிகளில் கூட பயணிக்க முடியாத நிலையில் காணப்;படுகின்றன.

அத்துடன் பருவமழை காலங்களில் சேறும் சகதியுமாக காணப்படும் இவ்வாறு வருடம் முழுவதும் வரட்சிக்காலங்களிலும்மழை காலங்களிலும் ஏதோ ஒரு விதத்;திலும் துன்பங்களை அனுபவிக்கும் இப்பகுதி மக்;களில் ஒரளவு வசதி படைத்தவர்கள் இடம்பெயர்ந்து வேறு இடங்களுக்கு வசதி வாய்ப்புக்களைத் தேடிச் செல்கின்றனர்.

வசதி வாய்ப்புக்கள் இல்லாத வறிய குடும்பங்களே இவ்வாறு துன்பங்களை அனுபவித்து வருகின்றன.
இவர்களின் எதிர்காலம் குறித்;து கவனம் செலுத்த வேண்டிய தேவையுள்ளது.

இந்தப்பிரதேசத்தில் சேதமடைந்த நிலையில் காணப்படும் குளங்கள் நீர் நிலைகள் புனரமைக்;கப்படவேண்டும் என்பதுடன் புதிய நீர் நிலைகள் உருவாக்கப்படவேண்டும் அத்துடன் யுத்த காலத்தில் கடல் நீர் உவர் தடுப்ணைகள் சேதமடைந்து காணப்படுகின்றன.

அவற்றை புனரமைக்க வேண்டும் இவ்வாறான அபிவிருத்திப் பணிகள் உரிய முறையில் முன்னெடுக்கப்;படவேண்டும்

மண்டைக்கல்லாறு குடமுருட்டி ஆறு கோடாலியாறு முடக்கன் ஆறு வண்ணாங்குளம் நல்லதண்ணீர்குளம் மாளாப்புக்குளம் கிராஞ்சிக்குளம் மேளாய்க்குளம் நெடுங்குளம் திகிரிக்குளம் ஈநொச்சிக்குளம் செம்மண்குளம் பெரிய தம்பிராய் குளம் மூலையடம்பன் குளம் கரிக்கோட்டன்குளம் என ஏராளமான குளங்களையும் கொண்ட அதிக நீர் வரத்துகக்கொண்ட பகுதியாக பூநகரி பிரதேசம் காணப்படுகின்றது.

இவை அபிவிருத்தி செய்யப்பட்ட வேண்டும் என இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். நீண்ட வரலாற்றையும் வரலாற்று அடையாளங்களையும் கொண்ட பூர்வீக நிலமான பூநகரியின் அடையாளங்கள் பேணப்படவேண்டும் இதற்கு அடிப்படையாக நீர்த்தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டவேண்டும்.
உலக நாகரீகங்கள் நீர் நீலைகளில் இருந்தே தோற்றியதாக வரலாறுகள் கூறுகின்றன.

பூநகரி 3

இன்று தண்ணீரின்றி பூநகரியின் வரலாறுகள் அழியும் அபாயநிலை காணப்படுகின்றது.

வரலாற்றுக்காலங்களில் பண்டைய வர்த்தக தொடர்புகள் பூநகரி கடலோர மேற்கு பிரதேசங்களுடாக மாந்தை வரை பரவியிருந்துள்ளது என்றும் பொன்னேரி என்றபதமே மருவி காலப்போக்கில் பூநகரியாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் பழங்குடி மக்கள் வாழ்ந்த பூநகரின் வரலாறுகள் மிக நீண்ட வரலாற்றைக் கொண்டதுடன் காலத்திற்கு காலம் தமிழர் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றும் உள்ளது.

1993ம் ஆண்டில் விடுதலைப்புலிகள் தணிணீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய உயிரினமான தவளையின் பெயரைச் சூட்டி ஈருடகத் தாக்குதலை நடத்தி வெண்ற வரலாறும் இந்த புநகரியில் தான் இடம் பெற்றது.
இதன் வரலாறுகள் பேணப்பட வேண்டும் இங்கு வாழ்ந்த மக்கள் சமுகம் வாழ்வதற்கான இயல்பு நிலை ஏற்படுவதற்கு குடிநீர் மிக முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளதனைக் கருத்திற்கொண்டு நிரந்தரமான ஒருதீர்வு பெறப்படவேண்டும்.

இப்போது கடல்நீரை நன்னீராக்குவதில் உவர் நீரை சுத்திகரிப்பது என நவீன வசதிகள் உள்ளபோதும் இந்த பிரதேசம் குடிநீர் தட்டுப்பாடு தீர்க்கப்படாத பிரதேசமாகக் காணப்படுகின்றது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *