Search
Tuesday 17 July 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ரணிலிடம் வசப்படாமல் இருந்துவரும் ஜனாதிபதி பதவி

ரணிலிடம் வசப்படாமல்  இருந்துவரும் ஜனாதிபதி பதவி

வீரகத்தி தனபாலசிங்கம்

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பாரா­ளு­மன்ற உறுப்­பினர் என்ற வகையில் தொடர்ச்­சி­யாக 40 வரு­டங்­களை நிறைவு செய்­தி­ருக்­கிறார்.1977 ஜூலை பொதுத்­தேர்­தலில் கொழும்­புக்கு வெளியே பிய­கம தொகு­தியில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் வேட்­பா­ள­ராகப் போட்­டி­யிட்டு தனது 28 வயதில் முதன் முத­லாக பாரா­ளு­மன்­றத்­துக்குத் தெரி­வான அவர், அதற்குப் பிறகு நடை­பெற்ற சகல பொதுத் தேர்­தல்­க­ளிலும் வெற்­றி­பெற்று வந்­தி­ருக்­கிறார். இலங்­கையின் பாரா­ளு­மன்ற அர­சியல் வர­லாற்றில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் மூத்த தலை­வர்­களில் ஒரு­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான காலஞ்­சென்ற மைத்­தி­ரி­பால சேன­நா­யக்­க­வுக்கு அடுத்­த­தாக தொடர்ச்­சி­யாக 40 வரு­டங்கள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்­து­வந்­தி­ருப்­பவர் விக்­கி­ர­ம­சிங்க.1947 ஆகஸ்ட்/செப்­டெம்­பரில் நடை­பெற்ற இலங்­கையின் முதல் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் மத­வாச்சி தொகு­தியில் இருந்து தெரி­வான சேன­நா­யக்க 1994 வரை 47 வரு­டங்கள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்தார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

1977 ஜூலை பொதுத் தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜெய­வர்­தன தலை­மையில் ஐக்­கிய தேசியக் கட்சி பாரா­ளு­மன்­றத்தில் ஆறில் ஐந்து பங்கு ஆச­னங்­களைக் கைப்­பற்றி பிர­மாண்­ட­மான வெற்­றியைப் பெற்­றது. அந்தப் பாரா­ளு­மன்றம் ஆகஸ்ட் 4 ஆம் திக­தியே முதன் முத­லாகக் கூடி­யது. அன்று பாரா­ளு­மன்­றப்­பி­ர­வே­சத்தைச் செய்த விக்­கி­ர­ம­சிங்க நேற்று முன்­தினம் வெள்­ளிக்­கி­ழ­மை­யுடன் இடை­ய­றாத நான்கு தசாப்­த­கால பாரா­ளு­மன்ற அங்­கத்­து­வத்தைப் பூர்த்தி செய்­தி­ருக்­கிறார். அதை முன்­னிட்டு அன்­றைய தினம் அவரைக் கௌர­விக்­கு­மு­க­மாக விசேட அமர்­வொன்­றையும் பாரா­ளு­மன்றம் நடத்­தி­யது.

தனது தயார் நளினி மற்றும் தந்தை எஸ்மொண்ட் ஆகியோருடன் ரணில்

தனது தயார் நளினி மற்றும் தந்தை எஸ்மொண்ட் ஆகியோருடன் ரணில்

பிர­தமர் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் சேர்ந்து பாரா­ளு­மன்­றத்­துக்கு 40 வரு­டங்­க­ளுக்கு முன்னர் தெரி­வா­ன­வர்­களில் இன்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக இருப்­ப­வர்கள் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­தனும் தற்­போ­தைய தேசிய ஐக்­கிய அர­சாங்­கத்தில் அமைச்­ச­ராக இருப்­ப­வ­ரான காமினி ஜெய­விக்­கி­ரம பெரே­ராவும் தான். அன்று தமிழர் விடு­தலை கூட்­ட­ணியின் சார்பில் திரு­கோ­ண­மலை தொகு­தியில் சம்­பந்தன் தெரி­வு­செய்­யப்­பட்ட அதே­வேளை , ஜெய­விக்­கி­ரம பெரேரா ஐக்­கிய தேசியக் கட்­சியின் சார்பில் குரு­நாகல் தொகு­தி­யி­லி­ருந்து தெரி­வானார். ஆனால் , இரு­வரும் தொடர்ச்­சி­யாக பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்­கக்­கூ­டி­ய­தாக இருக்­க­வில்லை. 1983 கறுப்பு ஜூலையைத் தொடர்ந்து நாட்டுப் பிரி­வினைக் கோரிக்­கையைச் சட்­ட­வி­ரோ­த­மா­ன­தாகப் பிர­க­டனம் செய்து ஜெய­வர்­தன அர­சாங்கம் கொண்­டு­வந்த அர­சி­ய­ல­மைப்­புக்­கான 6 வது திருத்தச் சட்­டத்­தை­ய­டுத்து சம்­பந்தன் பாரா­ளு­மன்ற உறுப்­பு­ரி­மையை இழக்­க­வேண்­டி­ய­தா­யிற்று. ஜெய­விக்­கி­ரம பெரே­ராவைப் பொறுத்­த­வரை, 1988 ஏப்­ரிலில் முதன்­மு­த­லாக மாகா­ண­ச­பை­க­ளுக்­கான தேர்­தல்கள் நடத்­தப்­பட்­ட­போது வடமேல் மாகா­ணத்தின் முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக ஐக்­கிய தேசியக் கட்சி அவரை நிறுத்தத் தீர்­மா­னித்­ததால் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியைத் துறக்­க­வேண்­டி­யேற்­பட்­டது.

பிர­தமர் விக்­கி­ர­ம­சிங்க பாரா­ளு­மன்றப் பிர­வே­சத்­தைச்­செய்த பிறகு இது­வ­ரையில் 7 பாரா­ளு­மன்றத் தேர்­தல்கள் நடை­பெற்­றி­ருக்­கின்­றன. ஜெய­வர்­தன அர­சாங்கம் கொண்­டு­வந்த 1978 இரண்­டா­வது குடி­ய­ரசு அர­சி­ய­ல­மைப்பின் கீழ் தொகு­தி­வாரி தேர்தல் முறை இல்­லாமல் செய்­யப்­பட்டு மாவட்ட அடிப்­ப­டை­யி­லான விகி­தா­சாரப் பிர­தி­நி­தித்­துவ தேர்­தல்­முறை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. புதிய தேர்­தல்­மு­றையின் கீழான முதல் பாரா­ளு­மன்றத் தேர்தல் ஜனா­தி­ப­தி­யாக பிரே­ம­தாச தெரி­வு­செய்­யப்­பட்டு இரு மாதங்கள் கடந்து 1989 பெப்­ர­வ­ரியில் நடத்­தப்­பட்­டது.அது­வ­ரையில் 1977 ஜூலையில் தெரி­வு­செய்­யப்­பட்ட பாரா­ளு­மன்­றமே 11 வரு­டங்­க­ளாக நீடித்­தது. ஜனா­தி­பதி ஜெய­வர்­தன தனது ஐக்­கிய தேசியக் கட்சி ஆறில் ஐந்து பெரும்­பான்மைப் பலத்தைக் கொண்­டி­ருந்த அந்தப் பாரா­ளு­மன்­றத்தின் ஆயுட்­கா­லத்தை மேலும் 6 வரு­டங்கள் நீடிப்­ப­தற்­காக முன்­னென்­று­மில்­லாத முறை­கே­டு­க­ளுக்கு மத்­தியில் சர்­வ­ஜ­ன­வாக்­கெ­டுப்­பொன்றை நடத்­தினார். 1978 அர­சி­ய­ல­மைப்பைக் கொண்­டு­வ­ரு­வ­தற்கு முன்­ன­தாக பிர­த­ம­ராக இருந்த வேளையில் ஜெய­வர்­தன 1972 அர­சி­ய­ல­மைப்பில் திருத்­த­மொன்றைச் செய்து ஜனா­தி­ப­தி­யாகிக் கொண்டார். 1978 பெப்­ர­வரி 4இல் இலங்­கையின் முத­லா­வது நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்றுக் கொண்ட அவர் தனது முத­லா­வது பத­விக்­காலம் முடி­வ­டை­வ­தற்கு முன்­ன­தா­கவே நாட்டின் முதன் முத­லான ஜனா­தி­பதி தேர்­தலை 1982 அக்­டோ­பரில் நடத்­தினார். ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­வி­யான திரு­மதி சிறிமா பண்­டா­ர­நா­யக்­கவின் குடி­யியல் உரி­மைகள் பறிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் எதிர்க்­கட்­சிகள் மிகவும் கடு­மை­யாக பல­வீ­னப்­பட்­டி­ருந்­தன. தன்னை எதிர்த்துப் போட்­டி­யிட எதி­ர­ணி­யினால் பல­மான ஒரு வேட்­பா­ளரைக் கள­மி­றக்­க­மு­டி­யாத சூழ்­நி­லையை உறு­தி­செய்­து­கொண்டே தேர்­தலை நடத்தி ஜெய­வர்­தன வெற்­றி­பெற்றார். ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு பிறகு இரு­மா­தங்கள் கடந்த நிலையில் சர்­வ­ஜ­ன­வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்­டது. அடுத்த ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான அறி­விப்பை 1988அக்­டோ­பரில் வெளி­யிட்ட ஜெய­வர்­தன பாரா­ளு­மன்­றத்­தையும் கலைத்தார். பிர­தமர் விக்­கி­ர­ம­சிங்க தொடர்ச்­சி­யாக நான்கு தசாப்­தங்கள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருக்­கி­றா­ரென்றால் அதில் 6 வரு­டங்கள் சர்­வ­ஜ­ன­வாக்­கெ­டுப்பின் மூல­மாக நீடிக்­கப்­பட்ட பாரா­ளு­மன்­றத்தின் ஆயுட்­கா­ல­மாகும்.பிறகு நடை­பெற்ற சகல பாரா­ளு­மன்­றத்­தேர்­தல்­க­ளுமே விகி­தா­சாரப் பிர­தி­நி­தித்­துவ அடிப்­ப­டையில் நடந்­த­வையே. அந்தத் தேர்தல் முறை அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டாமல் பழைய தொகுதி அடிப்­ப­டை­யி­லான தேர்தல் முறையே தொடர்ந்தும் நடை­மு­றையில் இருந்­தி­ருந்தால் பிர­தமர் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் இந்த ’40 வருட சாத­னையை’ நிகழ்த்­திக்­காட்ட முடிந்­தி­ருக்­குமோ தெரி­ய­வில்லை.

JR-Jayawardene-Ranil-Wickremasingheநாட்டில் கூடுதல் வாக்­கா­ளர்­களின் ஆத­ர­வைக்­கொண்ட தனிக்­கட்­சி­யாக ஐக்­கிய தேசியக் கட்­சியே நீண்­ட­கா­ல­மாக விளங்கி வந்­தி­ருக்­கி­றது.1956 பொதுத் தேர்­தலில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்க தலை­மை­யி­லான மக்கள் ஐக்­கிய முன்­னணி கூடுதல் ஆச­னங்­களைக் கைப்­பற்றி அர­சாங்­கத்தை அமைத்­த­போ­திலும், வெறு­மனே 8 ஆச­னங்­க­ளி­லேயே வெற்­றி­பெற்று பாரா­ளு­மன்­றத்தில் பிர­தான எதிர்க்­கட்­சி­யா­கக்­கூட வர­மு­டி­யாமல் போன ஐக்­கிய தேசியக் கட்சி நாடு ­பூ­ராவும் கூடுதல் வாக்­கு­க­ளைப்­பெற்­றது.சுதந்­தி­ரக்­கட்சி பண்­டா­ர­நா­யக்க காலத்­திலும் சரி பிறகும் சரி இட­து­சாரிக் கட்­சிகள் உட்­பட பல கட்­சி­க­ளுடன் கூட்­டணி அமைத்து தேர்­தல்­களில் ஐக்­கிய தேசியக் கட்­சியைத் தோற்­க­டித்­ததே முன்­னைய வர­லா­றாகும். கூடுதல் வாக்­குப்­ப­லத்தைக் கொண்ட தனிக்­கட்­சி­யென்ற ஐக்­கிய தேசியக் கட்­சியின் தகு­தியை அடிப்­ப­டை­யாகக் கொண்டே விகி­தா­சாரப் பிர­தி­நி­தித்­துவத் தேர்­தல்­ மு­றையை அறி­மு­கப்­ப­டுத்­த­வேண்­டு­மென்ற சிந்­தனை ஜெய­வர்­த­ன­வுக்குப் பிறந்­தி­ருக்­க­வேண்டும். அந்தத் தேர்தல் முறையின் கீழ் எந்­தக்­கட்­சி­யுமே பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையைப் பெற­மு­டி­யாது என்றும் எப்­போ­துமே ஐக்­கிய தேசியக் கட்­சியே பாரா­ளு­மன்­றத்தில் கூடுதல் ஆச­னங்­களைப் பெறக்­கூ­டிய தனிக்­கட்­சி­யாக விளங்கும் என்றும் ஜெய­வர்­தன நம்­பி­யி­ருக்­க­கூடும் ஆனால், இப்­போது பிர­தமர் விக்­கி­ர­ம­சிங்­கவின் தலை­மையின் கீழ் ஐக்­கிய தேசியக் கட்சி அத்­த­கைய செல்­வாக்­குடன் இல்லை என்­பதே உண்­மை­யாகும். கூடு­த­லான வாக்­குப்­ப­லத்தை கொண்ட தனிக்­கட்­சி­யென்று அக்­கட்­சியை இப்­போது கூற­மு­டி­யாது.ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் தலை­மைத்­து­வத்தை விக்­கி­ர­ம­சிங்க 1994 ஆம் ஆண்டு பொறுப்­பேற்றார். 23 வரு­டங்­க­ளாக அவர் தலை­வ­ராக இருக்­கிறார்.அந்தக் கட்­சியின் முன்­னைய தலை­வர்­களில் எவ­ருமே இவரைப் போன்று நீண்­ட­காலம் தலைமைப் பொறுப்பில் இருந்­த­தில்லை என்­கிற அதே­வேளை , இவரின் கீழ் நீண்­ட­காலம் எதிர்க்­கட்­சி­யாக இருந்­ததைப் போன்று வேறு எந்தத் தலை­வரின் காலத்­திலும் இருந்­த­து­மில்லை. இலங்­கையில் நீண்­ட­காலம் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக இருந்த அர­சியல் வாதி­யென்றால் அது விக்­கி­ர­ம­சிங்க தான். முன்­னைய எந்­த­வொரு தலை­வ­ருமே விக்­கி­ர­ம­சிங்க எதிர்­நோக்­க­வேண்­டி­யி­ருந்­ததைப் போன்று உட்­கட்சிக் கிளர்ச்­சியை எதிர்­நோக்­கி­ய­து­மில்லை.

தனது நெருங்­கிய உற­வி­ன­ரான ஜெய­வர்­த­னவைப் போன்றே விக்­கி­ர­ம­சிங்­கவும் சூழ்ச்­சித்­திறன் கொண்­டவர் என்று விமர்­சிக்­கப்­ப­டு­கின்ற அதே­வேளை ‘முன்னாள் பிர­தமர் டட்லி சேன­நா­யக்­க­வு­டனும் ஒப்­பி­டப்­ப­டு­வ­துண்டு. சுதேச உடை­களை அணி­வதன் மூல­மாக தங்­களைத் தேசி­ய­வா­திகள் என்று காட்­சிப்­ப­டுத்­து­வதில் அக்­கறை காட்­டா­த­வர்­க­ளாக சேன­நா­யக்­க­வையும் விக்­கி­ர­ம­சிங்­க­வையும் நோக்க முடியும். இலங்­கையின் இரண்­டா­வது பிர­த­ம­ரான டட்லி தனது அர­சாங்­கத்­துக்கு பெரிய நெருக்­கடி ஏற்­பட்­ட­போது பிர­தமர் பத­வி­யையும் கட்சித் தலை­மைத்­து­வத்­தையும் துறந்து அர­சி­யலில் இருந்தே ஒரு கட்­டத்தில் ஒதுங்­கி­யி­ருந்தார். ஆனால், நெருக்­க­டிகள் தோன்­றி­ய­வே­ளை­களில் உணர்ச்சி வசப்­பட்டுக் கொந்­த­ளிக்­காமல் – பதற்­றப்­ப­டாமல் அமை­தி­யாக இருந்து தனது வியூ­கங்­களை வகுத்துச் செயற்­ப­டு­வதில் ஜெய­வர்­த­னவின் பாணியைப் பின்­பற்­று­ப­வ­ராக விக்­கி­ர­ம­சிங்க விளங்­கு­கிறார்.

ஜெய­வர்­தன ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வ­ராக வரு­வ­தற்கு நீண்­ட­காலம் பொறு­மை­யுடன் காத்­தி­ருக்க வேண்­டி­யி­ருந்­தது. டட்லி சேனா­நா­யக்­கவின் மர­ணத்­தை­ய­டுத்து 1973ஆம் ஆண்டில் தனது 67ஆவது வய­தி­லேயே அவர் கட்­சியின் தலை­வ­ராக வர முடிந்­தது. 71 வய­தி­லேயே அவர் பிர­த­ம­ராக ஆட்சி அதி­கா­ரத்­துக்கு வந்தார். ஆனால், விக்­கி­ர­ம­சிங்­கவைப் பொறுத்­த­வரை 45 வய­தி­லேயே ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வ­ராகக் கூடி­ய­தாக இருந்­தது. காமினி திசா­நா­யக்க, லலித் அத்­துலத் முதலி போன்­ற­வர்கள் பிரே­ம­தா­ச­வுடன் முரண்­பட்­டுக்­கொண்டு கட்­சியில் இருந்து வெளி­யே­றாமல் இருந்­தி­ருந்தால் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் இவ்­வாறு மிக இள­வ­யதில் தலைமைப் பொறுப்­புக்கு வரு­வ­தற்கு வாய்ப்பு இருந்­தி­ருக்­காது. பிரே­ம­தா­சவின் மர­ணத்­தை­ய­டுத்து மீண்டும் காமினி திசா­நா­யக்க ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வ­ரான பிறகு 1994 ஆகஸ்ட்டில் நடை­பெற்ற பாரா­ளு­மன்ற தேர்­தலில் சந்­தி­ரிகா தலை­மை­யி­லான பொது­ஜன முன்­ன­ணி அர­சாங்­கத்தை அமைத்­தது. அப்­போது எதிர்க்­கட்சித் தலைவர் பத­விக்கு காமினி திசா­நா­யக்­க­வுடன் போட்­டி­யிட்ட விக்­கி­ர­ம­சிங்க இரு வாக்­கு­க­ளினால் தோல்­வி­ய­டைந்தார். பிறகு திசா­நா­யக்­கவின் மர­ணத்­துக்குப் பிறகே அவர் கட்­சியின் தலை­வ­ரானார்.

டட்லி சேன­நா­யக்க மூன்று தட­வைகள் பிர­த­ம­ராக இருந்தார். விக்­கி­ர­ம­சிங்க நான்கு தட­வைகள் பிர­த­ம­ரானார். ஆனால், ஒரு வேறு­பாடு. டட்லி காலத்தில் இருந்­ததைப் போலன்றி இவரின் காலத்தில் பிர­தமர் பதவி அதி­கா­ர­மு­டை­ய­தாக இல்லை. . என்­றாலும் இவர் பிர­த­ம­ராக செயற்­ப­டு­கின்­ற­போது அந்தப் பதவி அதி­காரம் கொண்­ட­தான தோற்­றப்­பாட்டை எடுக்­கக்­கூ­டி­ய­தாக விளங்­கு­கி­றது என்­பது உண்­மையே.

ஜே ஆர், பிரேமதாஸ மற்றும் ரணில்

ஜே ஆர், பிரேமதாஸ மற்றும் ரணில்

ஜனா­தி­பதி பிரே­ம­தா­சவின் மர­ணத்­தை­ய­டுத்து அன்று பிர­த­ம­ராக இருந்த டீ.பி.விஜே­துங்க ஜனா­தி­யா­கி­ய­போது விக்­கி­ர­ம­சிங்­க­விடம் முதல் தட­வை­யாக பிர­தமர் பதவி வந்­தது. 1993 மே 7 தொடக்கம் 1994 ஆகஸ்ட் 19 வரை அவர் பிர­த­ம­ராக பதவி வகித்தார். பிறகு ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவின் ஆட்­சிக்­கா­லத்தில் 2001டிசம்­பரில் நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்சி வெற்றி பெற்­ற­தை­ய­டுத்து அர­சாங்­கத்தை அமைத்­த­போது இரண்­டா­வது தட­வை­யாக விக்­கி­ர­ம­சிங்க 2001 டிசம்பர் 9 தொடக்கம் 2004 ஏப்ரல் 6 வரை பிர­த­ம­ராக இருந்தார். அடுத்து 2015 ஜன­வரி ஜனா­தி­பதி தேர்­தலில் மகிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு எதி­ராக எதி­ர­ணியின் பொது­வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கப்­பட்ட மைத்­தி­ரி­பால சிறி­சேன வெற்­றி­பெற்று ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்ற உட­ன­டி­யாக விக்­கி­ர­ம­சிங்க பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­பட்டார். அடுத்து 7 மாதங்­க­ளுக்குப் பிறகு ஆகஸ்ட் 17 நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்சி தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய முன்­னணி 106 ஆச­னங்­களைக் கைப்­பற்­றி­ய­தை­ய­டுத்து ஜனா­தி­பதி சிறி­சேன தலை­மை­யி­லான சுதந்­திரக் கட்­சி­யுடன் சேர்ந்து அமைக்­கப்­பட்ட தேசிய ஐக்­கிய அர­சாங்­கத்தின் பிர­த­ம­ராக மீண்டும் விக்­கி­ர­ம­சிங்க பத­வி­யேற்றார். இலங்­கையின் அர­சியல் வர­லாற்றில் முன்­னென்­று­மில்­லாத வகையில் இரு பிர­தான கட்­சி­களும் சேர்ந்து அமைத்­தி­ருக்கும் இந்த அர­சாங்கம் பல்­வேறு வகை­யான அர­சியல் மாச்­ச­ரி­யங்­க­ளுக்கு மத்­தி­யிலும் இரு வரு­டங்­க­ளாகப் பத­வியில் இருந்­து­வ­ரு­கின்­றது. இதில் நடை­மு­றையில் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் புரிந்­து­ணர்வின் அடிப்­ப­டையில் செயற்­ப­டு­கின்ற இரு அதி­கார மையங்­க­ளாக விளங்­கு­கி­றார்கள். இந்தக் கட்­டத்­தி­லேயே பாரா­ளு­மன்ற உறுப்­பினர் என்ற வகையில் தொடர்ச்­சி­யாக 40 வரு­டங்­களை விக்­கி­ர­ம­சிங்க நிறைவு செய்­தி­ருக்­கிறார்.

எது எவ்­வா­றி­ருந்­தாலும் , நாட்டின் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி பதவி விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு வசப்­ப­டா­த­தா­கவே இருந்து வரு­கி­றது. அவர் முதற்­த­ட­வை­யாக 1999 டிசம்பர் ஜனா­தி­பதி தேர்­த­லில; போட்­டி­யிட்டார். ஜனா­தி­பதி திரு­மதி குமா­ர­துங்க தனது முத­லா­வது பத­விக்­காலம் முடி­வ­டை­வ­தற்கு ஒரு வருடம் முன்­ன­தாக நடத்­திய அத்­தேர்­தலில் அவர் தனக்கு முன்னர் இருந்த மக்கள் செல்­வாக்கை கணி­ச­மா­ன­ள­வுக்கு இழந்­தி­ருந்­தாலும் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் அவரை தோற்­க­டிக்கக் கூடி­ய­தாக இருக்­க­வில்லை. கொழும்பு நகர மண்­டப மைதா­னத்தில் நடை­பெற்ற இறு­திப்­பி­ர­சா­ரக்­கூட்­டத்தில் இடம்­பெற்ற தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தலில் திரு­மதி குமா­ர­துங்க படு­கா­ய­ம­டைந்­ததால் இறுதி நேரத்தில் ஏற்­பட்­டி­ருக்­கக்­கூ­டிய அனு­தாப அலை அவ­ருக்குச் சாத­க­மாக அமைந்­து­விட்­டது.

விக்­கி­ர­ம­சிங்க இரண்­டா­வது தட­வை­யாக 2005 நவம்பர் ஜனா­தி­பதி தேர்­தலில் அன்­றைய பிர­தமர் மகிந்த ராஜபக் ஷவை எதிர்த்துப் போட்­டி­யிட்டார். 2001–2004 கால­கட்­டத்தில் நோர்­வேயின் அனு­ச­ர­ணை­யுடன் விடு­தலை புலிகள் இயக்­கத்­துடன் போர் நிறுத்த உடன்­ப­டிக்­கையைச் செய்­து­கொண்டு விக்­கி­ர­ம­சிங்க நிரு­வாகம் முன்­னெ­டுத்த சமா­தான முயற்­சி­க­ளுக்கு எதி­ரான நிலைப்­பா­டு­களை அடிப்­ப­டை­யாகக் கொண்ட பிர­சா­ரங்­க­ளையே ராஜபக் ஷ முன்­னெ­டுத்­தி­ருந்தார். வாக்­க­ளிப்பு தினத்­தன்று வடக்கில் குறிப்­பாக யாழ்ப்­பாண மாவட்­டத்தில் மக்­களை வாக்­க­ளிக்க விடாமல் விடு­த­லைப்­பு­லிகள் தடுத்த கார­ணத்­தினால், அங்கு 1.2 சத­வீத வாக்­கு­களே பதி­வா­கி­யி­ருந்­தன. யாழ்ப்­பாண மாவட்­டத்தில் இருந்த சுமார் 7 இலட்சம் வாக்­கா­ளர்­களில் அரை­வா­சிப்பேர் வாக்­க­ளித்­தி­ருந்­தாலும் கூட, ராஜபக் ஷ வெற்றி பெற­வ­தற்கு வாய்ப்பு இருந்­தி­ருக்­காது. ஏனென்றால், அவர் 28 ஆயிரம் வாக்­கு­களை குறை­வாகப் பெற்­றி­ருந்தால் வெற்றி பெறு­வ­தற்கு அவ­சி­ய­மான 50 சத­வீ­தத்தை அவரால் எட்­டி­யி­ருக்க முடி­யாது போயி­ருக்கும். ராஜபக் ஷவுக்கு 50.2 சத­வீத வாக்­கு­களும் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு 48.4 சத­வீ­த­வாக்­கு­க­ளும் கிடைத்­தி­ருந்­தன.

தனது தோல்­விக்கு விடு­த­லைப்­பு­லி­களே காரணம் என்று விக்­கி­ர­ம­சிங்க இன்றும் கூட அடிக்­கடி கூறு­வதைக் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது. இவ்­வா­றாக அவர் நிச்­ச­ய­மாக வெற்றி பெறு­வ­தற்­கி­ருந்த வாய்ப்பு தவ­றிப்­போ­னது.அதற்­குப்­பி­றகு ஜனா­தி­பதி ராஜபக் ஷவின் அர­சாங்கம் போரை முழு ­மூச்சாக முன்­னெ­டுத்து விடு­தலை புலி­களை இரா­ணுவ ரீதி­யாகத் தோற்­க­டித்­தது. அதன் கார­ணத்­தினால் தென்­னி­லங்­கையில் சிங்­கள மக்கள் மத்­தியில் பெரும் செல்­வாக்­குக்­கொண்ட அர­சியல் தலை­வ­ராக ராஜபக் ஷ விளங்­கு­கிறார். போர் வெற்­றியின் விளை­வான அந்தச் செல்­வாக்­கிற்கு முன்னால் அவ­ருடன் மீண்டும் ஜனா­தி­பதி தேர்­தலில் தான் போட்­டி­யி­டு­வது புத்­தி­சா­லித்­த­ன­மான காரி­ய­மல்ல என்­பதை உணர்ந்த விக்­கி­ர­ம­சிங்க 2010 ஜன­வரி ஜனா­தி­பதி தேர்­தலில் எதி­ர­ணியின் பொது வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கப்­பட்ட முன்னாள் இரா­ணுவத் தள­பதி ஜெனரல் சரத் பொன்­சே­காவை ஆத­ரித்தார். மீண்டும் ராஜபக் ஷவே பெரும் வெற்றி பெற்றார்.

பொன்­சே­காவின் தோல்வி பற்றி விக்­கி­ர­ம­சிங்க கவ­லைப்­பட்­டி­ருக்க மாட்டார். மீண்டும் ராஜபக் ஷவிடம் தோல்வி காணும் அப­கீர்த்­தி­யி­லி­ருந்து தான் தப்­பித்துக் கொண்­ட­தாக அவர் நிச்­சயம் மகிழ்ச்­சி­ய­டைந்­தி­ருப்பார்.
அதற்­குப்­பி­றகு அர­சி­ய­ல­மைப்­புக்கு திருத்­த­மொன்றைக் கொண்டு வந்து ஒரு ஜனா­தி­ப­திக்கு இருந்த இரு பத­விக்­கால மட்­டுப்­பாட்டை நீக்­கிய ராஜபக் ஷ தனது இரண்­டா­வது பத­விக்­காலம் முடி­வ­டை­வ­தற்கு இரு வரு­டங்கள் முன்­ன­தாக 2015 ஜன­வ­ரியில் ஜனா­தி­பதி தேர்­தலை நடத்­தினார். அந்தத் தேர்­த­லிலும் போட்­டி­யி­டு­வதை தவிர்த்துக் கொண்ட விக்­கி­ர­ம­சிங்க எதி­ர­ணியின் பொது வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கப்­பட்ட மைத்­தி­ரி­பால சிறி­சே­னாவை ஆத­ரிக்கத் தயங்­க­வில்லை. சிறி­சே­னவின் வெற்­றி­யை­ய­டுத்து பிர­த­ம­ராக இருந்­து­வரும் அவர் மீண்டும் ஒரு ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்­கான சாத்­தியம் பற்றி எதுவும் பேசு­கிறார் இல்லை. அவ்­வாறு பேசாமல் இருப்­பது அவ­ருக்கு நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி பத­வியை அடைய வேண்­டு­மென்ற குறிக்கோள் இப்­போது இல்லை என்று அர்த்­தப்­பட்­டு­வி­டாது.

ஐக்­கிய தேசி­யக்­கட்சி ஜனா­தி­பதி ஆட்சி முறை ஒழிப்புக் கோரிக்­கைக்கு ஒரு­போதும் மான­சீ­க­மான ஆத­ரவை வழங்­கி­யது கிடை­யாது. ஜனா­தி­பதி தேர்­தலில் தன்னால் போட்­டி­யிட்டு வெற்றி பெற முடி­யாது என்ற சூழ்­நி­லை­களின் கீழ் எதி­ர­ணியின் பொது வேட்­பா­ளர்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்ட வேளைகளில் தான் ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிப்புக்கு ஆதரவானவராக விக்கிரமசிங்க தன்னைக் காட்டிக்கொண்டு வந்திருக்கிறார். ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்ற முடியாமல் போகுமேயானால் பிரதமர் என்றைக்கும் கவலைப்படப்போவதில்லை. தற்போதுள்ள அரசியல் சூழ்நி.ைலயின் விசித்திரம் என்னவென்றால், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்தே அதற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த சுதந்திரக்கட்சி இன்று அந்த ஆட்சி முறையை உறுதியாக ஆதரித்து நிற்கின்ற கட்சியாக மாறியிருப்பதுதான்.

782807558ranilமைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பிரதான காரணம் ஐக்கிய தேசியக்கட்சியின் வாக்குகளும் சிறுபான்மையின மக்களின் வாக்குகளும்தான். அவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சி வாக்குகளினால் பதவிக்கு வந்த சிறிசேனவை சுதந்திரக்கட்சியின் அரசியல்வாதிகள் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் அவரையே வேட்பாளராக நிறுத்த வேண்டுமென்று கருத்துக்களை வெளியிட்டு கொண்டிருக்கின்ற அதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சி அரசியல்வாதிகள் பிரதமர் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது குறித்து அழுத்தம் திருத்தமாக எதையும் கூறுவதில்லை.

தேர்தலில் வெற்றி பெற்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பதவியேற்ற உடனடியாகவே இனியொரு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று பிரகடனம் செய்த சிறிசேன தன்னை மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வைப்பது குறித்து தனது கட்சியினர் பேசும்போது மறுத்து எதையும் பேசாமல மௌனம் சாதித்து வருகிறார்.

ஆனால் கடந்த வாரம் கொழும்பு பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் பிரதமர் விக்கிரமசிங்கவிடம் 2020 ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் வேட்பாளராக போட்டியிடுவீர்களா என்று கேட்கப்பட்ட போது அவர் பின்வருமாறு பதிலளித்திருந்தார்.

“இந்த விவகாரம் தொடர்பில் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை.. ஜனாதிபதி ஆட்சி முறையை தொடருவதா இல்லையா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. எம்மால் தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் அரசியலமைப்புச் சபையின் வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கை இம்மாத பிற்பகுதியில் வெளியிடப்படும். எமது வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டிய தருணம் இது. நாம் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி உகந்த சூழ்நிலையை உருவாக்க வேண்டியிருக்கிறது.அதைச் செய்யாமல் 2020 தேர்தல் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை.”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *