Search
Monday 24 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ்ப்பாணத்தின் பல மரபுகளும் விளையாட்டுக்களும் இன்று வெறும் நினைவுகளாகி விட்டன: யாழ்ப்பாண நினைவுகள் எழுத்தாளர் வேதநாயகம் தபேந்திரன்

யாழ்ப்பாணத்தின் பல மரபுகளும் விளையாட்டுக்களும் இன்று வெறும் நினைவுகளாகி விட்டன: யாழ்ப்பாண நினைவுகள் எழுத்தாளர் வேதநாயகம் தபேந்திரன்

ஸ்ரீ. ஷாலினி

பூத்திடும் பனந்தோப்பு , யாழ்ப்பாண நினைவுகள் பாகம் (1,2,3), போன்ற நூல்களை எழுதி வெளியிட்டிருப்பவர் ஈழத்து எழுத்தாளர் திரு வேதநாயகம் தபேந்திரன்.  இவர்  போட்டி பயிற்சிகளுக்கான முதாவது பொது அறிவு நூலினை 1999 ஆண்டு வெளியிட்டிருந்தார்.

தனது படைப்புக்கள் எத்தகைய தனிச்சிறப்பியல்புகளை கொண்டுள்ளன என்ற விபரங்களை ஒரு சந்திப்பில் அவர் எம்முடன் பகிர்ந்துகொண்டார்.

” என்னுடைய அனுபவம் என்ற ரீதியில் சிறிது சிறிதாக கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் என்று எழுத ஆரம்பித்தேன். 1996 ஆம் ஆண்டு எனது தொகுப்புகளை புத்தகமாகவும் வெளியிட்டேன். எனது எழுத்துக்கு பத்திரிகைகளும் உந்துதலாக அமைந்தன. என்னை பொறுத்த வரையில் என் குடும்பத்தவர்களின் ஒத்துழைப்பும் மிகப்பெரிய வெற்றி என்றே கூறலாம்.” என்று தனது எழுத்து துறை அனுபவத்தை அவர் குறிப்பிடுகிறார்.

photo 2எனது நூல்கள் இலங்கை வாழ் தமிழர்களை குறிப்பாக யாழ்பாணத்து மக்களின் வாழ்வியலை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளன. இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி என்று கூறுவார்கள். எங்கோ இருக்கும் இந்திய மொழி நடை மூலம் எமது மக்களின் வாழ்வியலை விவரிக்க இயலாது. எனவே எனது எழுத்துக்கள் ஈழத்தமிழ் மொழி நடையிலேயே அமைந்துள்ளன.

மொழிநடை பரிச்சயமானதாகவும், எழுத்துக்கள் மக்களை கவர கூடியனவாகவும், ரசனை தன்மை மிக்கனவாகவும் இருக்க வேண்டும். எனது நூல்களை வெளி நாடுகளில் உள்ள எமது சொந்தங்களே அதிகமாக விரும்பி வாங்குகின்றார்கள். போர்க்கால வாழ்வியல் மாற்றங்கள், சமூக நோக்கம், தொழில் நுட்ப மாற்றம் என பல தரப்பட்ட பார்வைகளையும் எனது நூல்களில் காணலாம். யாழ்ப்பாணத்தில் வழக்கொழிந்து போயுள்ள பல மரபுகள், விளையாட்டுக்கள் என்பன இன்று வெறும் நினைவுகளாகி விட்டன. அவற்றினை எனது எழுத்துக்களின் மூலம் வெளிப்படுத்தி இருக்கின்றேன்.

photo 3எனது எழுத்துக்கள் சுவையம்சம் நிறைந்தவைகளாக இருப்பதால் பலராலும் பாராட்டப்படுள்ளன. மூத்த எழுத்தாளர் திரு.தில்லை நடராஜா, மற்றும் நந்தினி சேவையர்  அவர்களுடைய ஊக்குவிப்பும் எனக்கு நிறையவே உற்சாசாகத்தினை தந்துள்ளது. எனது நூல்களினை வெளியிடுவதற்கு எனது சொந்த மூலதனத்தினை மட்டுமே பயன்படுத்தி உள்ளேன். இலங்கையில் வெளியான தேசிய பத்திரிகையின் ஆசிரியர்கள் இடைவிடாது தந்த ஊக்குவிப்பும் நன்றிக்குரியது. சில நலன் விரும்பிகள் சிறிய அன்பளிப்புகளை தந்து என்னை ஊக்கப்படுத்தி இருக்கின்றார்கள். என்றாலும் ஒரு எழுத்தாளனுக்கு மனம் நிறைந்த பாராட்டே மிகப்பெரிய வெற்றி, என்று அவர் தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *