தலைப்பு செய்திகள்

மீண்டும் மீண்டும்  மக்கள் புரட்சியாய் வெடித்தெழுவோம்!

மீண்டும் மீண்டும்  மக்கள் புரட்சியாய் வெடித்தெழுவோம்!

ஈகத்தின் சிகரம் எங்கள் தியாக தீபம்! -மண்ணில்
ஏற்றிய ஒளியில் ஒளிரட்டும் எமக்கொரு தேசம் !
அவனது தீராத தாகம் தமிழின விடுதலைத் தாகம்!
அது தீர்ந்திடும் நாளில் மலர்ந்திடும் எமக்கான தாயகம்!

பசிதீயினை சுமந்துதான் மக்கள்புரட்சி   தீயினை மூட்டினான்! -உன்னத
நோன்பினை  ஏற்றுதான் காந்திதேசத்தின்  முகத்திரை கிழித்தான்!
சாயாத மாவீரம் கண்டது ஈழநாட்டிலே   எங்கள்  தமிழினம் !
சளைக்காத தியாகத்தை தந்து சென்றது திலீபனின் நெஞ்சுரம்!

பாரதபோரினால் விளைந்தது அந்த பார்த்தீபன் உரைத்த  கீதை! -அப்
பாரதத்தின் துரோகதால் புரிந்தது எங்கள் பார்த்தீபன் சொன்ன பாதை!
மீண்டும் மீண்டும்  மக்கள் புரட்சியாய் வெடித்தெழுவோம்!
பகைவர் மிரண்டு ஓடிட எம் உரிமைப் போருக்கு அணிதிரள்வோம்!

                                                                                                                                                         -கொற்றவை


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *