செய்திகள்

திருமறைக் கலாமன்றத்தின் பொங்கல் விழா 2015

cpaயாழ்.திருமறைக் கலாமன்றத்தின் தைப்பொங்கல் விழா இன்று காலை 5.30 மணியளவில் பிரதான விதியில் அமைந்துள்ள மன்ற பணிமனையில் இடம்பெற்றுள்ளது.

தமிழ் மொழியினையும் தமிழர் கலை கலாசார பண்பாட்டு அம்சங்களையும் மேம்படுத்தும் நோக்கோடு கடந்த 50 வருடங்களாக இயங்கிவரும் திருமறைக் கலாமன்றம் வழமைபோன்று இந்த வருடமும் தமது பொங்கல் விழாவினை சிறப்பாக நடத்தியுள்ளனர். கலாசார முறைப்படியான பொங்கல் நிகழ்வினைத் தொடர்ந்து பண்பாட்டுத் திருப்பலி கலைத்ததூது மணிமண்டபத்தில் இடம்பெற்றதுடன் “அமைதிப் பொங்கல்” என்னும் தலைப்பிலான கவியரங்க நிகழ்வும் சிறப்பு நிகழ்ச்சியாக இடமபெற்றுள்ளது. வருடாவருடம் தமது அங்கத்தவர்களுடனும் அவர்களது குடும்பத்தினருடனும் நடைபெறும் இந்த நிகழ்வில் இம்முறை பல கலைஞர்கள் இலக்கியவாதிகள் கலை ஆர்வலர்கள் பலரும் கலந்து சிறப்பித்திருக்கின்றார்கள். சிறப்பாக அருட்தந்தை பாலேந்திரன் அடிகளாரும்  மன்றத்தின் இயக்குனர் பேராசிரியர் மரியசேவியர் அடிகளாரும் இந் நகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.