Search
Monday 18 June 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பறக்கும் தட்டுச் செயற்படும் பொறிமுறையும் உருள் தொழில்நுட்பவூர்தி வேற்றுக்கிரக வாசிகளும்

பறக்கும் தட்டுச் செயற்படும் பொறிமுறையும் உருள் தொழில்நுட்பவூர்தி வேற்றுக்கிரக வாசிகளும்

மருத்துவர். சி.யமுனாநந்தா

வேற்றுக்கிரக வாசிகள் பற்றிய கருதுகோள்களும் பறக்கும் தட்டில் வேற்றுக்கிரக வாசிகளின் பயணங்களும் நிஜம் என்று கூறும் வகையில் பறக்கும் தட்டுக்கள் பற்றிய அவதானங்கள் எடுத்துக்கூறுகின்றன. அண்மையில் ஒலியை விட வேகமான பறக்கும் தட்டினை அவதானித்ததாக  அமெரிக்கப் பாதுகாப்புத்துறை செய்தி வெளியட்டுள்ளது. அமெரிக்காவின் அதி தொழில்நுட்பம் கூடிய F-18 ஜெட் விமானங்கள் பின் தொடர்ந்தபோது அவை மறைந்துவிட்டன.

இவ் வேற்றுக்கிரக போக்குவரத்துச்சாதனம் திண்மமாகவும் வெண்மையாகவும் கரடுமுரடற்ற மேற்பரப்பாகவும் விளிம்புகள் அற்றதாகவும் காணப்பட்டது. எமது விமானம், உலங்கு வானூர்தி என்பவற்றில் காணப்படும் பறப்பதற்கு எந்தவொரு வடிவிலான உதவும் இறக்கைகள், விசிறிகள் காணப்படவில்லை. இது நீண்ட முட்டை வடிவில் இருந்தது.

பறக்கும் தட்டுச் செயற்படும் தொழில்நுட்பம் (Wrap up technology) உருள் தொழினுட்பம் எனலாம். இத் தொழில்நுட்பத்தினை மனிதர்கள் உருவாக்கும் வகையில் பூமியில் தொழில்நுட்பம் வளரவில்லை. ஆனால் வேற்றுக்கிரக வாசிகள் இத்தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்துகின்றமையை பறக்கும் தட்டுக்களின் அவதானிப்புக்களும் அவற்றினை நெருங்கும்போது அவை மாயமாதலும் உறுதிப்படுத்துகின்றன. இதனைப் பாமர மக்களுக்கு விளங்கப்படுத்துவதற்கு உணவுச்சாலையில் உருளைக்கிழங்குக் கறியினை போண்டா, பற்றிஸ், சமோசா, மசாலைத் தோசை, பேஸ்ரி என ஒவ்வொரு வடிவில் அனுப்புவதுபோல் பறக்கும் தட்டில் வேற்றுக்கிரக வாசிகளின் பயணம் அமையும்.

உருள் தொழில்னுட்பவூர்திகள் (Warp drives) தம்மைச்சூழ உள்ள வெளி, காலம் என்பவற்றுடன் ஈர்ப்பு விசைகளுக்கு அப்பால் உருள் தொழில்னுட்பவூர்தி பயணிக்கின்றது. இதற்காக பெருமளவு கருத்துளைச்சக்தி (Dark Energy) பிரயோகிக்கப்படுகின்றது. இதற்குரிய சக்தியை குவாண்டம் வெற்றுச்சக்தி (Quantum Vacuum Energy) எனவும் கூறலாம்.

செய்மதிகள் புவியீர்ப்பு விசைக்கு எதிராக எவ்வாறு பயணிக்கின்றனவோ அவ்வாறே உருள் தொழில்னுட்பவூர்திகள் காலவெளியினை ஊடறுத்தவாறு பயணிக்கின்றன. இதனையே நாம் பறக்கும் தட்டுக்கள் என்கின்றோம்.

 

உருள் தொழில்நுட்ப மூலம் காலவெளியை வளைக்கும்போது பெருமளவு சக்தி விரயமாகும். இதன்போது சுமார் 100x100x100 மீற்றர் கனவளவினை ஒரு நீர்க்குமிழிபோல் மாற்ற முடியும். அதாவது ஒரு அறையினைத் தீப்பெட்டியின் கனவளவில் இயக்கக்கூடியதாக அமையும். உருள் தொழில்நுட்பம் (Wrap up technology ) மூலம் காலவெளியினையும் ஈர்ப்பு அலைகளையும் தாவி இயங்குதல் கசிமிர் (Casimir effect ) என்பர். அதாவது உருள் தொழில்னுட்பவூர்தியினை மூடி காலம் வெளிஈர்ப்பு விசைகளை தவிர்க்கும் பொறிமுறை காணப்படும். இதனாலேயே மனிதர்களால் அவதானிக்கப்படும் பறக்கும்தட்டுக்கள் கணநேரத்தில் காலவெளிக்கு அப்பால் உருள் தொழில்நுட்பத்தினால் மறைந்துவிடும்.

உருள் தொழில்னுட்பவூர்திகள் (Warp drives) ஒளியை விடவும் வேகமாக பயணிக்கும் தகையது. இதனால் சூரிய ஒளியை விட 100 மடங்கு வேகத்திலும் செல்ல முடியும். இவ்வூர்தியில் 100x100x100 மீற்றர் கனவளவை சிறிய நீர்க்குமிழியின் கனவளவுக்கு மாற்றி அல்லது அதனை பார்ப்பவர்களுக்கு சிறிய நீர்க்குமிழி மாறி கால வெளியில் தெரியுமாறு பயணிக்கலாம். இதன் மூலம் ஒளியின் 100 மடங்கு வேகத்தில் பயணத்தினை பூமியில் இருந்து மேற்கொள்ளும்போது வியாழனை 36 நிமிடங்களிலும், நெப்டியூனை 4 மணித்தியாலங்களிலும், அல்பா சென்றூரியனை 15 நாட்களிலும் அடையலாம்.

தற்போதைய விஞ்ஞான வளர்ச்சி போல் உருள் தொழில்னுட்பத்தினை பயன்படுத்தமுடியாத அளவில் இருந்தாலும் அதனை விளங்கக்கூடியதாக உள்ளது. இத் தொழில்நுட்பத்தினை கட்டுப்படுத்தும்போது பெருமளவு சக்தி வெளியேற்றப்படுவதால் அதனை அண்டவெளியிலேயே இயக்குவதற்கு மனிதன் எதிர்காலத்தில் முயல வேண்டும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *