Search
Monday 26 June 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மலேசியா விமானத்தை தேடும் பணிகள் கைவிடப்பட்டன

மலேசியா விமானத்தை தேடும் பணிகள் கைவிடப்பட்டன

கடந்த மூன்று வருடங்களாக ஜியாங் குவாய் விமானத்துடன் காணமற்போன தனது தாயை தேடி உலகின் பல பகுதிகளிற்கு சென்றுள்ளார். சீனாவில் ஆலயங்களிற்கு வெளியே பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளார், தூதரங்களிற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

 

3475
மடகாஸ்கர் உட்பட பல நாடுகளின் கடற்கரைகளில் தேடியுள்ளார்.ஆஸ்திரேலியாவின் மீட்பு குழுவினரை சந்தித்து தகவல்களை பெற முயன்றுள்ளார்.

அவரின் தாயர் 2014 இல் காணமற்போன மலேசிய விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்த ஓருவர்,அந்த விமானம் 239 பேருடன் தீடிரென மாயமாகியது.

செவ்வாய்கிழமை குறிப்பிட்ட விமானத்தை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை நிறுத்துவதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளமை உண்மையை அறியலாம் என் ஜியாங்கின் எதிர்பார்ப்புகளை தகர்த்துள்ளது. அவர் இந்த அறிவிப்பால் இடிந்துபோயுள்ளார்.

நான் மிகுந்த ஏமாற்றமும் சீற்றமும் அடைந்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.
விமானத்திற்கு என்ன நடந்தது என்பதை கண்டுபிடிப்பதற்காக அவர்கள் பல நடவடிக்கைகைள முன்னெடுத்திருக்க முடீயும், ஆனால் அவர்கள் அந்த இரகசியத்தினை அறியவிரும்பவில்லை, என அவர் தெரிவித்தார்

அந்த விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த 153 சீனா பயணிகளில் ஓருவர் அவரது 63 வயது தாயார்.2014 மார்ச் மாதம் எட்டாம் திகதி மலேசிய தலைநகரிலிருந்து புறப்பட்டு சில மணிநேரத்தில் அந்த விமானம் காணமற்போனது உலகை உலுக்கியிருந்தது.குறிப்பிட்ட விமானத்தில் பல நாடுகளை சேர்ந்த பயணிகள் காணப்பட்டனர்.

மூன்று வருடங்களாகின்ற நிலையில் தங்கள் குடும்பத்தவர்களிற்கு என்ன நடந்தது என்பதை அறியமுடியாத நிலையில் அவர்கள் காணப்படுகின்றனர். குறிப்பிட்ட விமானத் புறப்பட்ட பின்னர் தனது பயணப்பாதையிலிருந்து விலகி இந்துசமுத்திர பகுதியில் விழுந்து நொருங்கியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவிப்பதை தங்கள் உறவுகளை இழந்த பல சீனர்கள் நம்பதயாரில்லை. விமானம் அவ்வாறு பாதை மாறி பயணித்தது எனவும் தாங்கள் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவிப்பதை நம்புவதற்கு நாங்கள் தயாரில்லை, மலேசிய அரசாங்கம் ஏதோ சில தகவல்களை எங்களிடமிருந்து மறைக்க முயல்கின்றது என்கிறார் மலேசியாவின் ஸ்டீவ்வாங் , இவரும் தனது தாயை விமானத்தில் இழந்தவர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *