தலைப்பு செய்திகள்

யாழ்ப்பாணத்தில் சகல பீடங்களையும் உடைய தனியார் பல்கலைக்கழகம் அமைக்கப்படல்

யாழ்ப்பாணத்தில் சகல பீடங்களையும் உடைய  தனியார் பல்கலைக்கழகம் அமைக்கப்படல்

மருத்துவர் சி. யமுனாநந்தா

தமிழ்சமூகத்தினை அடுத்த நூற்றாண்டுக்கு இட்டுச்செல்ல, யாழ்ப்பாணத்தில் சகல பீடங்களையுமுடைய தனியார் பல்கலைக்கழகம் ஒன்றினை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சிறப்புச் சித்திகள் பெற்ற அனைவருக்கும், தாம் விரும்பிய பாடநெறிகளைத் தெரிவு செய்வதற்கு சந்தர்ப்பம் இலவசக்கல்வி முறையில் இயலாது. இதனால் பலர் பல்வேறு நாடுகளிற்கு பெரும் பணத்தினைச் செலவு செய்து பல்கலைக்கழகக் கல்வியினைத் தொடர்கின்றனர்.

கணணித் தொழில்நுட்பம், மருத்துவத் தொழில்நுட்பம், இயந்திரவியல் உட்பட பலதொழில்நுட்ப பீடங்களை உருவாக்குவதற்கு நாம் முதலீடுகளை மேற்கொள்ளலாம்.

பல கல்வியியலாளர்கள், பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பு, ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கான புறச்சூழல் இல்லாத நிலையில் புலம்பெயர்கின்றனர். எனவே சமூக ஈர்ப்புக்கு புதிய வடிவில் ஓர் பல்கலைக்கழகம் உருவாக்கப்படல் இன்றியமையாதது ஆகும்.

தமிழ்ச்சமூகம் தனது முழுப்பலத்தினையும் பிரயோகித்து ஓர் தனியார் பல்கலைக்கழகத்தினை யாழ்ப்பாணத்தில் அமைக்க வேண்டும். சிறந்த கல்வியியலாளர்களே எதிர்காலத்தைக் கட்டிக்காக்க வேண்டும். இதற்கான முதலீடு ஓர் வர்த்தகம் அல்ல. மாறாக அது ஓர் சமூக மூலதனமாகும்.

எமது பிரதேசத்தில் உள்ள இந்து ஆலயங்கள் தர்மநிதிகளை, பல்கலைக்கழகம் உருவாக்க அன்பளிப்பாகக் கொடுத்து உதவல் வேண்டும். தமிழ்மொழி, சைவசித்தாந்தம் இவற்றிற்கு நாம் முதலிடும் பணம் அதிகமாக இல்லை. ஆனால் இதனை நாம் கருத வேண்டும். ஒவவொரு பிரதான இந்து ஆலயமும் ஓர் கல்விப்பீடம் உருவாவதற்கு உதவலாம்.

தற்போதைய சனத்தொகைப் பரம்பல் அடிப்படையில் ஊர்காவத்துறை, வேலணைப் பிரதேசத்தில் உத்தேச பல்கலைக்கழகத்தினை நிறுவலாம்.

அரசியல் கலப்பு, பாலியல் இலஞ்சம், அழுக்காறு அவா, ஊழல், வேலைநிறுத்தம் என்பன இல்லாத நேரமுகாமைத்துவத்துடன் கூடிய பல்கலைக்கழகக் கல்வியினை உருவாக்கவும் பல்லாயிரக்கணக்கான கல்வியியலாளர்களுக்கு வேலை வாய்ப்பினைக் கொடுக்கவும், எமது சமூகம் தமிழ் வரலாற்றுடன் நீடித்து நிலைக்கவும் இத்தகைய முயற்சி உதவும் என்பதில் ஐயமில்லை.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *