Search
Monday 26 June 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யார்  வீட்டு அம்மிக்கல்லில் …. யார் அரைப்பது மிளகுவைத்து?

யார்  வீட்டு அம்மிக்கல்லில் ….  யார் அரைப்பது மிளகுவைத்து?

ஏர்காலில் மாடுபூட்டி என் அப்பன்

ஓடாய் இளைத்து  உழைத்தது

சீரென்று கொடுத்த நிலம்காண

நெடுந்தூரம் கடந்து ஓடோடி வந்தேன்ஐயோ !

 

பேரெழுதி வைத்துவிட்டார் அங்கே

என் காணிய தன்பூமியென்று  …

போர் ஓய்ந்த பின்னரும் எம்மண்ணில்

போய்ச் சேராத காடேறிப் பேய்கள் !

 

ஊரார் சொத்துக்கு தன்பேரில் உறுதியை

உடையார் எழுதி  வைத்ததைப்போல்

யார்  வீட்டு அம்மிக்கல்லில் ….

யார் அரைப்பது மிளகுவைத்து என்று ;

 

ஊர் அழுகுது மாரடித்து….

சோர்ந்து போனேன் நான் துடித்து !!

தீர்வுதரும்வரை  நீரருந்தேன்என்

சாவுவரினும் என்னிலத்தை காவுகொடேன்!!!  

-கொற்றவை 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *