தலைப்பு செய்திகள்

வங்கம் தந்த பாடம் நான்கு – பாரிய இராணுவ நடவடிக்கைகளுக்குப் பின் பல தசாப்தங்களில் ஒரு நாட்டின் சமூக உளம்

வங்கம் தந்த பாடம் நான்கு – பாரிய இராணுவ நடவடிக்கைகளுக்குப் பின் பல தசாப்தங்களில் ஒரு நாட்டின் சமூக உளம்

மருத்துவர். சி. யமுனாநந்தா

பாகிஸ்தானில் இருந்து வங்காளதேசம் பிரிந்த வரலாறு 1971இல் இந்திய படையெடுப்புடன் நடைபெற்றது. ஆனால் அக்கொடிய யுத்தத்தின் தாக்கம் பங்களாதேசத்தினை இன்னமும் பாதித்த வண்ணமே உள்ளது.

யுத்தத்தின்போது இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர். யுத்தத்தின் பாதிப்பு ஏழை மக்களிடையேயும், சிறுபான்மைக் குழுமங்களுக்கு இடையேயும் அதிகம் ஏற்பட்டது. அதன் தாக்கம் இன்னமும் அவர்களை ஏழ்மையாக வைத்துள்ளது. பல இலட்சக்கணக்கான மக்கள் ஆடைத் தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றனர். பல இலட்சக்கணக்கானவர்களுக்கு முறையான இருப்பிட வசதி இல்லை. மாறாக வங்காளதேச விடுதலையின் போது அதிகாரத்தைப் பெற்றவர்களான அரசியல்வாதிகள், இராணுவ அதிகாரிகள், நிர்வாக அதிகாரிகள், மருத்துவ அதிகாரிகள், நாட்டின் செல்வங்களைச் சமச்சீரில்லாது முடக்கினர். அங்கு பல தடவை இராணுவச் சர்வாதிகாரம் மேலோங்கியது.

ஆட்சி மாற்றத்தின்போது நிர்வாக அதிகாரிகள், மருத்துவ உயர் அதிகாரிகள், அரசியல் வாதிகள், ஊடகங்கள் என்பன பஞ்சோந்திகள் போல் தம்மையும் மாற்றி, ஊழல், ஏமாற்று, பகற்கொள்ளை என்பவற்றையும் புரிந்தனர். இதனால் இராணுவப் பின்னணி உடைய மேல்தட்டு வர்க்கம் உருவாகியது. இவர்களே இராணுவத்திலும், அரசியலிலும், வர்த்தக்கத்திலும், கல்வியிலும் செல்வாக்குச் செலுத்தும் நபர்களாக மாறிவிட்டனர். சமூகத்தில் பாரிய ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன.

வங்கம் தந்த பாடம் என்பது ஈழவிடுதலைப் போராட்டத்திற்கும் ஓர் படிப்பினையாகும். பாரிய இராணுவ நடவடிக்கைகளுக்குப் பின்பான சமூகத்தின் சமூக உளம் எவ்வாறு கையாளப்படும் என்பதற்கு இன்றைய பங்களாதேசின் சமூகநிலை ஓர் உதாரணமாகும்.

அதேபோல் எமது சமூகத்திலும் பாரிய மாற்றம் ஏற்பட்டு வருகின்றது. பங்களாதேசில் உள்ளதுபோல் ஓர் மேல்தட்டு வர்க்கம் எமது நிர்வாகம், அரசியல், ஊடகம், கல்வி, வர்த்தகம் என்பவற்றை ஆக்கிரமித்துவிட்டது. இவர்களிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது. மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களைத் தமது சொந்த முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தும் கூட்டமாக ஒரு சக்தி எமது பிரதேசத்தினுள் ஊடுருவிவிட்டது.

Sri Lankan Tamil civilians arrive to a government-controlled area after fleeing territory controlled by the LTTE separatist rebels in Puthukkudiyirippu...Sri Lankan Tamil civilians arrive to a government-controlled area after fleeing territory controlled by the Liberation Tamil Tigers of Eelam (LTTE) separatist rebels in Puthukkudiyirippu, northeast Sri Lanka, March 26, 2009. Pictures taken March 26, 2009. REUTERS/Stringer (SRI LANKA POLITICS CONFLICT IMAGE OF THE DAY TOP PICTURE)

Sri Lankan Tamil civilians arrive to a government-controlled area after fleeing territory controlled by the LTTE separatist rebels in Puthukkudiyirippu…Sri Lankan Tamil civilians arrive to a government-controlled area after fleeing territory controlled by the Liberation Tamil Tigers of Eelam (LTTE) separatist rebels in Puthukkudiyirippu, northeast Sri Lanka, March 26, 2009. Pictures taken March 26, 2009. REUTERS/Stringer (SRI LANKA POLITICS CONFLICT IMAGE OF THE DAY TOP PICTURE)

இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் அதாவது சொத்துக்களை இழந்தவர்கள், உறவுகளை இழந்தவர்கள், காயமடைந்தவர்கள், மனத்தாக்கத்திற்கு உட்பட்டவர்கள், வாழ்வாதாரங்களை இழந்தவர்கள், மேன்மேலும் கீழ்மட்ட நிலைக்குச் சென்று உள்ளனர். இவர்களிடையே தற்கொலைகள், தற்கொலை முயற்சி, மதுப்பாவனை, குடும்ப வன்முறை என்பன அதிகரித்து உள்ளன. மேலும் பங்களாதேசில் நடைபெற்றதுபோல் இம்மக்களும் ஆடைத்தொழிற்சாலை, பண்ணைத்தொழில், கூலிவேலை என்பன செய்வதற்கு தள்ளப்பட்டுவிட்டனர். மேலும் கடன்சுமைகளும், இவர்களது குடும்பத்தினை மோசமாக வாட்டுகின்றது.

பாரிய இராணுவ அழிவிற்குப் பின்பான சூழலில் மேல்தட்டு மக்கள், தமது செல்வத்தை மேலும் அதிகரித்த வண்ணமும், கீழ்மட்ட மக்கள் வறுமையில் மென்மேலும் வாடுவதனையும் கண்கூடாகக் காண்கின்றோம்.

சமூகத்தில் நல்லவர்களாகக் காணப்படுபவர்களில் நல்லவர்களில் நல்லவர்களும், நல்லவர்களில் கெட்டவர்களும் காணப்படுகின்றனர். கெட்டவர்களாக உள்ளவர்களில் கெட்டவர்களில் கெட்டவர்களும், கெட்டவர்களில் நல்லவர்களும் உள்ளனர். இதனையே அண்மைய பாராளுமன்ற அமர்வுகள் மக்களுக்கு வெளிப்படுத்தி நிற்கின்றன. மேலும் இலங்கை ஜனாதிபதியினால் பாராளுமன்று ஒத்திவைக்கப்பட்டமையானது இராணுவ ஆட்சியின் முறைசாரா அறிவிப்பாகவே கருதப்படல் வேண்டும்.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *